ஜெகன் மோகன் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ. ச. ஜெகன் மோகன் ரெட்டி
17வது ஆந்திரப் பிரதேச முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
ஆளுநர்ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன்
முன்னையவர்நா. சந்திரபாபு நாயுடு
தொகுதிபுலிவந்தலா
ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
முன்னையவர்நா. சந்திரபாபு நாயுடு
பின்னவர்நா. சந்திரபாபு நாயுடு
சட்ட மன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மே 2014
முன்னையவர்எ. ச. விஜயலட்சுமி
தொகுதிபுலிவந்தலா
இந்தியா நாடாளுமன்றம்
for கடப்பா
பதவியில்
26 மே 2009 – 26 மே 2014
முன்னையவர்ஒய். எஸ். விவேகானந்த ரெட்டி
பின்னவர்ஒய். எஸ். அவிநாஷ் ரெட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 திசம்பர் 1972 (1972-12-21) (அகவை 51)
புலிவந்தலா, கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் (2011-தற்போது வரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2011க்கு முன்பு)
துணைவர்ஒய். எஸ். பாரதி
பிள்ளைகள்2 மகள்கள்
பெற்றோர்(s)எ. சா. ராஜசேகர் (தந்தை)
எ. ச. விஜயலட்சுமி (தாய்)
உறவினர்கள்எ. ச. சர்மிளா (தங்கை)
வாழிடம்(s)ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
அமராவதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందిటి జగన్మోహన రెడ్డి, பிறப்பு: :திசம்பர் 21, 1972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

இளமைக் காலம்[தொகு]

இவர் திசம்பர் 21, 1972 ஆம் ஆண்டு இந்தியாவின், ஆந்திரப் பிரதேசம் மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவந்தலா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை எ. சா. ராஜசேகர் மற்றும் தாயார் எ. ச. விஜயலட்சுமி ஆகியோர் ஆவர். இவரது தந்தை எ. சா. ராஜசேகர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், இவரது தாய் எ. ச. விஜயலட்சுமி புலிவந்தலா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவர். இவருக்கு எ. ச. சர்மிளா என்னும் தங்கை உள்ளார்.

இவர் தன்னுடைய ஆரம்பக் கல்வியை ஐதராபாத் பொதுப் பள்ளியில் படித்தார். இவர் வணிகவியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் தென்னிந்தியத் திருச்சபை (ஆங்கிலிக்கம்) கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

2004 ஆம் ஆண்டு முதல் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் என்னும் கட்சியை 2011 இல் தொடங்கினார். புதிய கட்சிக்கு ஆதரவு திரட்ட 3000 கி.மீ பாதயாத்திரைகளை மேற்கொண்டார்.

பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேச வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.[3]

2014 தேர்தல்[தொகு]

2014 ஆம் ஆண்டில், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி முதல் தேர்தலை சந்தித்தது. ஆனால், ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி அத்தேர்தல்களில் தோல்வியடைந்தது, மாநில சட்டமன்றத்தில் மொத்தம் 175 இடங்களில் 67 இடங்களை மட்டுமே வென்றது. அப்போது தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆனார். அத்தேர்தலில் தோல்வியடைந்தாலும், எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார்.

2019 தேர்தல்[தொகு]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஊழல் குற்றச்சாட்டு[தொகு]

இவர் 2012 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு புகாரில் நடுவண் புலனாய்வுச் செயலகம் சோதனைக்கு உள்ளானார். பின்னர் 16 மாதங்கள் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.[4]

மூலம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bio
  2. "ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்பு விழாவில் உணர்ச்சிகர சம்பவம்; தாயின் கண்ணீரை துடைத்த மகன்". தினத்தந்தி (மே 30, 2019)
  3. "Record-breaking win for Jagan in Kadapa election". Indian Express. 13 May 2011 இம் மூலத்தில் இருந்து 16 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110516035240/http://www.indianexpress.com/news/recordbreaking-win-for-jagan-in-kadapa-.../789934. பார்த்த நாள்: 13 May 2011. 
  4. "ஜெகன் சொத்துக் குவிப்பு வழக்கு: சிக்கும் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள்". http://tamil.oneindia.in/news/2012/06/08/india-cbi-summons-bcci-chief-jagan-case-155294.html. பார்த்த நாள்: சூன் 08, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகன்_மோகன்_ரெட்டி&oldid=3421308" இலிருந்து மீள்விக்கப்பட்டது