ஆகஸ்டு 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகத்து 28 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 28 கிரிகோரியன் ஆண்டின் 240வது நாளாகும். நெட்டாண்டுகளில் 241வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 125 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1349 - கொள்ளை நோயைக் காரணம் காட்டி ஜெர்மனியின் மாயின்ஸ் நகரில் 6,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1511 - போர்த்துக்கீசர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர்.
- 1521 - ஒட்டோமான் துருக்கியர் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினர்.
- 1619 - ஜெர்மனியின் இரண்டாம் பேர்டினண்ட் புனித ரோமப் பேரரசன் ஆனான்.
- 1789 - வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.
- 1844 - பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
- 1845 - சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.
- 1849 - ஒரு மாதகால முற்றுகையின் பின்னர் வெனிஸ் நகரம் ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது.
- 1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைப் பிடித்தது.
- 1879 - சூளுக்களின் கடைசி மன்னன் செட்ஸ்வாயோ பிரித்தானியர்களினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.
- 1898 - காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.
- 1913 - நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.
- 1916 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனி, ருமேனியா மீதும், இத்தாலி ஜெர்மனி மீதும் போரை அறிவித்தன.
- 1922 - ஜப்பான் சைபீரியாவில் இருந்து தனது படைகளை விலக்கச் சம்மதித்தது.
- 1924 - சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஜோர்ஜியர்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
- 1931 - பிரான்சும், சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
- 1943 - நாசி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக டென்மார்க்கில் பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
- 1963 - மார்ட்டின் லூதர் கிங், 200,000 பேருடன் ‘என் கனவு யாதெனில்...’ என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
- 1964 - பிலடெல்பியாவில் இனக்கலவரம் ஆரம்பித்தது.
- 1979 - ஐ.ஆர்.ஏயின் குண்டு ஒன்று பிரசல்சில் வெடித்தது.
- 1988 - ஜெர்மனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
- 1991 - சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.
- 1991 - மிக்கைல் கொர்பச்சோவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பதவியில் இருந்து விலகினார்.
- 1996 - வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா மணமுறிவு ஏற்பட்டது.
- 2006 - திருகோணமலை, சம்பூரில் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 20 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
- 2006 - இலங்கையில் பத்தாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்தன.
பிறப்புக்கள் [தொகு]
- 1749 - ஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா, ஜெர்மனிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1832)
- 1828 - லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (இ. 1910)
- 1855 - ஸ்ரீ நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (இ. 1928)
- 1863 - அய்யன்காளி, தலித் தலைவர் (இ. 1914)
- 1957 - ஈவோ யொசிப்போவிச், குரோவாசியா அரசியல்வாதி
- 1965 - ஷானியா ட்வைன், கனடிய நாட்டுப்புற பாப் பாடகர்
- 1983 - லசித் மாலிங்க, இலங்கைத் துடுப்பாட்ட அணியின் அதிவேகப் பந்து வீச்சாளர்
இறப்புகள் [தொகு]
- 430 - புனித அகஸ்டீன், மெய்யியலாளர் (பி. 354)
- 1891 - ராபர்ட் கால்டுவெல், பிரித்தானியத் தமிழறிஞர் (பி. 1814)
- 1973 - முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)
சிறப்பு நாள் [தொகு]
- புனித அகஸ்டீன் கிருத்தவத் திருவிழா