சூலை 7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலை 7 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
சூலை 7, கிரிகோரியன் ஆண்டின் 188வது நாளாகும். நெட்டாண்டுகளில் 189வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 177 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1456 - ஜோன் ஆஃப் ஆர்க் குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
- 1543 - பிரான்ஸ் லக்சம்பேர்க்கை முற்றுகையிட்டது.
- 1799 - பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்கின் படையினர் லாகூரை அடுத்துள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
- 1807 - பிரான்சின் நெப்போலியனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ரஷ்யாவின் டில்சிட் என்ற இடத்தில் எட்டப்பட்டது.
- 1865 - ஆபிரகாம் லிங்கன் கொலையில் குற்றவாளிகளான நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1896 - இந்தியாவில் முதற் தடவையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1898 - ஹவாய் தீவை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கும் முடிவில் அதிபர் வில்லியம் மக்கின்லி கைச்சாத்திட்டார்.
- 1917 - ரஷ்யப் புரட்சி: ரஷ்யாவின் இடைக்கால அரசின் பிரதமர் இளவரசர் கியோர்கி லுவோவ் பதவியைத் துறந்தார். அலெக்சாண்டர் கெரென்ஸ்கி பிரதமரானார்.
- 1937 - பசிபிக் போர்: ஜப்பானியப் படைகள் சீனாவின் பெய்ஜிங் நகரை அடைந்தனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் தலையீட்டைத் தடுப்பதற்காக அமெரிக்கப் படைகள் ஐஸ்லாந்தில் தரையிறங்கினர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: பெய்ரூட் நகரம் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது.
- 1953 - பொலிவியா ஊடாக பெரு, நிக்கராகுவா போன்ற நாடுகளுக்கான தனது பயணத்தை சே குவேரா ஆரம்பித்தார்.
- 1959 - வெள்ளிக் கோள் ரெகூலஸ் என்ற விண்மீனை மறைத்தது. இந்நிகழ்வு வெள்ளியின் விட்டம் மற்றும் அதன் வளிமண்டலம் போன்றவற்றை அளக்க உதவியது.
- 1967 - பயாபிராவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
- 1969 - கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
- 1978 - சொலமன் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 2005 - லண்டனில் 4 சுரங்கத் தொடருந்து நிலையங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 - சீனாவில் சுரங்கம் தோண்டுவதற்காக வீடொன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
- 2007 - புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தியாவின் தாஜ் மகால் புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- 1947 - ஞானேந்திரா, நேபாளத்தின் கடைசி மன்னர்
- 1981 - மகேந்திர சிங் தோனி, இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள் [தொகு]
- 1930 - ஆர்தர் கொனன் டொயில், துப்பறியும் புனைகதை எழுத்தாளர் (பி. 1859)
சிறப்பு நாள் [தொகு]
- சொலமன் தீவுகள் - விடுதலை நாள் (1978)