சாக்சபோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாக்சபோன்

கூம்பிசைக்க‌ருவி அல்லது “சாக்சபோன்” துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் மேற்கத்திய காற்றிசைக் கருவி .

சாக்சபோனின் வரலாறு[தொகு]

பண்டைய இந்தியாவின் கோயில் திருவிழாக்களின்போதும், மன்னர்கள் ஊர்வலம் செல்லும்போதும், 'பூரி' எனும் பெயர்கொண்ட இசைக் கருவி வாசிக்கப்பட்டது. இந்த இசைக் கருவி, பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். பிற்காலத்தில் மேலை நாடுகளில் தோன்றிய டிரம்பட், சாக்சபோன் போன்ற காற்றுக் கருவிகள் இந்த 'பூரி'யை ஒத்திருந்தன.

1840ஆம் ஆண்டில் அடோல்ப் சக்ஸ் என்பவர் இக்கருவியை கண்டுபிடித்ததால், அவரின் பெயரை உள்ளடக்கி சாக்சபோன் என அழைக்கப்படலாயிற்று.

கூம்பிசைக்க‌ருவி / சாக்சபோனின் வடிவமைப்பு[தொகு]

பித்தளை அல்லது ஜெர்மன் வெள்ளியால் செய்யப்படும் சாக்சபோன், ஆங்கில எழுத்தான 'U' வடிவத்தில் அமையப் பெற்றிருக்கும். வாய் வைத்து ஊதும் முனையில் மூங்கில் பட்டை பொருத்தப்பட்டிருக்கும். விரல்துளைகளில் 'அசையும் பொத்தான்கள்' அமைந்திருக்கும். வாயால் ஊதிக்கொண்டு, இந்தப் பொத்தான்களை மூடித் திறந்து இசைப்பர். அப்போது வெளியாகும் ஒலி, உலோக நாதமாக இருக்கும்.

புகழ்பெற்ற கலைஞர்கள்[தொகு]

  • அமெரிக்காவின் சார்லி பார்க்கர் என்பவர், சாக்சபோன் வாசித்து பெரும்புகழ் ஈட்டினார்.
  • இந்தியாவின் கத்ரி கோபால்நாத், கருநாடக இசையை சாக்சபோனில் வாசித்து, புதுமையான நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். கருநாடக இசையில் பயன்படுத்தும் வகையில் சாக்சபோனில் சில மாற்றங்களை இவர் செய்தார்.

உசாத்துணை[தொகு]

  • பக்கம் எண்கள்: 417 & 418, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்சபோன்&oldid=3887580" இலிருந்து மீள்விக்கப்பட்டது