பெல்ஜியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
(டச்சு) Koninkrijk België
(பிரெஞ்சு) Royaume de Belgique
(ஜெர்மன்) Königreich Belgien
பெல்ஜியம் இராச்சியம்
பெல்ஜியம் கொடி
குறிக்கோள்
Eendracht maakt macht  (டச்சு)
L'union fait la force"  (பிரெஞ்சு)
Einigkeit macht stark  (ஜெர்மன்)
"ஒன்றியத்திலிருந்து பலம்"
நாட்டுப்பண்
த "பிராபன்சொன்"
Location of பெல்ஜியம்
பெல்ஜியம் (ஆரன்ச்) ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இருந்த இடம்
தலைநகரம் ப்ரஸ்ஸல்ஸ்
50°54′N 4°32′E / 50.9, 4.533
பெரிய மிகப்பெரிய மாநகராட்சி ப்ரஸ்ஸல்ஸ் தலைநகரப் பகுதி
ஆட்சி மொழி(கள்) டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன்
மக்கள் பெல்ஜியன்
அரசு நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
 -  அரசர் ஆல்பர்ட் II
 -  பிரதமர் எலியோ டி ரூபோ
விடுதலை
 -  கூற்றம் அக்டோபர் 4 1830 
 -  திட்டப்படம் ஏப்ரல் 19 1839 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு மார்ச் 25 1957
பரப்பளவு
 -  மொத்தம் 30,528 கிமீ² (139th)
11,787 சது. மை 
 -  நீர் (%) 6.4
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 11,007,020 (76வது [2005])
 -  2001 குடிமதிப்பு 10,296,350 
 -  அடர்த்தி 344.32/கிமீ² (2006) (29th [2005])
892/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2004 கணிப்பீடு
 -  மொத்தம் $316.2 பில்லியன் (30வது)
 -  நபர்வரி $31,400 (13வது)
ஜினி சுட்டெண்? (2000) 33 (மத்தியம்) (33வது)
ம.வ.சு (2005) Green Arrow Up Darker.svg 0.946 (உயர்) (17வது)
நாணயம் ஐரோ (€)1 (EUR)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .be
தொலைபேசி +32
1 1999க்கு முன்: பெல்ஜியன் ஃபிராங்க்.

பெல்ஜியம் (அதிகாரப்பூர்வமாக பெல்ஜியம் இராச்சியம்) மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது.


பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.


ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.


டச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ஃப்ளாண்டர்ஸ் என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் வலோனியா என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர்.


பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.


பெல்ஜியம் அல்லது பெல்கியம் என்ற பெயர் காலியா பெல்கிகா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும். காலியா பெல்கிகா என்பது காவுலுக்கு வடக்குக்கோடியிலிருந்த ஒரு ரோமானிய மாகாணம். அது கிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு, செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெல்ஜியம்&oldid=1342568" இருந்து மீள்விக்கப்பட்டது