செருமனி
| Bundesrepublik Deutschland
ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசு / இடாய்ச்சுலாந்து
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் யேர்மன்: Einigkeit und Recht und Freiheit ஒற்றுமை நீதி மற்றும் விடுதலை |
||||||
| நாட்டுப்பண் W:en:Das Lied der Deutschen |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பெர்லின் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | யேர்மன் 1 | |||||
| அரசு | கூட்டாட்சி குடியரசு | |||||
| - | அதிபர் | கிரிஸ்டியன் உல்ஃப் | ||||
| - | முதலமைச்சர் | Angela Merkel | ||||
| - | பதில் முதலமைச்சர் | |||||
| யேர்மன் இராச்சியம் | ||||||
| - | புனித ரோமப் பேரரசு | 843 | ||||
| - | ஒரு குடையாதல் | சனவரி 18 1871 | ||||
| - | கூட்டாட்சி குடியரசு | மே 23 1949 | ||||
| - | மீள் ஒரு குடையாதல் | அக்டோபர் 3 1990 | ||||
| ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு | மார்ச் 25, 1953 | |||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 3,57,050 கிமீ² (63வது) 1,37,858 சது. மை |
||||
| - | நீர் (%) | 2.416 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 82,438,000 (14வது) | ||||
| - | 2000 குடிமதிப்பு | N/A | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $2.522 டிரில்லியன் (5வது) | ||||
| - | நபர்வரி | $30,579 (17வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.930 (high) (10வது) | |||||
| நாணயம் | யூரோ (€) 2 (EUR) |
|||||
| நேர வலயம் | மத்திய ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | மத்திய ஐரோப்பிய கோடை நேரம் (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .de | |||||
| தொலைபேசி | +49 | |||||
| 1 டனிசு மொழி, கீழ் யேர்மன், சோர்பிய மொழி, உறேமானி மொழி, மற்றும் பிரிசியன் மொழி என்பன ஐரோபிய சிறுபான்மை மொழிகளுக்கான மையத்தி மூலம் பாதுகாக்பட்ட மொழிகளாகும். 2 1999க்கு முன்: டொயிசு மார்க் | ||||||
ஜெர்மனி (Germany, [ˈdʒɜːmənɪ] ), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (ஜெர்மானியம்: Bundesrepublik Deutschland (உதவி·விவரம்), IPA: [ˈbʊndəsʁepuˌbliːk ˈdɔʏtʃlant]), என்பது மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ².
ஜி8, ஜி4, நேட்டோ, ஐக்கிய நாடுகள், மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஒரு உறுப்பு நாடாகும். 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது[1].
ஜெர்மனி கிழக்கு-ஜெர்மனி மற்றும் மேற்கு-ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்(Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது.
ஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] செருமனியின் மாநிலங்கள்
| தமிழில் | செருமன் மொழியில் | |||
|---|---|---|---|---|
| செருமனியின் மாநிலங்கள் | தலைநகரம் | Bundesland | Hauptstadt | |
| 1 | பாடன் - வூர்ட்டம்பெர்க் | ஸ்டுட்கார்ட் | Baden-Württemberg | Stuttgart |
| 2 | பயர்ன் | முன்ச்சென் | (Freistaat) Bayern | München |
| 3 | பெர்லின் | - | Berlin | Berlin |
| 4 | பிரண்டென்பேர்க் | போட்ஸ்டம் | Brandenburg | Potsdam |
| 5 | பிறேமன் | பிறேமன் | (Freie Hansestadt) Bremen | Bremen |
| 6 | ஹாம்பேர்க் | - | (Freie und Hansestadt) Hamburg | Hamburg |
| 7 | ஹெஸன் | வீஸ்பாடன் | Hessen | Wiesbaden |
| 8 | மெக்லென்பேர்க் - ஃபோர்போமென் | சுவேரீன் | Mecklenburg-Vorpommern | Schwerin |
| 9 | நீடர்சாக்ஸன் | ஹனோஃபர் | Niedersachsen | Hannover |
| 10 | நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் | டுஸ்சல்டோர்ப் | Nordrhein-Westfalen | Düsseldorf |
| 11 | ரைன்லண்ட் - ஃபால்ஸ் | மைன்ஸ் | Rheinland-Pfalz | Mainz |
| 12 | சார்லாந்த் | சார்புருக்கன் | Saarland | Saarbrücken |
| 13 | சாக்ஸ்சன் | டிரேஸ்டன் | (Freistaat) Sachsen | Dresden |
| 14 | சாக்ஸ்சன் - அன்கால்ட் | மாக்டபேர்க் | Sachsen-Anhalt | Magdeburg |
| 15 | ஷ்லேஸ்விக் - ஹோல்ஷ்டைன் | கீல் | Schleswig-Holstein | Kiel |
| 16 | தூறிங்கென் | ஏர்ஃபூர்ட் | (Freistaat) Thüringen | Erfurt |
நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலைநகரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
[தொகு] ஜெர்மன் மொழி
ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்தக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் [2]. கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்தக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், பாலற்றது எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - பொதுப்பால்) எனும் அடை மொழி சேர்க்கப்படுகின்றது.
இந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றது[3].
[தொகு] முக்கிய ஆறுகள்
ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 865 கி.மீ. நீளம் கொண்டது. எல்ப மற்றும் டணூப ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன.
[தொகு] புகழ் பெற்ற ஜெர்மானியர்கள்
- ஐன்ஸ்டீன்
- பிளாங்க்
- கெப்ளர்
- டீசல்
- போஸ்ச்
- பாரன்ஹட்
- சீமன்ஸ்
- பென்ஸ்
- கார்ல் மார்க்சு
- பிரெட்ரிக் ஏங்கல்ஸ்
- அலெக்ஸாண்டர் ஃபான் ஹம்போல்ட் போன்றோர் ஜெர்மனியில் பிறந்த சில அறிஞர்களாவர்.
- மைக்கேல் ஷுமக்கர் பிரபல கார் பந்தய வீரர் ஆவார்.
- பீத்தோவன் புகழ் பெற்ற செவ்வியல் இசையமைப்பாளர் ஆவார்.
- பொறிஸ் பெக்கர் (Boris Becker) (சிறந்த ரெனிஸ் வீரன்)
- ஸ்ரெபி கிராஃப் (Steffi Graf)(சிறந்த ரெனிஸ் வீராங்கனை)
[தொகு] உணவு
செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், சீஸ், பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண்வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை Abendbrot (இரவுப்பாண்) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை பட்டர், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், சீஸ் போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிளாஸ் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது.
வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு பிரபலம். இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன.
[தொகு] ஜெர்மனியில் கோயில்கள்
ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது [4]. ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர்.
[தொகு] ஜெர்மனியில் கல்வி வாய்ப்புகள்
ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன [5]. அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம்.
- பகுப்பு:செருமன் உயிரியலாளர் பட்டியல்
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Germany: Inflow of foreign population by country of nationality, 1994 to 2003
- ↑ http://german.about.com/library/anfang/blanfang_abc.htm
- ↑ http://www.goethe.de/ins/in/lp/enindex.htm
- ↑ http://www.kamadchi-ampal.de/englisch/index.php
- ↑ http://en.wikipedia.org/wiki/List_of_universities_in_Germany
[தொகு] வெளி இணைப்புகள்
| ஜி8 |
|---|
| கனடா | பிரான்ஸ் | ஜெர்மனி | இத்தாலி | ஜப்பான் | ரஷ்யா | ஐ.இ | ஐ.அ.மா |
|
|||||