கொனியேட்டி ரோசையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொனியேட்டி ரோசையா
కొణిజేటి రోశయ్య


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகஸ்டு 31 2011
முன்னவர் சுர்சித் சிங் பர்னாலா

பதவியில்
செப்டம்பர் 3 2009 – நவம்பர் 24 2010
முன்னவர் யெ.சா.ராசசேகர ரெட்டி
பின்வந்தவர் கிரண் குமார் ரெட்டி
தொகுதி குண்டூர்[1](சட்ட மேலவை உறுப்பினர்)
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

பிறப்பு 4 ஜூலை 1933 (1933-07-04) (அகவை 81)
வேமூரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
வாழ்க்கைத்
துணை
சிவலட்சுமி
பிள்ளைகள் கே எசு சுப்பாராவ், பி ரமாதேவி, கே எசு என் மூர்த்தி
இருப்பிடம் அமீர்பேட், ஐதராபாத்

கொனியேட்டி ரோசையா (Konijeti Rosaiah, தெலுங்கு: కొణిజేటి రోశయ్య; பிறப்பு சூலை 4, 1933) ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[2][3] இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான அவர் பல மாநில அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்கி முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.[4] இவரது பதவி விலகலை அடுத்து கிரண்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆகத்து 31, 2011 முதல் தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்[5]

விருதுகள்[தொகு]

2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.hindu.com/2008/08/24/stories/2008082450480100.htm
  2. "Rosaiah takes oath as caretaker Andhra CM". The Times of India (2009-09-03). மூல முகவரியிலிருந்து 2009-09-05 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-09-03.
  3. "Rosaiah - A low profile leader".
  4. "rosaiah  : ap chief minister k rosaiah : Andhra Pradesh CM Rosaiah resigns : Rosaiah resigns as Andhra Pradesh Chief Minister". BindasLand. பார்த்த நாள் 25 November 2010.
  5. தமிழக கவர்னராக ரோசய்யா நியமனம் தினமலர் நாளிதழ், பார்க்கப்பட்ட நாள்:ஆகத்து 26, 2011
  6. "Rosaiah sworn in as Andhra CM". தி இந்து. 2009-09-03. http://beta.thehindu.com/news/national/article14639.ece. பார்த்த நாள்: 2009-09-03. 
அரசியல் பதவிகள்
முன்னர்
யானமல இராமகிருஷ்ணுடு
ஆந்திரப் பிரதேச நிதியமைச்சர்
2004–2010
பின்னர்
அனம் இராம நாராயண இரெட்டி
முன்னர்
ராஜசேகர ரெட்டி
ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
2009–2010
பின்னர்
நல்லாரி கிரண் குமார் ரெட்டி
அரசு பதவிகள்
முன்னர்
சுர்சித் சிங் பர்னாலா
தமிழக ஆளுநர் பதவியில் உள்ளார்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கொனியேட்டி_ரோசையா&oldid=1765993" இருந்து மீள்விக்கப்பட்டது