ஜூன் 17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 17 கிரிகோரியன் ஆண்டின் 168ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 169ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 197 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1579 - சேர் பிரான்சிஸ் டிறேக் "நோவா அல்பியன்" (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
- 1631 - முகலாய மன்னன் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் தனது 14வது மகப்பேறின் போது காலமானாள்.
- 1839 - ஹவாய் பேரரசில் கத்தோலிக்கர் தமது சமயத்தை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
- 1885 - விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
- 1911 - செங்கோட்டை வாஞ்சிநாதன் திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டு சாவடைந்தான்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.
- 1940 - இரண்டாம் உலகப் போர்:லங்காஸ்ட்ரியா என்ற ஐக்கிய இராச்சியக் கப்பல் பிரான்சில் மூழ்கடிக்கப்பட்டதில் 4,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் லிபியாவில் கப்பூசோ துறைமுகத்தை இத்தாலியார்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1940 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகிய பால்ட்டிக் நாடுகளை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
- 1944 - ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது.
- 1944 - பிரெஞ்சுப் படைகள் எல்பா தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர்.
- 1954 - குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- 1948 - பென்சில்வேனியாவில் அமெரிக்க விமானம் கார்மெல் மலையில் மோதியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
- 1953 - பெர்லினில் கிழக்கு ஜெர்மனி அரசுக்கெதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சோவியத் படைகளினால் நசுக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1987 - மாலைநேர கடல் குருவியினத்தின் கடைசிக் குருவி இறந்ததில் அவ்வினம் முற்றாக அழிந்தது.
- 2006 - மன்னார் பேசாலைப் பகுதியில் கடற்படையினருக்கும் புலிகளுக்கும் இடையிலான மோதலின் பின்னர் ஆறு பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1703 - ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை ஆரம்பித்தவர் (இ. 1791)
- 1942 - மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர்
- 1973 - லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர்
- 1980 - வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை
இறப்புகள் [தொகு]
- 1858 - ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பி. 1835)
- 1911 - வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1886)
- 2001 - டொனால்ட் கிராம், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1919)