செப்டம்பர் 19
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 262வது நாளாகும். நெட்டாண்டுகளில் 263வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 103 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1356 - இங்கிலாந்து "போல்ட்டியேர்" என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரான்சை வென்றது.
- 1658 - யாழ்ப்பாணத்தில் ரோமன் கத்தோலிக்க மத குருமாரை மறைத்து வைத்திருப்பது மரணதண்டனைக்குரிய குற்றமாக டச்சு அரசால் அறிவிக்கப்பட்டது.
- 1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் மிசிசிப்பியில் இடம்பெற்ற போரில் கூட்டமைப்பினரத் தோற்கடித்தனர்.
- 1870 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடம்பெற்ற போரில் பாரிஸ் நகரைக் கைப்பற்றும் நிகழ்வு ஆரம்பமானது. பாரிஸ் 1871, ஜனவரி 28 இல் புருசியாவிடம் வீழ்ந்தது.
- 1881 - ஜூலை 2]இல் சுடப்பட்டுப் படுகாயமடைந்த அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
- 1893 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவில் உலக சமய மாநாட்டில் உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.
- 1893 - நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதலாவது நாடானது.
- 1942 - மேற்கு உக்ரைனில் புரோடி என்ற இடத்தில் கிட்டத்தட்ட 2,500 யூதர்கள் நாசி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1944 - பின்லாந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
- 1952 - ஐக்கிய அமெரிக்கா சார்லி சப்ளின் இங்கிலாந்து சென்றுவிட்டுத் அமெரிக்க திரும்புவதற்குத் தடை விதித்தது.
- 1957 - ஐக்கிய அமெரிக்கா நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
- 1976 - தெற்கு துருக்கியில் போயிங் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
- 1983 - சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1985 - மெக்சிகோவில் இடம்பெற்ற 7.8 ரிக்டர் நிலநடுக்கத்தினால் குறைந்தது 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1989 - நைஜர் நாட்டில் பிரெஞ்சு யூடிஏ விமானத்தில் குண்டு வெடித்ததனால் 171 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 - அல்ஜீரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 53 கிராம மக்களைப் படுகொலை செய்தனர்.
- 2006 - தாய்லாந்தில் இராணுவப் புரட்சியில் இராணுவத் தளபதி சோந்தி பூன்யா ரத்கிலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1911 - வில்லியம் கோல்டிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் (இ. 1993)
- 1965 - சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீராங்கனை
இறப்புகள் [தொகு]
- 1881 - ஜேம்ஸ் கார்ஃபீல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் (பி. 1831)
- 1980 - கே. பி. சுந்தராம்பாள், தமிழிசை, நாடகக் கலைஞர் (பி. 1908)
சிறப்பு நாள் [தொகு]
- சிலி - இராணுவத்தினர் நாள்
- சென் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - விடுதலை நாள் (1983)