மைக்கேல் சாட்டா
| மைக்கேல் சாட்டா | |
|
சாம்பியாவின் குடியரசுத்தலைவர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு செப்டம்பர் 23 2011 |
|
| உதவி தலைவர் | கை ஸ்காட் |
|---|---|
| முன்னவர் | ரூப்பையா பண்டா |
| அரசியல் கட்சி | நாட்டுப்பற்றுமிக்க முன்னணி |
|
|
|
| பிறப்பு | 1937 (அகவை 75–76) எம்பிகா, வடக்கு ரொடீசியா (தற்போது சாம்பியா) |
| சமயம் | கத்தோலிக்கத் திருச்சபை[மேற்கோள் தேவை] |
மைக்கேல் சிலுஃப்யா சாட்டா (Michael Chilufya Sata, பிறப்பு 1937[1]) செப்டம்பர் 23, 2011 அன்று சாம்பியாவின் ஐந்தாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றவராவார். சாம்பியாவின் முதன்மை அரசியல் கட்சிகளில் ஒன்றான "நாட்டுப்பற்றுமிக்க முன்னணி" (Patriotic Front) தலைவராகவும் விளங்குகிறார். 1990களில் குடியரசுத்தலைவர் பிரெடெரிக் சிலுபாவின் பலகட்சி சனநாயகத்திற்கான இயக்கத்தின் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். 2001ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து விலகி தமது கட்சியான நாட்டுப்பற்றுமிக்க முன்னணியை நிறுவினார். 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சித் தலைவராக அப்போதைய குடியரசுத் தலைவரான லெவி முவனவாசாவிற்குப் பெரும் மாற்றாக "கிங் கோப்ரா" என ஊடகங்களால் விவரிக்கப்பட்டார். இருப்பினும் அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார். முவனவாசாவின் இறப்பிற்குப் பிறகு 2008ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட சாட்டா ரூப்பையா பண்டாவிடம் தோல்வியுற்றார்.
பத்தாண்டுகளாக எதிர்கட்சியில் இருந்தபிறகு தற்போதைய குடியரசுத் தலைவரான பந்தாவை 2011 தேர்தல்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "China's stake in Zambia's election", BBC, 19 September 2011.
வெளியிணைப்புகள் [தொகு]
- Presidency of Zambia (State House) Official Website
- Patriotic Front website
| அரசியல் அலுவலகம் | ||
|---|---|---|
| முன்னர் ரூப்பையா பண்டா |
சாம்பியா குடியரசுத்தலைவர் 2011–இன்றுவரை |
இற்றை வரை |