அனந்தபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அனந்தபூர் இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ஒரு மாவட்டத்தின் பெயரும் தலைநகரின் பெயரும் ஆகும்.

புவியியல்[தொகு]

இம்மாவட்டமே ஆந்திரத்தின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இதன் பரப்பளவு 19,130 ச.கி.மீ.கள் ஆகும். இதன் வடக்கில் கர்னூல் மாவட்டமும் கிழக்கில் கடப்பா மாவட்டமும் தென்கிழக்கில் சித்தூர் மாவட்டமும் கர்நாடகம் தெற்கிலும் தென்மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இது மாநிலத்தின் இராயலசீமா என்றழைக்கப்படும் பகுதியும் ஒரு அங்கமாகும். மாவட்டத்தின் தெற்குப்பகுதி மலைப்பாங்கானது ஆகும். பென்னா, சித்ராவதி, வேதவதி, பாபாக்னி, ஸ்வர்ணமுகி, தடக்கலேறு ஆகிய 6 ஆறுகள் இம்மாவட்டத்தின் வழியாகப்பாய்கின்றன.

மக்கள்வளம்[தொகு]

2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 3, 640, 478 ஆகும். தெலுங்கு, உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. கல்வியறிவு 56.69 சதம் ஆகும். இம்மாவட்டத்தில் மொத்தம் 866 கிராமங்கள் உள்ளன.

குறிப்பிடத்தகுந்த நகரங்கள்[தொகு]

  • அனந்தபூர்
  • இந்துப்பூர்
  • குண்டக்கல்
  • தர்மாவரம்
  • புட்டபர்த்தி
"http://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தபூர்&oldid=1373593" இருந்து மீள்விக்கப்பட்டது