அங்கெலா மேர்க்கெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Angela Merkel Juli 2010 - 3zu4.jpg

அங்கெலா டொரோதெயா மேர்கெல் (Angela Dorothea Merkel) (பிறப்பு சூலை 17, 1954) இடாய்ச்சுலாந்து நாட்டின் ஓர் அரசியல்வாதி. கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் (Christian Democratic Union) உறுப்பினரான இவர், அக்கட்சியின் சார்பாக 2005 இடாய்ச்சுலாந்து கூட்டமைப்பு தேர்தல்களில் வேந்தர் (Chancellor) பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எனினும் தேர்தல் முடிவுகள் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை தராத நிலையில், ஜெர்மன் சமூகக் குடியரசுக் கட்சியுடன் மூன்று வாரங்களுக்குத் தொடர்ந்த அதிகாரப் பகிர்வுப் பேச்சுவார்த்தைகளின் முடிவில், மேர்க்கெலை இடாய்ச்சுலாந்தின் அடுத்த வேந்தராக பதவியேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து மேர்க்கெல் இடாய்ச்சுலாந்தின் முதல் பெண் வேந்தராகவும் இடாய்ச்சுலாந்து தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணாகவும் ஆகிறார்.அவருடைய செல்லிடத்தொலைபேசிக்கு வந்த அழைப்புக்களை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக்கேட்டதாக கூறப்படுகிறது.[1]


இளைமைப்பருவ வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

மேர்க்கெல், டெம்ப்லின் என்னும் இடத்திலும் லைப்ஃசிக் பல்கலைக்கழகத்திலும் படித்தார். 1973 முதல் 1978 வரை இயற்பியல் படித்தார். பின்னர் 1978 முதல் 1990 வரை இடாய்ச்சுலாந்தின் இயற்பியல் வேதியியலுக்கான நடுவகத்தில் (Zentralinstitut für physikalische Chemie (ZIPC)) மேர்க்கெல் வேதியியல் (இயற்பியல் வேதியியல்) படிப்பையும் பணியையும் தொடர்ந்தார். உருசிய மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டு குவாண்டம் வேதியியல் தலைப்பில் முனைவர் பட்டம் (Dr. rer. nat.) பெற்றார்[2].

மேற்கோள்களும் உசாத்துணைகளும்[தொகு]

  1. "ஜெர்மன் தலைவர் ஏங்கலா மெர்க்கல் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது". பிபிசி (24 அக்டோபர் 2013). பார்த்த நாள் 24 அக்டோபர் 2013.
  2. Merkel, Angela (1986) (in German). Untersuchung des Mechanismus von Zerfallsreaktionen mit einfachem Bindungsbruch und Berechnung ihrer Geschwindigkeitskonstanten auf der Grundlage quantenchemischer und statistischer Methoden (Investigation of the mechanism of decay reactions with single bond breaking and calculation of their velocity constants on the basis of quantum chemical and statistical methods). Berlin: Academy of Sciences of the German Democratic Republic (dissertation).  cited in Langguth, Gerd (August 2005) (in German). Angela Merkel. Munich: DTV. p. 109. ISBN 3-423-24495-2. , மேலும் இது இடாய்ச்சுலாந்தின் நாட்டகநூலகத்தில், குறியெண் 30 (வேதியியல்)இன் கீழ், பதிவுப்பட்டியலில் உள்ளது


"http://ta.wikipedia.org/w/index.php?title=அங்கெலா_மேர்க்கெல்&oldid=1528447" இருந்து மீள்விக்கப்பட்டது