பெப்ரவரி 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | பெப்ரவரி 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | ||
| MMXIII | ||||||
பெப்ரவரி 13 கிரிகோரியன் ஆண்டின் 44 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 321 (நெட்டாண்டுகளில் 322) நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1258 - பக்தாத் மங்கோலியரிடம் வீழ்ந்தது.
- 1668 - ஸ்பெயின் போர்த்துக்கலை தனிநாடாக அங்கீகரித்தது.
- 1755 - ஜாவாவின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானகம்" மற்றும் "சுரகர்த்தா சுல்தானகம்" என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- 1880 - எடிசன் விளைவை தொமஸ் எடிசன் அவதானித்தார்.
- 1914 - பொன்னம்பலம் அருணாசலத்திற்கு சேர் பட்டம் பக்கிங்ஹாம் அரண்மனையில் வழங்கப்பட்டது.
- 1934 - சோவியத் நீராவிக்கப்பல் செலியூஷ்கின் ஆர்க்டிக் பெருங்கடலில் மூழ்கியது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரை ஹிட்லரின் நாசிப் படைகளிடம் இருந்து மீட்டன.
- 1960 - பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது.
- 1971 - வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் உதவியுடன் தெற்கு வியட்நாம் லாவோசைத் தாக்கியது.
- 1974 - நோபல் பரிசு பெற்ற அலெக்சாண்டர் சொல்ஷெனிட்சின் சோவியத் ஒன்றியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
- 1975 - நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் தீ பரவியது.
- 1978 - சிட்னியில் ஹில்டன் உணவகத்தின் முன் குண்டு வெடித்ததில் ஒரு காவற்படை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.
- 1984 - கான்ஸ்டன்டீன் செர்னென்கோ சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார்.
- 1985 - கொக்கிளாய் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
- 1990 - இரண்டு ஜெர்மனிகளும் இணைவது குறித்த இரண்டு-கட்டத் திட்டம் அறிவிக்கப்பட்டது.
- 1996 - நேபாள மக்கள் புரட்சி மாவோயிசவாத போராளிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
- 2001 - எல் சல்வடோரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 400 பேர் வரை கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1879 - சரோஜினி நாயுடு, இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை (இ. 1949)
- 1910 - வில்லியம் ஷாக்லி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1989)
- 1920 அ. மருதகாசி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் (இ. 1989)
இறப்புகள் [தொகு]
- 1950 - செய்குத்தம்பி பாவலர், தமிழறிஞர் (பி. 1874)
- 2009 - கிருத்திகா, தமிழக எழுத்தாளர்