ஜூலை 4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூலை 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
ஜூலை 4, கிரிகோரியன் ஆண்டின் 185வது நாளாகும். நெட்டாண்டுகளில் 186வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 180 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1054 - சுப்பர்நோவா ஒன்று சீனர்களாலும், அரபுக்களாலும் அவதானிக்கப்பட்டது.
- 1634 - நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது. இது பின்னர் கியூபெக் நகரமானது.
- 1776 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா விடுதலையை அறிவித்தது.
- 1803 - லூசியானா விலைக்கு வாங்கப்பட்ட செய்தி அமெரிக்க மக்களுக்கு அறிவிக்கப்படட்து.
- 1810 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாம் நகரைப் பிடித்தனர்.
- 1865 - ஆலிஸின் அற்புத உலகம் வெளியிடப்பட்டது.
- 1879 - ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
- 1918 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் நிக்கலாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் போல்ஷெவிக்கினரால் கொல்லப்பட்டனர் (யூலியின் நாட்காட்டி).
- 1941 - நாசி ஜெர்மனியினரால் போலந்தில் "லூவோவ்" என்னும் இடத்தில் அறிவியலாளர்களும் எழுத்தாளர்களுமாக 45 பேர் கொல்லப்பட்டனர்.
- 1946 - 381 ஆண்டு குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் பிலிப்பீன்ஸ் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1976 - உகாண்டாவில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த அனைவரையும் இஸ்ரேலிய கொமாண்டோப் படையினர் விடுவித்தனர்.
- 1988 - வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முதல் தமிழ் மாநாடு பென்சில்வேனியாவில் இடம்பெற்றது.
- 1997 - நாசாவின் பாத்ஃபைண்டர் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கியது.
- 2006 - டிஸ்கவரி விண்ணோடம் 18:37:55 UTC மணிக்கு விண்ணுக்கு ஏவப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- 1807 - கரிபால்டி, நவீன இத்தாலியின் தந்தை (இ. 1882)
- 1872 - கால்வின் கூலிட்ஜ், ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் (இ. 1933)
- 1898 - குல்சாரிலால் நந்தா, இந்தியாவின் 2வது பிரதமர் (இ. 1998)
இறப்புகள் [தொகு]
- 1826 - ஜான் ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 2வது குடியரசுத் தலைவர் (பி. 1735)
- 1826 - தாமஸ் ஜெஃவ்வர்சன், ஐக்கிய அமெரிக்காவின் 3வது குடியரசுத் தலைவர்(பி. 1743)
- 1831 - ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது குடியரசுத் தலைவர்(பி. 1758)
- 1902 - சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் சமயத் தலைவர் (பி. 1863)
- 1934 - மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் (பி. 1867)
சிறப்பு நாள் [தொகு]
- ஐக்கிய அமெரிக்கா - விடுதலை நாள் (1776)