ரொறன்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டொரோண்டோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டொராண்டோ நகரம்
Skyline of டொராண்டோ நகரம்
Flag of டொராண்டோ நகரம்
Flag
Official seal of டொராண்டோ நகரம்
Seal
Motto: Diversity Our Strength
Location of டொராண்டோ நகரம்
ஆள்கூறுகள்: 43°40′N 79°25′W / 43.667°N 79.417°W / 43.667; -79.417
நாடு கனடா
மாகாணம் ஒன்டாரியோ
தொடக்கம் மார்ச் 6, 1834
ஒன்றுபடுத்தல் ஜனவரி 1, 1998
அரசாங்க
 • மாநகரத் தலைவர் ராப் ஃபோர்ட்
 • சபை டொராண்டோ மாநகரவை
 • நகர ஆளுனர் ஷர்லி ஹோய்
மக்கள் (2001)
 • நகர் 2.
 • நகர்ப்புறம் 4.
 • பெருநகர் பகுதி 5.
Website www.city.toronto.on.ca
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள டொராண்டோவில் அமைந்துள்ள சி. என். கோபுரம். உலகின் மிக உயர்ந்த தனித்து நிற்கும் அமைப்பு இதுவே.

ரொறன்ரோ (ஆங்கிலம்: Toronto; தமிழக வழக்கம்: டொராண்டோ) கனடாவில் மக்கள் திரளாக வாழும் புகழ் பெற்ற ஒரு நகரம். இது கனடாவின் பொருளியல், வணிக, பண்பாட்டு, கல்வி மையமாகும். இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில், ஐக்கிய அமெரிக்காவின் வடக்கு கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது.

கனடாவின் 2004 ஆம் ஆண்டுப் புள்ளிவிபரங்களின் படி, இங்கே 5,203,686 மக்கள் வாழ்கின்றனர். இம் மக்கள் பன்னாடுகளில் இருந்து வந்த பல இன, மொழி, சமயத்தைச் சேர்ந்தவர்கள். உலகிலேயே வேறு எங்கும் இல்லாத் அளவிற்கு பல்வகை இன, மொழி, சமய, தேசிய வேறுபாடுகளை கொண்ட மக்கள் அமைதியாக, திறந்த மன பண்போடு, ஒற்றுமையாக செழிப்புடன் வாழ்வது இங்கே தான். இவ் வகையில் ரொறன்ரோ (டொராண்டோ) உலகின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.

புவியியல்[தொகு]

ரொறன்ரோ நகரம் சுமார் 630 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடையது. வடக்குத் தெற்காக இதன் அதிகபட்சத் தூரம் 21 கிலோமீட்டர்களும் கிழக்கு மேற்காக அதிக பட்சத் தூரம் 43 கிலோமீட்டர்களுமாகும். இது ஒண்டாரியோ ஏரியின் வடமேற்குக் கரையில் 46 கிலோமீட்டர் நீர்முகத்தைக் கொண்டுள்ளது. ரொறன்ரோ நகரினூடாக ஹம்பர் ஆறு, டொன் ஆறு மற்றும் றோக் ஆறு ஆகிய மூன்று ஆறுகள் பாய்கின்றன.

அரசு[தொகு]

ரொறன்ரோ ஒன்ராறியோ மாகணத்தின் தலைநகரம் ஆகும். மத்திய ரொறன்ரோவில் தான் ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்றம் (மாநிலமன்றம்) அமைந்துள்ளது. ரொறன்ரோ மக்களுக்காக 22 உறுப்பினர்கள் ஒன்ராறியோ மகாண நாடாளுமன்றத்திலும் (மாநிலமன்றத்திலும்), மற்றுமொரு 22 உறுப்பினர்கள் மத்திய அரசின் நாடாளுமன்றத்திலும் பிரதிநிதியாக இருந்து பணி புரிகிறார்கள்.

ரொறன்ரோ நகராட்சி மக்களால் தேர்வு செய்யப்பட்ட 44 நகர மன்ற உறுப்பினர்களையும், ரொறன்ரோ நகர பிதாவையும் கொண்ட நகர மன்றத்தினால் நிர்வாகிக்கப்படுகின்றது. நகர மன்றத்து தேர்தல் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது. நகராட்சி போக்குவரத்து, கழிவுப்பொருள் அகற்றல், சமூக சேவைகள், பூங்கா பராமரிப்பு, சுற்றுச் சூழல், சுற்றுலாத்துறை போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது.

பொருளாதாரம்[தொகு]

ரொறன்ரோ, உலக வர்த்தக மற்றும் நிதியியல் மையங்களிலொன்றாக விளங்குகின்றது. ரொறன்ரோ பங்குச் சந்தையானது சந்தை முதலீட்டின் அடிப்படையில் உலகின் ஏழாவது பெரிய பங்குச்சந்தையாக விளங்குகின்றது. இந்நகரம் ஊடகம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் திரைப்படத்துறைகளின் முக்கிய நிலையமாகத் திகழ்கின்றது.

கல்வி[தொகு]

இந்நகரத்தில் மூன்று பல்கலைக்கழகங்களும், நான்கு தொழிற் கல்லூரிகளும், ஒரு பெரிய ஓவியக் கல்லூரியும், பல தனியார் கல்வி நிறுவனங்களும், ஆய்வு கூடங்களும் மற்றும் பல சிறந்த நூலகங்களும் அமைந்துள்ளன.

ரொறன்ரோ பல்கலைக்கழகம் கனடாவின் முதன்மைப் பல்கலைக்கழகமும், உலகில் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றும் ஆகும். இதன் மூன்று வளாகங்களிலும் 70,000 மாணவர்கள் கற்கின்றார்கள். யோர்க் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ இரு மொழி பல்கலைக்கழகமாகும். றயர்சன் பல்கலைக்கழகம் நல்ல பொறியியல், பத்திரிகை துறைகளை கொண்டுள்ளது.

ரொறன்ரோவின் சிறப்பு இடங்கள்[தொகு]

ரொறன்ரோவில் தமிழர்கள்[தொகு]

ரொறன்ரோவில் 200 000-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக பொதுவாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் 1983க்குப் பின்னர் இலங்கை இனக்கலவரங்கள் காரணமாக இங்கு அகதிகளாக வந்து குடியுரிமை பெற்ற ஈழத்தமிழர்கள் ஆவார்கள். பலர் ரொறன்ரோ சமூகத்தின் அடிமட்டத்திலேயே வாழ்க்கையை ஆரம்பித்தாலும், ரொறன்ரோ தரும் கல்வி, தொழில் வசதிகளை பயன்படுத்தி நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றார்கள். ரொறன்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழிலும் கிடைக்கிறது.

வழிபாட்டு இடங்கள்[தொகு]

  • சிரீ மீனாட்சி அம்மன் கோவில்

நகரத்தோற்றம்[தொகு]

சி. என். கோபுரத்திலிருந்து ரொறன்ரோ நகரின் 360பாகை தோற்றம்.

சகோதர நகரங்கள்[தொகு]

இரட்டை நகரங்கள்[1]
நட்பு நகரங்கள்[1]

வெளி இணைப்புகள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Toronto's International Alliance Program". Toronto.ca (October 23, 2000). பார்த்த நாள் 2010-10-17.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரொறன்ரோ&oldid=1667827" இருந்து மீள்விக்கப்பட்டது