செப்டம்பர் 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 23 கிரிகோரியன் ஆண்டின் 266வது நாளாகும். நெட்டாண்டுகளில் 267வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 99 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1529 - ஒட்டோமான் பேரரசன் முதலாம் சுலைமான் வியென்னா மீது படையெடுத்தான்.
- 1641 – ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களுடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற கப்பல் மூழ்கியது.
- 1799 - இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.
- 1821 - திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.
- 1846 - நெப்டியூன் கோள் பிரெஞ்சு வானியலாளர் உர்பெயின் ஜோசப் மற்றும் பிரித்தானிய வானியலாளர் ஜோன் அடம்ஸ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1868 - புவெர்ட்டோ ரிக்கோவில் ஸ்பானிய ஆட்சியாளருக்கெதிராக கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1884 - ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1889 - நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
- 1932 - ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவுதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன.
- 1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன.
- 1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.
- 1966 - நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
- 1980 - பாடகர் பொப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
- 1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர்.
- 1986 - இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று நூதன சாலை பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
- 2002 - மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.
- 2004 - எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- கிமு 480 – யூரிபீடிசு, கிரேக்க நாடகாசிரியர் (இ. கிமு 406)
- கிமு 63 – அகஸ்ட்டஸ், ரோமப் பேரரசன் (இ. 14)
- 1215 - குப்லாய் கான், மங்கோலியப் பேரரசன் (இ. 1294)
- 1930 - ரே சார்ல்ஸ், அமெரிக்கப் பாடகர் (இ. 2004)
- 1941 - நவநீதம் பிள்ளை, தென்னாபிரிக்க நீதிபதி
இறப்புகள் [தொகு]
- 1951 - பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
- 1973 - பாப்லோ நெருடா, சிலி நாட்டில் பிறந்த கலைஞர் (பி. 1904
- 2002 - வேணன் கொரெயா, இலங்கை ஒலிபரப்பாளர், (பி. 1927)
சிறப்பு நாள் [தொகு]
- சவுதி அரேபியா - தேசிய நாள் (1932)