ஆகஸ்டு 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகத்து 26 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 26 கிரிகோரியன் ஆண்டின் 238வது நாளாகும். நெட்டாண்டுகளில் 239வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 127 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1768 - கப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான்.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது.
- 1914 - முதலாம் உலகப் போர்: ஜேர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன.
- 1920 - ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1942 - உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர்.
- 1957 - கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
- 1972 - 22வது ஒலிம்பிக் போட்டிகள் ஜேர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது.
- 1978 - முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார்.
- 1978 - முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார்.
- 1993 - யாழ்ப்பாணம், கிளாலியில் இரண்டு இலங்கைக் கடற்படைப் படகுகள் கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.
- 1997 - அல்ஜீரியாவில் 60க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 - திருகோணமலை மூதூர் கிழக்கில் சிறிலங்கா விமானங்கள் நடத்திய குண்டுவீச்சில் பொதுமக்கள் இருவர் பலியாகினர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1880 - கியோம் அப்போலினேர், பிரெஞ்சு எழுத்தாளர் (இ. 1918)
- 1883 - திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953)
- 1910 - அன்னை தெரேசா, அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997)
- 1927 - அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் (இ. 1989)
- 1933 - வி. தெட்சணாமூர்த்தி, ஈழத்து தவில் கலைஞர் (இ. 1978)
- 1934 - ஏ. ஜே. கனகரட்னா, ஈழத்து இலக்கியவாதி (இ. 2006)
- 1952 - பொன். சிவகுமாரன், ஈழ விடுதலைப் போராட்டத்தில் சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது போராளி (இ. 1974)
- 1956 - மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி