1942
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள் |
| ஆண்டுகள்: | 1939 1940 1941 - 1942 - 1943 1944 1945 |
1942 (MCMXLII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 2 - மணிலா ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
- ஜனவரி 11 - கோலாலம்பூர் ஜப்பானியரினால் கைப்பற்றப்பட்டது.
- ஜனவரி 19 - ஜப்பானியர் பர்மாவினுள் நுழைந்தனர்.
- ஜனவரி 25 - தாய்லாந்து ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் மீது போரை அறிவித்தது.
- பெப்ரவரி 15 - சிங்கப்பூர் யப்பானியரிடம் சரணடைந்தது.
- பெப்ரவரி 19 - 242 ஜப்பானிய போர் விமானங்கள் அவுஸ்திரேலியா டார்வின் நகரைத் தாக்கின.
- ஏப்ரல் 5 - ஜப்பானியக் கடற்படையினர் இலங்கையின் கொழும்பு நகரைத் தாக்கினர். தீவின் தென்மேற்கில் இரண்டு பிரித்தானியக் கப்பல்கள் (HMS Cornwall, HMS Dorsetshire) மூழ்கடிக்கப்பட்டன.
- ஏப்ரல் 9 - ஜப்பானியக் கடற்படையினர் இலங்கையின் திருகோணமலை நகரைத் தாக்கினர். பிரித்தானியக் கப்பல் (HMS Hermes), அவுஸ்திரேலியக் கப்பல் (HMAS Vampire) கிழக்குக் கரையில் மூழ்கடிக்கப்பட்டன.
- மே 5 - பிரித்தானியப் படையினர் மடகஸ்காரைத் தாக்கினர்.
- ஆகஸ்ட் 9 - மகாத்மா காந்தி பம்பாயில் கைது செய்யப்பட்டார்.
- அக்டோபர் 16 - பம்பாயில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- ஏப்ரல் 28 - உ. வே. சாமிநாதையர், தமிழறிஞர் (பி. 1855)
நோபல் பரிசுகள் [தொகு]
- வழங்கப்படவில்லை