சுலோவேனிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலோவேனிய மொழி என்பது ஒரு தென் சிலாவிய மொழி ஆகும். இது சுலோவேனியா நாட்டின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி பரவலாக பேசப்படுவதும் இங்கு தான். இம்மொழியை உலகளவில் 2.4 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். இம்மொழியை இலத்தீன் எழுத்துகளை கொண்டே எழுதுகின்றனர்.