நவம்பர் 5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
நவம்பர் 5 கிரிகோரியன் ஆண்டின் 309வது நாளாகும். நெட்டாண்டுகளில் 310வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 56 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1530 - நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.
- 1556 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.
- 1605 - ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
- 1757 - புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.
- 1814 - இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
- 1831 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.
- 1861 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.
- 1862 - மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
- 1895 - தானுந்தின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.
- 1911 - செப்டம்பர் 29 இல் ஓட்டோமான் பேரரசுடன் இத்தாலி போரை அறிவித்த பின்னர் திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1913 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1917 - அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.
- 1935 - மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
- 1940 - பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1945 - நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.
- 1965 - ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- 1967 - லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 - இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.
- 1987 - தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் கொவான் உம்பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
- 1996 - பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.
- 1999 - இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.
- 2006 - 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.
பிறப்புக்கள் [தொகு]
- 1870 - சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
- 1948 - பாப் பார்,அமெரிக்க அரசியல்வாதி
இறப்புகள் [தொகு]
- 1526 - டெல் ஃபெர்ரோ, இத்தாலிய கணிதவியலாளர் (பி. 1465)
- 1879 - ஜேம்ஸ் மாக்ஸ்வெல், ஸ்கொட்லாந்து இயற்பியலாளர் (பி. 1831)
- 1975 - எட்வர்ட் டாட்டம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1909)