டென்மார்க்
| Kongeriget Danmark
டென்மார்க் இராச்சியம்
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் இல்லை (அரசரின் குறிக்கோள்: Guds hjælp, Folkets kærlighed, Danmarks styrke "கடவுளின் உதவி, மக்களின் இன்பம், டென்மார்க்கின் பலம்") |
||||||
| நாட்டுப்பண் Der er et yndigt land (தேசிய) அரச வணக்கம் Kong Christian (அரசரின்) |
||||||
|
அமைவிடம்: டென்மார்க் (orange)
– in ஐரோப்பா (camel & white) |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
கோப்பென்ஹாகென் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | டேனிஷ்1 | |||||
| மக்கள் | டேனிஷ் | |||||
| அரசு | நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட இராச்சியம் | |||||
| - | அரசர் | மார்கிரெத் II | ||||
| - | முதலமைச்சர் | ஆன்டெர்ஸ் ஃபொக் ராஸ்முசென் | ||||
| கூட்டமைப்பு | (பழைய காலம்) | |||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | ஜனவரி 1 1973 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 43,094 கிமீ² (134வது²) 16,639 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.6² | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2008 மதிப்பீடு | 5,475,791 (108வது) | ||||
| - | அடர்த்தி | 129.16/கிமீ² (78வது²) 334.53/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $198.5 பில்லியன் (45வது) | ||||
| - | நபர்வரி | $37,000 (6வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2006 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $256.3 பில்லியன் (27வது) | ||||
| - | நபர்வரி | $46,600 (6வது) | ||||
| ஜினி சுட்டெண்? (1997) | 24.7 (தாழ்) (1வது) | |||||
| ம.வ.சு (2004) | ||||||
| நாணயம் | டென்மார்க் குரோன (DKK) |
|||||
| நேர வலயம் | CET² (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST² (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .dk2 | |||||
| தொலைபேசி | +45 | |||||
டென்மார்க் (Denmark) அல்லது தென்மார்க்கு இராச்சியம் (Kingdom of Denmark, டேனிய மொழி: Kongeriget Danmark, பலுக்கல் [ˈkɔŋəʁiːəð ˈdanmɑɡ̊] (
கேட்க)) என்பது தென்மார்க்கு, பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கியது ஆகும். இது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடுகளுள் ஒன்று. இதன் தலைநகரம் கோப்பன்ஹேகன் ஆகும். நார்டிக் நாடுகளில் தென்கோடியில் அமைந்துள்ளது இதுவே. இதன் தெற்கில் செருமனி இதன் எல்லையாக உள்ளது. இதன் வடகிழக்குப் பகுதியில் ஸ்காண்டிநேவிய நாடுகளான நோர்வே, சுவீடன் என்பன அமைந்துள்ளன. இது பால்டிக் கடல் மற்றும் வடக்கு கடலுக்கு இடையில் அமைந்துள்ளது.
டென்மார்க் 1973ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாததார கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையை கொண்டு அரசின் நாடாளுமன்றத்தால் இயங்குகிறது. நேட்டோ அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றாகும். பால்டிக் கடல் பகுதியில் உள்ள ஏராளமான சிறு தீவுகளை உள்ளடக்கியது.
வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.
|
|||||