செப்டம்பர் 2
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 2 கிரிகோரியன் ஆண்டின் 245வது நாளாகும். நெட்டாண்டுகளில் 246வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 120 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- கிமு 44 - எகிப்தின் ஏழாம் கிளியோபாத்ரா தனது மகன் சிசேரியனை அரசனாக்கினாள்.
- கிமு 31 - கிரேக்கத்தின் மேற்குக் கரையில் ஒக்டேவியனின் படைகள் மார்க் அந்தோனி, மற்றும் கிளியோபாத்ராவின் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1642 - இங்கிலாந்து நாடாளுமன்றம் லண்டன் நாடக அரங்குகள் அனைத்தையும் மூடிவிட உத்தரவிட்டது.
- 1666 - லண்டனில் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் புனித போல் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் அழிந்தன.
- 1752 - ஐக்கிய இராச்சியத்தில் கிரிகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1792 - பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற கலவரங்களில் மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்கள் கொல்லப்பட்டனர்.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படைகள் அட்லாண்டாவை விட்டு விலகிய அடுத்த நாள் அமெரிக்கப் படைகள் அங்கு போய்ச் சேர்ந்தன.
- 1870 - பிரான்சில் செடான் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரஷ்யப் படையினர் பிரான்சின் மன்னனான மூன்றாம் நெப்போலியனையும் அவனது படையினர் 100,000 பேரையும் கைது செய்தனர்.
- 1885 - வயோமிங் மாநிலத்தில் 150 வெள்ளையின சுரங்கத் தொழிலாளர்கள் வெளிநாட்டு சீனத் தொழிலாளர்களைத் தாக்கி அவர்களில் 28 பேரைக் கொன்று 15 பேரைக் காயப்படுத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் நகரை விட்டுத் தப்பியோடினர்.
- 1898 - பிரித்தானிய மற்றும் எகிப்தியப் படைகள் சூடானிய பழங்குடியினரைத் தாக்கி அந்நாட்டில் பிரித்தானிய மேலாண்மையை ஏற்படுத்தினர்.
- 1935 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 423 பேர் கொல்லப்பட்டனர்.
- 1939 - இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான முற்றுகையை அடுத்து கிதான்ஸ்க் நகரம் நாசி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: பசிபிக் போர் முடிவுக்கு வந்தது. ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் நிகழ்ந்தது.
- 1945 - வியட்நாம், பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்து, வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு என்ற பெயரில் (வடக்கு வியட்நாம்) ஹோ சி மின் தலைமையில் ஆட்சியை அமைத்தது.
- 1951 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.
- 1958 - அமெரிக்காவின் விமானப்படை விமானம் ஒன்று சோவியத் ஆர்மீனியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- 1965 - பாகிஸ்தான் படையினர் இந்தியாவின் காஷ்மீருக்குள் நுழைந்தனர்.
- 1969 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது தன்னியக்கப் பணம் வழங்கி நியூயோர்க்கில் அமைக்கப்பட்டது.
- 1970 - சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது.
- 1990 - மால்டோவாவின் ஒரு பகுதியான திரான்ஸ்னிஸ்திரியா தன்னிச்சையாக வெளியேறி தன்னை சோவியத்தின் ஒரு குடியரசாக அறிவித்தது. ஆனாலும் இதனை சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பசோவ் ஏற்கவில்லை. இன்று வரையில் இது எந்த நாட்டினாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
- 1996 - பிலிப்பீன்ஸ் அரசுக்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணிக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1998 - நோவா ஸ்கோசியாவில் சுவிட்சர்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 229 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2006 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் பருத்தித்துறை முனை கடற்சமரில் இலங்கைக் கடற்படையின் 2 டோரா படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.
பிறப்புக்கள் [தொகு]
- 1913 - இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (இ. 2009)
இறப்புகள் [தொகு]
- 1969 - ஹோ சி மின், வியட்நாம் தலைவர் (பி. 1890)
- 1973 - ஜே. ஆர். ஆர். டோல்கியென், பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1892)
- 2009 - ராஜசேகர ரெட்டி, ஆந்திர முதலமைஇச்சர் (பி. 1949)
சிறப்பு நாள் [தொகு]
- வியட்நாம் - குடியரசு நாள் (1945)
- ஜேர்மனி - வெற்றி நாள் (1870, பிரான்சுடன் இடம்பெற்ற போரில்)
- திரான்ஸ்னிஸ்திரியா - விடுதலை நாள் (1990, எந்த நாட்டினாலும் இது அங்கீகரிக்கப்ப்படவில்லை)