கோணசீமா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொனசீமா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோணசீமா மாவட்டம்
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
தலைமையிடம்அமலாபுரம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்https://konaseema.ap.gov.in

கோணசீமா மாவட்டம் (Konaseema district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமலாபுரம் நகரம் ஆகும். கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அமலாபுரம், இராமச்சந்திராபுரம் மற்றும் கொத்தப்பேட்டை வருவாய்க் கோட்டகளைக் கொண்டு கொனசீமா மாவட்டம் 4 ஏப்ர்ல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2]

52,4011 வீடுகளும், சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட கோணசீமா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17,19,093 ஆகும். அதில் ஆண்கள் 8,62,000 மற்றும் பெண்கள் 8,57,093 ஆக உள்ளனர்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

கொனசீமா மாவட்டம் 2 வருவாய் கோட்டங்களையும், 17 மண்டல்களையும், 316 வருவாய் கிராமங்களையும் கொண்டது. மேலும் அமலாபுரம் மாநகராட்சியும் கொண்டுள்ளது.

மண்டல்கள்[தொகு]

இம்மாவட்டத்தின் அமலாபுரம் வருவாய் கோட்டத்தில் 10 மண்டல்களும், இராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டத்தில் 6 மண்டல்களும் கொண்டுள்ளது.


# இராமச்சந்திராபுரம் வருவாய் கோட்டம் அமலாபுரம் வருவாய் கோட்டம்
1 இராமச்சந்திராபுரம் மும்முடிவரம்
2 கஜுலுரு ஐ. போலாவரம்
3 கங்காவரம் கத்திரினிகோனா
4 மண்டப்பேட்டை அமலாபுரம்
5 இராயபுரம் உப்பலகுப்தம்
6 கபிலேஸ்வரபுரம் அல்லாவரம்
7 ரசோல்
8 மலிகிபுரம்
9 சகிநெதிப்பள்ளி
10 மாமுடிகுருரு

அரசியல்[தொகு]

கொனசீமா மாவட்டம், அமலாபுரம் மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்:[3]

  1. இராமச்சந்திராபுரம் சட்டமன்றத் தொகுதி
  2. மும்முடிவரம் சட்டமன்றத் தொகுதி
  3. அமலாபுரம் சட்டமன்றத் தொகுதி
  4. ரசோல் சட்டமன்றத் தொகுதி
  5. கன்னாவரம் (தனி) சட்டமன்றத் தொகுதி
  6. கொத்தபேட்டை சட்டமன்றத் தொகுதி
  7. மண்டப்பேட்டை சட்டமன்றத் தொகுதி

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. A.P. to have 26 districts from 04 April 2022
  2. Andhra Pradesh adds 13 new districts
  3. "District-wise Assembly-Constituencies". ceoandhra.nic.in.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோணசீமா_மாவட்டம்&oldid=3643808" இலிருந்து மீள்விக்கப்பட்டது