1946
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1910கள் 1920கள் 1930கள் - 1940கள் - 1950கள் 1960கள் 1970கள் |
| ஆண்டுகள்: | 1943 1944 1945 - 1946 - 1947 1948 1949 |
1946 (MCMXLI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 10 - ஐநா அவையின் முதலாவது கூட்டம் ஆரம்பமானது.
- ஜனவரி 29 - ஐக்கிய அமெரிக்காவில் CIG எனப்படும் மத்திய உளவுத்துறை குரூப் (Central Intelligence Group) அமைக்கப்பட்டது.
- ஜனவரி 31 - சோவியத் ஒன்றியத்தின் அமைப்பினை ஒத்ததாக யூகோஸ்லாவிய அரசமைப்பு பொஸ்னியா-ஹெர்செகோவினா, குரோஷியா, மசிடோனியா, மொன்டெனேகிரோ, சேர்பியா, ஸ்லவேனியா ஆகிய ஆறு குடியரசுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது.
- பெப்ரவரி 2 - ஹங்கேரி குடியரசாகியது.
- ஏப்ரல் 1 - 14 மீற்றர் உயர சுனாமி ஹவாயைத் தாக்கியதில் 173 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 7 - சொனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.
- மே 10 - ஜவகர்லால் நேரு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
- ஜூன் 10 - இத்தாலி குடியரசாகியது.
- ஆகஸ்ட் 19 - கல்காத்தாவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலகத்தில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 2 - பல்கேரியா கம்யூனிஸ்டுகளின் வசமாகியது.
- டிசம்பர் 11 - யுனிசெஃப் நிறுவப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- ஜனவரி 13 - ஆர். பாலச்சந்திரன், கல்வியாளர், கவிஞர் (இ. 2009)
- அக்டோபர் 19 - ரா.தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)
இறப்புகள் [தொகு]
நோபல் பரிசுகள் [தொகு]
- இயற்பியல் - பேர்சி பிறிட்ஜ்மன் (Percy Williams Bridgman)
- வேதியியல் - ஜேம்ஸ் சம்னர் (James B. Sumner), ஜோன் நோர்த்ரொப் (John Howard Northrop), வெண்டெல் ஸ்டான்லி (Wendell Meredith Stanley)
- மருத்துவம் - ஹேர்மன் முல்லர்(Hermann Joseph Muller)
- இலக்கியம் - ஹேர்மன் ஹெஸ் (Hermann Hesse)
- அமைதி - எமிலி பால்ச் (Emily Greene Balch), ஜோன் மொட் (John Mott)