செப்டம்பர் 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 28 கிரிகோரியன் ஆண்டின் 271வது நாளாகும். நெட்டாண்டுகளில் 272வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 94 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 48 - இகிப்திய மன்னன்தலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான்.
- 935 - புனித வென்செஸ்லாஸ் அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1066 - முதலாம் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
- 1448 - முதலாம் கிறிஸ்டியன் டென்மார்க் மன்னனாக முடிசூடினான்.
- 1687 - கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.
- 1708 - ரஷ்யாவின் முதலாம் பீட்டர் மன்னன் சுவீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
- 1791 – பிரான்ஸ் ஐரோப்பாவில் யூதர்களை அடிமைத்தளையில் இருந்து விடிவித்த முதலாவது நாடானது.
- 1795 - யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றினர்.
- 1867 - டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாகியது.
- 1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.
- 1889 - நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோள் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
- 1895 - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.
- 1928 - அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
- 1939 - நாசி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம் வீழ்ந்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாசிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.
- 1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
- 1958 - பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.
- 1960 – மாலி, செனெகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
- 1961 - டமாஸ்கசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்றியமான ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது
- 1993 - புலோப்பளைச் சமர்: கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட "யாழ்தேவி இராணுவ நடவடிக்கை" விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
- 1994 - பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.
- 1995 - பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர்.
- 2005 - ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
பிறப்புக்கள் [தொகு]
- கிமு 551 - கன்ஃபூசியஸ், சீனாவின் பகுத்தறிவாளர் ( இ. கிமு 479)
- 1852 - ஹென்றி முவாசான், பிரெஞ்சு வேதியியல் அறிஞர் (இ. 1907)
- 1929 - லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி.
- 1947 - ஷேக் ஹசீனா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர்
- 1982 - அபினவ் பிந்திரா, இந்திய ஒலிம்பிக் வீரர்
- 1982 - எமெக்கா ஓகஃபோர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1895 - லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1822)
- 1953 - எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1889)
- 1956 - வில்லியம் போயிங், அமெரிக்க வான்வெளி முன்னோடி (பி. 1881)
- 1970 - கமால் அப்துல் நாசர், எகிப்திய அதிபர் (பி. 1918)
- 1978 - பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர், (பி. 1912)
- 1989 - பேர்டினண்ட் மார்க்கொஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (பி. 1917)
- 1994 - கே. ஏ. தங்கவேலு, தமிழ் நகைச்சுவை நடிகர்
சிறப்பு நாள் [தொகு]
- உலக வெறிநோய் நாள்
- தாய்வான் - ஆசிரியர் நாள் (கன்பூசியஸ் பிறந்த நாள்)
- பசுமை நுகர்வோர் நாள்