ரூப்பையா பண்டா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரூப்பையா பிவெசானி பண்டா Rupiah Bwezani Banda |
|
|
சாம்பியாவின் அதிபர்
|
|
|---|---|
| பதவியில் ஜூன் 29 2008 – செப்டம்பர் 23, 2011 |
|
| முன்னவர் | லெவி முவனவாசா |
| பின்வந்தவர் | மைக்கேல் சாட்டா |
| அரசியல் கட்சி | பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம் |
|
|
|
| பிறப்பு | 13 பெப்ரவரி 1937 குவாண்டா, சிம்பாப்வே |
ரூப்பையா புவெசானி பண்டா (Rupiah Bwezani Banda, பிறப்பு: பெப்ரவரி 13, 1937) சாம்பியாவின் சனாதிபதி. இவர் அக்டோபர் 2006 இல் நாட்டின் உப-சனாதிபதியாக முன்னாள் சனாதிபதி லெவி முவனவாசாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்[1]. முவனவாசா ஜூன் 2008 இல் சுகவீனமுற்றபோது அவரது சனாதிபதி அதிகாரங்களைத் தனதாக்கி[2] பின்னர் முவனாசி இறந்த பின்னர் பதில் அதிபரானார். அக்டோபர் 2008 இல் நிகழ்ந்த சனாதிபதி தேர்தலில் ஆளும் "பலகட்சி மக்களாட்சிக்கான இயக்கம்" என்ற கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று சனாதிபதி ஆனார்[3]. 2011, செப்டபரில் இடம்பெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் சாட்டாவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.