கன்பூசியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கன்பூசியஸ்
சீன மெய்யியல்
பண்டைக்கால மெய்யியல்
Confucius 02.png
孔夫子
முழுப் பெயர் 孔丘 கொங் கியு
பிறப்பு செப்டெம்பர் 28, கிமு 551
குபு, சீனா
இறப்பு கிமு 479
குபு, சீனா
சிந்தனை
மரபு(கள்)
கான்பூசியசியத்தின் நிறுவனர்
முக்கிய
ஆர்வங்கள்
நன்னெறி மெய்யியல், சமூக மெய்யியல், ஒழுக்கம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
கான்பூசியசியம்

கான்பூசியஸ் ((Chinese: பின்யின்: Kǒng zǐWade-Giles: K'ung-tzu, or Chinese: 孔夫子; பின்யின்: Kǒng Fūzǐ; Wade-Giles: K'ung-fu-tzu), நேரடி அர்த்தமாக " காங் குரு",[1]செப்டெம்பர் 28, கிமு 551 - கிமு 479)[2][3] ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய உபதேசங்களும், மெய்யியலும் சீனா, கொரியா ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி, நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் ஹான் மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220), இச் சிந்தனைகள், தாவோயிசம் முதலிய பிற கொள்கைகளிலும் அதிக முதன்மை பெற்றிருந்தன. கான்பூசியசின் சிந்தனைகள் கான்பூசியசியம் என்னும் ஒரு மெய்யியல் முறைமையாக வளர்ச்சி பெற்றது.

அவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித மற்றும் அரசாங்க நன்னெறி, சமூக ஒழுக்கம், நடுநிலை மற்றும் குறிக்கோள்களைப் பற்றியதாக இருந்தன. இவ்விழுமியங்கள் ஹான் வம்ச[4][5][6] (206 BC – 220 AD)கால சீனாவில் ஏனைய சித்தாதங்களான சட்டக்கோட்பாடுகள், அல்லது டாவோ மதத்தைவிட(道家) பெருமதிப்பு பெற்றதாக இருந்தன. கன்ஃபூஷியஸின் சிந்தனைகள் கன்ஃபூஷியஸ் மதம் (儒家) என்று முழு வளர்ச்சியடையும் அளவுக்கு தத்துவ ஆழம் கொண்டதாக அமைந்தது. இத்தாலியர்களின் Jesuitடினால் இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேட்டியோ ரிக்கி, முதன்முதலில் 'கன்ஃபூஷியஸ்' என்று இதை லத்தீனாக்கம் செய்து அறிமுகப்படுத்தினார்.


[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கன்பூசியஸ்&oldid=1097306" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்