ஏலூரு
| ஏலூரு | |
| — நகரம் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | மேற்கு கோதாவரி |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி[2] |
| மக்கள் தொகை • அடர்த்தி |
1,89,772 (2001[update]) • 12,651 /km2 (32 /sq mi) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
15 square kilometres (5.8 ச மைல்) • 22 மீட்டர்கள்s (72 அடி) |
|
குறியீடுகள்
|
|
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமான ஏலூரு மேற்குக் கோதாவரி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். 2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 189,772 ஆகும். இது, விஜயவாடாவையும், விசாகப்பட்டினத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முன்னர் ஹேலாப்புரி என அழைக்கப்பட்ட இது, வளமான பண்பாடு மற்றும் அரசியல் வரலாறுகளைக் கொண்டது. ஒரு காலத்தில் விஷ்ணுகுண்டினர்களின் தலைநகரமாக இது விளங்கியதாகவும் நம்பப்படுகிறது. பெரிய நன்னீர் ஏரியான கொள்ளேறு ஏரி இந்த நகரத்துக்கு அண்மையிலேயே உள்ளது.
கெலபுரி என்று முற்காலத்தில் இந்நகரம் அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏலூரு மச்சிலிப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. பின்னர் 1859 ஆம் ஆண்டில் இது கோதாவரி மாவட்டத்தின் பகுதியானது. பின்னர் சிலகாலம் கிருஷ்ணா மாவட்டத்துள் இடம்பெற்றிருந்த இது 1925 இல் மேற்கு கோதாவரி மாவட்டம் உருவானபோது அதன் தலைநகராக்கப்பட்டது.