ஆந்திரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆந்திரப் பிரதேசம்
IndiaAndhraPradesh.png
ஆந்திரப் பிரதேசம் அமைந்த இடம்
தலைநகரம் ஹைதராபாத்
மிகப்பெரிய நகரம் ஹைதராபாத்
ஆட்சி மொழி தெலுங்கு
ஆளுனர் சுசில்குமார் சிண்டே
முதலமைச்சர் வை. எஸ். ராஜசேகர ரெட்டி
ஆக்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 1953
பரப்பளவு 2,75,068 கி.மீ² (4வது)
மக்கள் தொகை (2001)
அடர்த்தி
7,57,27,000 (4வது)
275/கி.மீ²
மாவட்டங்கள் 23

ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இதன் தலைநகரம் ஹைதராபாத் ஆகும். விஜயவாடா, விசாகப்பட்டிணம் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். இங்குள்ள பெரும்பாலான மக்கள் பேசும் மொழி தெலுங்கு.

பொருளடக்கம்

[தொகு] புவியமைப்பு

ஆந்திரப் பிரதேசத்தின் வடக்கில் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் தமிழ் நாடும், மேற்கில் கர்நாடகமும் அமைந்துள்ளன. தென் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் ஐந்தாவது பெரிய மாநிலமாகும். கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன.

[தொகு] மாவட்டங்கள்

[தொகு] பொருளாதாரம்

விவசாயமே ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

[தொகு] மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [1]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 76,210,007 100%
இந்துகள் 67,836,651 89.01%
இசுலாமியர் 6,986,856 9.17%
கிறித்தவர் 1,181,917 1.55%
சீக்கியர் 30,998 0.04%
பௌத்தர் 32,037 0.04%
சமணர் 41,846 0.05%
ஏனைய 4,768 0.01%
குறிப்பிடாதோர் 94,934 0.12%

[தொகு] கலாசாரம்

தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். கர்நாடக சங்கீதத்தில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி, ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும்.

ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாம் பெரிய திரைப்படத்துறையாகும்.

ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை.

[தொகு] மேற்கோள்கள்

  1. Census of india , 2001

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்