யுகோசுலாவியா

ஆள்கூறுகள்: 44°49′N 20°27′E / 44.817°N 20.450°E / 44.817; 20.450
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுகோசுலாவியா
Yugoslavia
Jugoslavija
Југославија
1918–1992
1941–1945: அச்சு நாடுகளின் ஆக்கிரமிப்பு
கொடி of யுகோசுலாவியா
மேலே: கொடி (1918–41)
கீழே: கொடி (1946–92)
மேலே: சின்னம்
(1918–41)
கீழே: சின்னம்
(1963–92)]]
நாட்டுப்பண்: 
(1919–1941), "ஏய், சிலாவுகள்" (1945–1992)
போர்க்காலத்திலும் பனிப்போர் (bottom) காலத்திலும் யுகோசுலாவியா
போர்க்காலத்திலும் பனிப்போர் (bottom) காலத்திலும் யுகோசுலாவியா
தலைநகரம்பெல்கிறேட்
44°49′N 20°27′E / 44.817°N 20.450°E / 44.817; 20.450
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)செர்பிய-குரோவாசிய-சுலோவீனிய மொழிகள் (1944 இற்கு முன்)
செருபோகுரோவாசிய மொழி (1944 முதல்)
மக்கள்யுகோசுலாவ்
அரசாங்கம்மரபுவழி முடியாட்சி
(1918–1941)
கூட்டாட்சிக் குடியரசு
(1945–1992)
தகவல்கள்
வரலாறு 
• அமைப்பு
1 திசம்பர் 1918
6 ஏப்ரல் 1941
24 அக்டோபர் 1945
• முடியாட்சி ஒழிப்பு
29 நவம்பர் 1945
• கலைப்பு
27 ஏப்ரல் 1992
மக்கள் தொகை
• 1955
17,522,438[1]
• 1965
19,489,605[2]
• 1975
21,441,297[3]
• 1985
23,121,383[4]
• 1991
23,532,279[5]
நாணயம்யுகோசுலாவ் தினார்
அழைப்புக்குறி38
இணையக் குறி.yu
முந்தையது
பின்னையது
செர்பியா
மொண்டெனேகுரோ
சுலோவீன், குரோவாத்சு, செர்பிய அரசு
ஆசுத்திரியா-அங்கேரி
பியூமி
குரோவாசியா
சுலோவீனியா
மக்கெதோனியா
பொசுனியா எர்செகோவினா
யுகோசுலாவிய கூட்டாட்சிக் குடியரசு

யுகோசுலாவியா (Yugoslavia) என்பது தென்கிழக்கு, நடு ஐரோப்பா பகுதியில் 1918 முதல் 1992 வரை இருந்த ஒரு நாடு ஆகும்.

இது 1918 ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரைத் தொடர்ந்து, "செர்பிய, குரோவாசிய, சிலோவீனிய இராச்சியம்" என்ற பெயரில், செர்பியா இராச்சியம், (முன்னாள் ஆத்திரியா-அங்கேரியில் இருந்து உருவான) தற்காலிக மாநிலமான சுலோவீனிய, குரோவாசிய, செர்பியா பிரதேசங்களில் இருந்து உருவாக்கப்பட்டது.[6] உதுமானியப் பேரரசு, ஆத்திரியா-அங்கேரி ஆகியவற்றின் கீழ் பல நூற்றாண்டுகளாக இருந்த வெளிநாட்டு ஆட்சியைத் தொடர்ந்து தெற்கு சிலாவிக் மக்களின் முதல் ஒன்றியத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அமைத்தது. செர்பியாவின் முதலாம் பீட்டர் மன்னர் அதன் முதல் இறையாண்மை கொண்ட தலைவர் ஆவார். 1922 சூலை 13 அன்று பாரிசில் நடந்த தூதர்கள் மாநாட்டில் இந்த இராச்சியம் பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றது.[7] நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் யுகோசுலாவிய இராச்சியம் என 1929 அக்டோபர் 3 இல் மாற்றப்பட்டது.

1941 ஏப்ரல் 6 அன்று அச்சு நாடுகளினால் இந்நாடு படையெடுக்கப்பட்டது. 1943-இல், ஒரு "யுகோசுலாவிய சனநாயகக் கூட்டாட்சி" அரசு சார்பு எதிர்ப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது. 1944-ஆம் ஆண்டில், பின்னர் நாடுகடத்தப்பட்ட இரண்டாம் பீட்டர் மன்னர், அதை முறையான அரசாங்கமாக அங்கீகரித்தார். நவம்பர் 1945 இல் ஒரு கம்யூனிச அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முடியாட்சி ஒழிக்கப்பட்டதை அடுத்து, அந்நாடு "யுகோசுலாவியக் கூட்டாட்சி மக்கள் குடியரசு" என மறுபெயரிடப்பட்டது. இது இத்தாலியிடமிருந்து இசுத்திரியா, ரிசேக்கா, சாதர் பிரதேசங்களைக் கைப்பற்றியது. சார்பாளர்களின் தலைவர் யோசிப் டீட்டோ 1944 முதல் பிரதமராகவும் பின்னர் 1980 இல் அவர் இறக்கும் வரை அரசுத்தலைவராகவும் நாட்டை ஆட்சி செய்தார். 1963-இல், நாடு கடைசித் தடவையாக "யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு" என மறுபெயரிடப்பட்டது.

சோசலிசக் கூட்டாசிக் குடியரசை உருவாக்கிய ஆறு தொகுதி குடியரசுகள் பொசுனியா எர்செகோவினா, குரோவாசியா, மக்கெதோனியா, மொண்டெனேகுரோ, செர்பியா, சுலோவீனியா ஆகிய சோசலிசக் குடியரசுகளாகும். செர்பிய சோசலிசக் குடியரசு கொசோவோ, வொய்வொதீனா ஆகிய இரண்டு சோசலிசத் தன்னாட்சி மாகாணங்களைக் கொண்டிருந்தது, அவை 1974-இற்குப் பிறகு கூட்டமைப்பின் மற்ற உறுப்பினர்களுக்கு சமமாக இருந்தன.[8][9] 1980களில் பொருளாதார, அரசியல் நெருக்கடி, தேசியவாத, இன மோதல்களின் எழுச்சிக்குப் பிறகு, யுகோசுலாவியா அதன் குடியரசுகளின் எல்லைகளில் முதலில் ஐந்து நாடுகளாக உடைந்து, யுகோசுலாவியப் போர்களுக்கு வழிவகுத்தது. 1993 முதல் 2017 வரை, முன்னாள் யுகோசுலாவியாவிற்கான பன்னாட்டுக் குற்றவியல் தீர்ப்பாயம், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் அந்தப் போர்களின் போது செய்யப்பட்ட பிற குற்றங்களுக்காக முன்னாள் யுகோசுலாவிய அரசியல், இராணுவத் தலைவர்களை விசாரணை செய்தது.

இவ்வாறு பிரிந்த பிறகு, மொண்டெனேகுரோ, செர்பியக் குடியரசுகள் யுகோசுலாவியக் கூட்டாட்சிக் குடியரசு என்ற பெயரில் (2003 முதல் 2006 வரை செர்பியாவும் மொண்டெனேகுரோவும் என அறியப்பட்டது) உருவாக்கின. இந்த மாநிலம் யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசுக்கு ஒரே சட்டப்பூர்வ வாரிசு என்ற நிலையை அடைய விரும்பியது, ஆனால் அந்தக் கோரிக்கைகளை மற்ற முன்னாள் குடியரசுகள் எதிர்த்தன. இறுதியில், அது பகிரப்பட்ட வாரிசு[10] என்ற கருத்தை ஏற்றுக்கொண்டு, 2003-இல் அதன் அதிகாரப்பூர்வ பெயர் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் என மாற்றப்பட்டது. 2006-இல் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் சுதந்திர நாடுகளாக மாறியபோது இந்த மாநிலம் கலைக்கப்பட்டது. கொசோவோ 2008 இல் அதன் விடுதலையை அறிவித்தது.

யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு[தொகு]

1945 நவம்பர் 11 இல், கம்யூனிஸ்டுகள் தலைமையிலான மக்கள் முன்னணி மட்டுமே போட்டியிட்டு, அனைத்து 354 தொகுதிகளையும் கைப்பற்றியது. நவம்பர் 29 அன்று, நாடுகடத்தப்பட்ட நிலையில், இரண்டாம் பீட்டர் மன்னர் யுகோசுலாவியாவின் அரசியலமைப்புச் சபையால் பதவி நீக்கம் செய்யப்பட்டார், யுகோசுலாவியாவின் கூட்டாட்சி மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டது.[11] ஆனால், அவர் பதவி விலக மறுத்துவிட்டார். மார்சல் டீட்டோ நாட்டை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், அனைத்து எதிர்ப்பாளர்களும் அகற்றப்பட்டனர்.[12]

1946 சனவரி 31 இல், சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பைப் பின்பற்றி யுகோசுலாவியாவின் கூட்டாட்சி மக்கள் குடியரசின் புதிய அரசியலமைப்பு, செர்பியாவின் ஒரு பகுதியாக இருந்த ஆறு குடியரசுகள், ஒரு தன்னாட்சி மாகாணம், ஒரு தன்னாட்சி மாவட்டம் ஆகியவற்றை நிறுவியது. கூட்டாட்சியின் தலைநகரம் பெல்கிரேட். இந்தக் கொள்கையானது கம்யூனிஸ்டுக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு வலுவான மத்திய அரசையும், பல தேசிய இனங்களை அங்கீகரிப்பதிலும் கவனம் செலுத்தியது.[12] குடியரசுகளின் கொடிகள் சிவப்புக் கொடி அல்லது சிலாவிக் மூவர்ணத்தின் பதிப்புகளைப் பயன்படுத்தின, மையத்தில் அல்லது மண்டலத்தில் ஒரு சிவப்பு நட்சத்திரம் இருந்தது.

பெயர் தலைநகரம் கொடி சின்னம் அமைவிடம்
பொசுனியா எர்செகோவினா
சோசலிசக் குடியரசு
சாரயேவோ
குரோவாசிய
சோசலிசக் குடியரசு
சாகிரேப்
மக்கெதோனிய
சோசலிசக் குடியரசு
ஸ்கோப்ஜே
மொண்டினேகுரோ
சோசலிசக் குடியரசு
பத்கரீத்சா
செர்பிய
சோசலிசக் குடியரசு
கொசோவோ
வொய்வொதீனா
பெல்கிறேட்
பிரிஸ்டினா
நோவி சாத்
சுலோவீனிய
சோசலிசக் குடியரசு
லியுப்லியானா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical yearbook of Yugoslavia, 1955" (PDF). publikacije.stat.gov.rs. Federal People's Republic of Yugoslavia Federal Statistical Office.
  2. "Statistical yearbook of Yugoslavia, 1965" (PDF). publikacije.stat.gov.rs. Federal People's Republic of Yugoslavia Federal Statistical Office.
  3. "Statistical yearbook of Yugoslavia, 1975" (PDF). publikacije.stat.gov.rs. Federal People's Republic of Yugoslavia Federal Statistical Office.
  4. "Statistical yearbook of Yugoslavia, 1985" (PDF). publikacije.stat.gov.rs. Federal People's Republic of Yugoslavia Federal Statistical Office.
  5. "Statistical yearbook of Yugoslavia, 1991" (PDF). publikacije.stat.gov.rs. Federal People's Republic of Yugoslavia Federal Statistical Office.
  6. Spencer Tucker. Encyclopedia of World War I: A Political, Social, and Military History. Santa Barbara, California, US: ABC-CLIO, 2005. Pp. 1189.
  7. "orderofdanilo.org". Archived from the original on 16 May 2009.
  8. Huntington, Samuel P. (1996). The clash of civilizations and the remaking of world order. Simon & Schuster. பக். 260. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-684-84441-1. 
  9. "History, bloody history". BBC News. 24 March 1999 இம் மூலத்தில் இருந்து 25 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090125151232/http://news.bbc.co.uk/2/hi/special_report/1998/kosovo/110492.stm. 
  10. "FR Yugoslavia Investment Profile 2001" (PDF). EBRD Country Promotion Programme. p. 3. Archived from the original (PDF) on 28 September 2011.
  11. Jessup, John E. (1989). A Chronology of Conflict and Resolution, 1945–1985. New York: Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-24308-0. 
  12. 12.0 12.1 Arnold and Wiener (2012). Cold War: The Essential Reference Guide. Bloomsbury Academic. பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781610690034. https://books.google.com/books?id=XRd6Y-oiFPAC&pg=PA216. பார்த்த நாள்: 17 October 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யுகோசுலாவியா&oldid=3941145" இலிருந்து மீள்விக்கப்பட்டது