மேற்கு கோதாவரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Andhra Pradesh district location map West Godavari.svg

மேற்கு கோதாவரி இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டமாகும். இதன் தலைநகரம் ஏலூரு ஆகும். பீமவரமு இம்மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கிய ஊராகும். இம்மாவட்டம் 46 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏலூரு, நரஸாபுரம் என இரன்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. 16 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:

 • 175. ஆச்சண்ட்டா
 • 176. நரசாபுரமு
 • 178. பீமவரமு
 • 179. உண்டி
 • 180. தணுக்கு
 • 181. தாடேபல்லிகூடம்
 • 182 .உங்குட்டூரு
 • 183. தெந்துலூரு
 • 184. ஏலூரு
 • 185. கோபாலபுரம் [தனி]
 • 186. போலவரமு [தனி]
 • 187. சிந்தபலபூடி [தனி]

ஆங்கிலேயர்கள், சென்னை ராஜதானியில் மசுலீபட்டணத்தை மையமாகக் கொண்டு இப்பகுதியை ஆண்டனர். 1794-ல் காகினாடவிலும் ராஜமுந்திரியிலும் இரண்டு ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 1859-ல் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்கள் அமைக்கப்பட்டன. 1925 ஏப்ரல் 15 அன்று கிருஷ்ணா மாவட்டத்தை இரண்டாக பிரித்தும், புதிதாக மேற்கு கோதாவரி மாவட்டத்தை அமைத்தும் சென்னை அரசு முடிவெடுத்தது. முந்தைய கோதாவரி மாவட்டத்தின் பெயர் கிழக்கு கோதாவரி மாவட்டம் என பெயர் மற்றப்பட்டது. இம்மாவட்ட மக்கள் மாநிலப் பிரிப்பை கடுமையாக எதிர்கின்றனர்.

சுற்றுலா[தொகு]

 • பீமவரத்தில் பஞ்சாராம க்ஷேத்ரம் (ஸோமாராமம்)
 • பால்கொல்லில் பஞ்சாராம க்ஷேத்ரம் (க்ஷீராராமம்)
 • சின்னத் திருப்பதி எனப்படும் துவாரகா திருமலை
 • கொல்லேரு ஏரி
 • பாபி மலை
 • படட்டிசீமையில் உள்ள ஶ்ரீ வீரபத்திரர் திருக்கோயில்
 • காமவரப்புகோட்டை அருகில் உள்ள குன்டுபள்ளி பௌத்த குகைகள்