ஜமால் அப்துல் நாசிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜமால் அப்துந் நாசிர்
جمال عبد الناصر
2வது எகிப்திய ஜனாதிபதி
பதவியில்
23 சூன் 1956 – 28 செப்டம்பர் 1970
பிரதமர்
பட்டியலைக் காண்க
    • அவரே (1954–1962)
    • அலி சாப்ரி (1962–1965)
    • சக்காரியா மொயித்தீன் (1965–1966)
    • முகமது செத்கீ சுலேமான் (1966–1967)
    • அவரே (1967–1970)
Vice President
பட்டியலைக் காண்க
    • சப்ரி அல்-அசலி (1958)
    • அக்ரம் அல்-ஹௌரானி (1958–1960)
    • அப்தல் லதீப் பாக்தாதி (1958–1964)
    • அப்தல் ஹகீம் அமர் (1958–1965)
    • நூருத்தீன் குஹாலா (1960–1961)
    • அப்தல் ஹமீத் அல்-சர்ராஜ் (1961)
    • கமால் எல்-தீன் உசேன் (1961–1964)
    • சக்காரியா மொயித்தீன் (1961–1964, 1965–1968)
    • உசேன் எல்-ஷஃபேயி (1961–1965, 1968–1970)
    • அன்வர் சதாத் (1964, 1969–1970)
    • அசன் இபுராகீம் (1964–1966)
    • அலி சாப்ரி (1965–1968)
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்அன்வர் சதாத்
எகிப்திய பிரதம மந்திரி
பதவியில்
19 சூன் 1967 – 28 செப்டம்பர் 1970
குடியரசுத் தலைவர்அவரே
முன்னையவர்முகமது செத்கீ சுலேமான்
பின்னவர்மஹ்மூத் ஃபௌசி
பதவியில்
18 ஏப்ரல் 1954 – 29 செப்டம்பர் 1962
குடியரசுத் தலைவர்முகமது நஜீப்
தானேதான்
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்அலி சாப்ரி
பதவியில்
25 பிப்ரவரி 1954 – 8 மார்ச் 1954
குடியரசுத் தலைவர்முகமது நஜீப்
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்முகமது நஜீப்
எகிப்தியத் துணைப் பிரதமர்
பதவியில்
8 மார்ச் 1954 – 18 ஏப்ரல் 1954
பிரதமர்முகமது நஜீப்
முன்னையவர்ஜமால் சலேம்
பின்னவர்ஜமால் சலேம்
பதவியில்
18 சூன் 1953 – 25 பிப்ரவரி 1954
பிரதமர்முகமது நஜீப்
முன்னையவர்சுலேமான் ஹஃபீசு
பின்னவர்ஜமால் சலேம்
உள்துறை அமைச்சர்
பதவியில்
18 சூன் 1953 – 25 பிப்ரவரி 1954
பிரதமர்முகமது நஜீப்
முன்னையவர்சுலேமான் ஹஃபீசு
பின்னவர்சக்காரியா மொயித்தீன்
புரட்சி ஆணை மன்றத் அவை தலைவர்
பதவியில்
14 நவம்பர் 1954 – 23 சூன் 1956
முன்னையவர்முகமது நஜீப்
பின்னவர்பதவி அகற்றப்பட்டது
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர்
பதவியில்
5 அக்டோபர் 1964 – 8 செப்டம்பர் 1970
முன்னையவர்ஜோசிப் புரோஸ் டீடோ
பின்னவர்கென்னத் கவுண்டா
ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் அவைத்தலைவர்
பதவியில்
17 சூலை 1964 – 21 அக்டோபர் 1965
முன்னையவர்முதலாம் ஹைலி செலாசி
பின்னவர்குவாமே நிக்ரூமா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜமால் அப்துந் நாசிர் உஸேன்

(1918-01-15)15 சனவரி 1918
அலெக்சாந்திரியா, எகிப்து
இறப்பு28 செப்டம்பர் 1970(1970-09-28) (அகவை 52)
கெய்ரோ, ஐக்கிய அரபு குடியரசு
தேசியம்எகிப்தியர்
அரசியல் கட்சிஅரபு சோசியலிச ஐக்கியம்
துணைவர்தகியா காசெம்
பிள்ளைகள்ஹோதா
மோனா
காலித்
அப்துல் ஹமீத்
அப்துல் ஹக்கீம்
தொழில்இராணுவ அதிகாரி
கையெழுத்து
Military service
பற்றிணைப்புஎகிப்து
கிளை/சேவைஎகிப்திய இராணுவம்
சேவை ஆண்டுகள்1938–1952
தரம் கர்னல்
போர்கள்/யுத்தங்கள்1948 அரபு - இசுரேல் போர்

ஜமால் அப்துந் நாசிர் உசைன் (அரபு மொழி: جمال عبد الناصر حسين‎) என்னும் முழுப்பெயர் கொண்ட ஜமால் அப்துந் நாசிர் (Gamal Abdel Nasser, சனவரி 15, 1918 - செப்டெம்பர் 28, 1970)[1] எகிப்தின் இரண்டாவது சனாதிபதியாக இருந்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டில் இறக்கும்வரை அவர் இப்பதவியை வகித்தார். எகிப்து நாட்டுப் படையில் கேணல் தரத்தில் இருந்த அப்துந் நாசிர், பின்னர் நாட்டின் முதலாவது சனாதிபதியாக இருந்த முகம்மது நஜீப்புடன் இணைந்து, 1952 ஆம் ஆண்டில் இடம்பெற்ற எகிப்தியப் புரட்சிக்குத் தலைமை தாங்கினார். இப் புரட்சி மூலம் எகிப்து, சூடான் முடியாட்சி கவிழ்க்கப்பட்டது. இதன் மூலம் எகிப்தில் நவீனமயமாக்கத்துக்கான பாதை திறந்துவிடப்பட்டது. குறுகிய காலமே நிலைத்திருந்த எகிப்து-சிரியா இணைப்பு உட்படப் பேரரேபியத் தேசியவாதம் பெருமளவு வளர்ச்சி பெற்றதுடன் எகிப்தில் சோசலிசச் சீர்திருத்தங்களும் இடம்பெற்றன.

நாசிர் தற்கால அராபிய வரலாற்றிலும், 20 ஆம் நூற்றாண்டில் அரசியலிலும் ஒரு முக்கியமான தலைவராகக் கருதப்பட்டார். இவரது தலைமையின் கீழ் எகிப்து சூயெசுக் கால்வாயை நாட்டுடைமை ஆக்கியதுடன், அரபு உலகிலும், ஆப்பிரிக்காவிலும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பையும் செய்தது. சூயெசு நெருக்கடி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது அரபு உலகம் முழுவதிலும் நாசிர் ஒரு வீரராகக் கருதப்பட்டார். அனைத்துலக அணிசேரா இயக்கத்தைத் தொடங்குவதில் நாசிரின் பங்கு முக்கியமானது. நாசிர், அவரது தேசியவாதக் கொள்கைக்காகவும், நாசிரியம் என அழைக்கப்பட்ட இவரது வகைப் பேரரேபியவாதத்துக்காகவும் பெரிதும் அறியப்பட்டவர். இவரது இக்கொள்கைக்கு 1950 களிலும், 1960 களிலும், அரபு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்தது. இசுரேலுடனான ஆறு நாள் போரில் அரேபியப் படைகள் தோல்வியடைந்தது, அரபுலகின் தலைவர் என்ற இவரது நிலைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Vatikiotis, Panayiotis J. (1978). Nasser and His Generation. London: Croom Helm. பக். 23–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85664-433-7. https://archive.org/details/nasserhisgenerat0000vati. 
  2. Rasler, Karen; Thompson, William R.; Ganguly, Sumit (2013). How Rivalries End. Philadelphia: University of Pennsylvania Press. பக். 38–39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8122-4498-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமால்_அப்துல்_நாசிர்&oldid=3581853" இலிருந்து மீள்விக்கப்பட்டது