புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2006ஆம் ஆண்டின் இறுதியில் உங்கெங்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள். Source: REN21[1]
புதுப்பிக்கத்தக்க
ஆற்றல்
காற்றாலை
காற்றாலை
உயிரி எரிபொருள்
உயிர்த்திரள்
புவிவெப்பம்
நீர்மின்சாரம்
சூரிய ஆற்றல்
நீர்ப்பெருக்கு
ஆற்றல்

அலை ஆற்றல்
காற்றுத் திறன்
காற்றுமின்சாரம், சூரிய ஆற்றல், நீர்மின்சாரம் ஆகியவை வளர்ந்துவரும் மூன்று புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் ஆகும்

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (renewable energy) என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவி வெப்பம் போன்ற புதுப்பிக்கத் தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும். புதுப்பிக்கத் தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், காற்று ஆற்றல், நீர்மின்சாரம், உயிர்த்திரள் ஆற்றல், உயிரெரிபொருட்கள் என்பவற்றை உள்ளடக்கி உள்ளது.]].[2] புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நான்கு முதன்மையான பயன்பாடுகளுக்குப் பயன்படுகிறது. அவை மின்னாக்கம், அறை வெப்பமூட்டல், நீர்ச் சூடாக்கல்/குளிர்த்தல், போக்குவரத்து, ஊரக மின் தடங்கல் நேர ஆற்றல் பயன்பாடுகள் போன்றவையாகும்.[3]

2006 ஆம் ஆண்டில் சுமார் 18% உலக ஆற்றல் நுகர்வு புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்டது. இதில் 13% விறகுகள் போன்ற உயிர்த்திரள் மூலங்களிலிருந்து கிடைத்தது. அடுத்ததாக நீர்மின்சாரம் 3% ஆகவும், சுடுநீர்/வெப்பமாக்கல் 1.3% ஆகவும் இருந்தது. புதிய தொழில் நுட்பங்களான புவி வெப்பம், காற்று, சூரிய ஒளி, கடல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் ஆற்றல் 0.8% ஆகக் காணப்பட்டது. தொழில் நுட்ப அடிப்படையில் இவற்றிலிருந்து கிடைக்கக்கூடிய ஆற்றலின் அளவு மிகப் பெரியது.(சான்று தேவை) அல்லது [மேற்கோள் தேவை]

உலக REN21 நிறுவன 2016 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி, உலக ஆற்றல் நுகர்வில் 19.2% அளவுக்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளம் அமைந்துள்ளது. இதில் 23.7% அளவு மின்னாக்கப் பயன்பாடாக 2014, 2015 ஆம் ஆண்டுகளில் அமைந்தது. இந்த வகை ஆற்றல் 8.9% அளவுக்கு உயிர்க்கூள ஆற்றல் வழியாகவும் 4.2% அளவுக்கு வெப்ப ஆற்றலாகவும் (உயிர்க்கூள வெப்பம், புவி வெப்பம், சூரிய வெப்பம்) 3.9% நீர்மின்சாரமாகவும் 2.2% காற்றுமின் திறனாகவும் சூரியமின் ஆற்றலாகவும் புவி வெப்பமின் ஆற்றலாகவும் உயிரிக்கூள மின் ஆற்றலாகவும் அமைந்துள்ளன. இவ்வகை ஆற்றலில் உலகின் முதலீடு 2015 இல் 286 பில்லியன் அமெரிக்க டாலரினும் கூடுதலாக இருந்தது. சீனாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் காற்று, நீர், சூரிய, உயிரிப்பொருண்மை ஆற்றல் துறையில் பேரளவில் முதலீடு செய்யப்பட்டது.[4] உலகளாவிய நிலையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் 7.7 மில்லியன் வேலைகள் உருவாகியுள்ளன. இதில், சூரிய ஒளிமின் திறனில் பேரளவு முதலீடு செய்யப்படுகிறது.[5] உலக முழுவதிலும் 2015 ஆம் ஆண்டில் உருவாகிய புதிய மின்னாற்றலில் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் 50 % ஆக அமைந்துள்ளது.[6]

சில நாடுகளில் மட்டுமே பெருகிச் செறிவாகிவரும் மரபு ஆற்றல் வளங்களைக் காட்டிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் புவியெங்கும் பல ஏழைநாடுகளிலும் பரவியுள்ளன. விரைந்து புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பெருக்கம் ஆற்றலைப் பயன்படுத்துவதில் சிக்கனத்தையும் கணிசமான அளவு காப்புறுதியையும் தருவதோடு, காலநிலை மாற்றத்தைத் தவிர்த்துப் பொருளியலாக மேம்பாடானதாகவும் விளங்குகிறது.[7] அண்மைய துறை இலக்கிய மீள்பார்வை முடிவுகள்[8] பசுங்குடில் வளிம உமிழ்விகள் காலநிலை மாற்றத்தை விளைவிப்பதால், இதைத் தவிர்க்க புதுபிக்கத்தக்க ஆற்றல் வளத்தில் பேரளவு முதலீடு செய்வதையும் அத்தொழில்நுட்பங்களை ஊக்குவிப்பதிலும் உலக மக்கள் பேராதரவு தருகின்றனர். குறிப்பாக சூரிய ஆற்றலிலும் காற்றின் ஆற்றலிலும் முதலீடு செய்வதை வரவேற்கின்றனர்.[9]> உலகின் ஏறத்தாழ, 30 நாடுகள் 20% அளவு நாட்டின் ஆற்றல் வளத்தில் புதுபிக்கத்தக்க ஆற்றல் வளத்தைப் பெற்றுள்ளன. வரும் பத்தாண்டுகளிலும் அப்பாலும் இவ்வகை ஆற்றல் வளத்தின் தேசியச் சந்தைகள் தொடர்ந்து பெருகும் என முன்கணிப்புகள் தெரிவிக்கின்றன.[10] சில நாடுகளில், குறிப்பாக ஐசுலாந்திலும், நார்வேயிலும் ஏற்கெனவே நாட்டின் முழு ஆற்றல் பயன்பாட்டுக்கும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் வளத்தையே பயன்படுத்துகின்றன.[11][12] மேலும் பல நாடுகள் எதிர்காலத்தில் இத்தகைய இலக்கை அடையத் திட்டம் இட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, டென்மார்க் நாட்டு அரசு 2050 அளவில் தன் மின்சாரம், போக்குவரத்து, வெப்பமூட்டல், குளிர்த்தல் பணிகளுக்கான அனைத்து ஆற்றல் வளத்தையும் புதுபிக்கத்தக்க ஆற்றல் கொண்டே நிறைவு செய்ய முடிவு செய்துள்ளது.[13]

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத் திட்டங்கள் பேரளவினதாக இருந்தாலும் இவை ஊரகப் பகுதிகளுக்கும் அணுகவியலாத தொலைவிடங்களுக்கும் ஏற்றவையாகவே அமைகின்றன. எனவே, வளரும் நாடுகளின் ஆற்றல் மனிதவள மேம்பாட்டுக்குப் பரவலாகத் தேவைப்படுவதால் அந்நாடுகளுக்கு இது மிகவும் பயன்மிக்க ஆற்றல் வளமாகும்.[14]

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பத் திட்டங்கள் பேரளவினதாக இருந்தாலும் இவை ஊரகப் பகுதிகளுக்கும் அணுகவியலாத நெடுந்தொலைவு இடங்களுக்கும் ஏற்றவையாகவே அமைகின்றன. எனவே, வளரும் நாடுகளின் ஆற்றல் மனிதவள மேம்பாட்டுக்குப் பரவலாகத் தேவைப்படுவதால் அந்நாடுகளுக்கு இது மிகவும் பயன்மிக்க ஆற்றல் வளமாகும்.[14] பன்னாட்டவைப் பொதுச் செயலாளர் பாங்கி மூன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஏழை நாடுகளை புதிய முன்னேற்ற மட்டங்களுக்குக் கொண்டுசெல்லும் திறமை வாய்ந்ததாகும் எனக் கூறியுள்ளார்.[15] அனைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களும் மின்னாக்கத்துக்கே பெரும்பாலும் பயன்படுவதால் இம்முயற்சி நாடுமுழுவதையும் மின்மயமாக்கப் பெரிதும் உதவும். மின்மயமாக்கத்தால் பல நன்மைகள் உண்டு. அதை வெப்பமாகவோ இயக்க ஆற்றலாகவோ மாற்றலாம். இது நுகர்வுப்புள்ளியில் மாசை ஏற்படுத்துவதில்லை[16][17] மின்மயமாக்கத்துக்கு உதவுவதோடு, தன் உயர் ஆற்றல்மாற்றத் திறமையால் முதன்மை ஆற்றல் தேவையைக் குறைக்கிறது. ஏனெனில் அனைத்து புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களிலும் 40% முதல் 60% வரையிலான இழப்பு அமைந்த கார்னோ அல்லது இராங்கைன் வட்டிப்பு அமைதல் இல்லை.[18]

புதுபிக்கத்தக்க ஆற்றல் அமைப்புகள் இப்போது மிகவும் சிக்கனமானதாகவும் திறமையானதாகவும் மாறிவருகின்றன. மொத்த ஆற்றல் நுகர்வில் இதன் பங்களிப்பு தொடர்ந்து கூடிக்கொண்டே வருகிறது. நிலக்கரி, எண்ணெயின் நுகர்வின் வளர்ச்சி 2020 அளவில் பெரிதும் கட்டுப்பட்டுவிடும். மாற்றாக பெருமளவில் சூரிய ஆற்றலும் காற்றின் ஆற்றலுமே அமையும்.[19][20]

பருந்துப்பார்வை[தொகு]

ஆற்றல் வளம் வாரியாக உலக ஆற்றல் நுகர்வு. 2012 இல் 19% புதுபிக்கத்தக்க ஆற்றலாகும்.
உலகின் மிகப்பெரிய சூரியமின் திறன் படகான துரானோர் புவிக்கோள் சூரியப் படகு. நமது புவியுலகைச் சுற்றும் முதல்மின்னூர்திக் கலம், 2012

பன்னாட்டு ஆற்றல் முகமையம் பின்வருமாறு கூறுவது போல, சூரிய ஒளி, காற்று, கடல் ஓதங்கள், கடல் அலைகள், உயிரிக்கூளம், புவி வெப்ப ஆற்ரல் போன்ற இயற்கை ஆற்றல்களை தன் அக ஆற்றலாகப் பயன்படுத்துகிறது.[21]

புதுபிக்கத்தாக ஆற்றல் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் இயற்கை நிகழ்வுகளில் இருந்து பெறப்படுகிறது. இதன் பல்வேறு வடிவங்களாக சூரிய ஒளியும் புவியகத்தில் உருவாகும் வெப்பமும் அமைகின்றன.மேலும் இவற்றில் கடலின் ஓத ஆற்றலும் அலை ஆற்றலும் நீர்மின்சாரமும் உயிர்க்கூளமும் உயிரி எரிமங்களும் புதுபிக்கத்தக்க வளங்களில் இருந்து பெறப்படும் நீரகமும் அடங்கும்.

சில நாடுகளில் மட்டுமே செறிந்துள்ள பிற ஆற்றல் வழிகளைவிட, புதுப்பிக்கத்தக்க வளங்களும் அவற்றைத் திறம்பட பயன்படுத்தும் வாய்ப்புகளும் நம் புவிக்கோளம் முழுவதிலும் அகல்விரிவாகப் பரவியமைகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றலையும் ஆற்றல் திறமையையும் வேகமாக வளர்த்தலும் ஆற்றல் வளங்கள் சார்ந்த தொழில்நுட்பங்களின் பன்முகமாக்கமும் கணிசமான ஆற்றல் காப்புறுதியை உருவாக்குவதோடு பேரளவுப் பொருளியலான நலங்களையும் நல்கும்.[7] புதைபடிவ எரிமங்களை எரிப்பதால் உருவாகும் காற்று மாசையும் சுற்றுச்சூழல் மாசையும் குறைத்துப் பொது உடல்நல வாழ்வை மேம்படுத்தி மாசுதரும் இறப்பு வீததையும் குறைக்கும். மேலும் ஐக்கிய அமெரிக்காவில் மட்டுமே ஒவ்வோராண்டும் இதனால் ஏற்படும் உடல்நலச் செலவும் குறைத்து பல நூறு பில்லியன் டாலர் பணத்தை மிச்சப்படுத்தும்.[22] சூரியனில் இருந்து நேரடியாகவோ அல்லது நீர் வளம் , காற்று வளம் போன்று மறைமுகமாகவோ பெறும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் தொடர்ந்து ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு மாந்தரினத்துக்கு ஆற்றலை வழங்கிவரும். பின்னர் உருவாகிடும் சூரியவெப்ப மதிப்பீடு புவிப்பரப்பு வெப்பநிலையைப் பேரளவில் உயர்த்தி புவியில் நீர்ம நிலையில் நீரே இல்லாமல் ஆக்கிவிடும்.[23][24]

மேற்கோள்கள்[தொகு]

  1. உலக நிகழ்நிலை அறிக்கை 2007 பரணிடப்பட்டது 2008-05-29 at the வந்தவழி இயந்திரம் (PDF).
  2. Ellabban, Omar; Abu-Rub, Haitham; Blaabjerg, Frede (2014). "Renewable energy resources: Current status, future prospects and their enabling technology". Renewable and Sustainable Energy Reviews 39: 748–764 [749]. doi:10.1016/j.rser.2014.07.113. 
  3. REN21 (2010). Renewables 2010 Global Status Report p. 15.
  4. REN21, Global Status Report 2016. Retrieved 8th June 2016.
  5. IRENA, Renewable energy and jobs, Annual review 2015, IRENA.
  6. Vaughan, Adam (25 October 2016). "Renewables made up half of net electricity capacity added last year" – via The Guardian.
  7. 7.0 7.1 International Energy Agency (2012). "Energy Technology Perspectives 2012" (PDF).
  8. Heidari, Negin; Pearce, Joshua M. (2016). "A Review of Greenhouse Gas Emission Liabilities as the Value of Renewable Energy for Mitigating Lawsuits for Climate Change Related Damages". Renewable and Sustainable Energy Reviews 55C: 899–908. doi:10.1016/j.rser.2015.11.025. https://www.academia.edu/19418589/A_Review_of_Greenhouse_Gas_Emission_Liabilities_as_the_Value_of_Renewable_Energy_for_Mitigating_Lawsuits_for_Climate_Change_Related_Damages. 
  9. "Global Trends in Sustainable Energy Investment 2007: Analysis of Trends and Issues in the Financing of Renewable Energy and Energy Efficiency in OECD and Developing Countries" (PDF). unep.org. United Nations Environment Programme. 2007. p. 3. Archived from the original (PDF) on 13 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 October 2014.
  10. REN21 (2013). "Renewables global futures report 2013" (PDF).{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Renewable Energy Seen as an Opportunity for the European Arctic". Arctic Deeply. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2017.
  12. "Environmental considerations in the Arctic: Sustainable resource exploitation" (PDF). The Bellona Foundatio. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2017.
  13. Brian Vad Mathiesen et al. (2015). "Smart Energy Systems for coherent 100% renewable energy and transport solutions". Applied Energy 145: 139–154. doi:10.1016/j.apenergy.2015.01.075. 
  14. 14.0 14.1 World Energy Assessment (2001). Renewable energy technologies பரணிடப்பட்டது 9 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம், p. 221.
  15. Steve Leone (25 August 2011). "U.N. Secretary-General: Renewables Can End Energy Poverty". Renewable Energy World.
  16. Nicola Armaroli; Vincenzo Balzani (2011). "Towards an electricity-powered world". Energy and Environmental Science 4: 3193–3222. doi:10.1039/c1ee01249e. 
  17. Armaroli, Nicola; Balzani, Vincenzo (2016). "Solar Electricity and Solar Fuels: Status and Perspectives in the Context of the Energy Transition". Chemistry – A European Journal 22: 32–57. doi:10.1002/chem.201503580. 
  18. Volker Quaschning, Regenerative Energiesysteme. Technologie – Berechnung – Simulation. 8th. Edition. Hanser (Munich) 2013, p. 49.
  19. Electric cars and cheap solar 'could halt fossil fuel growth by 2020' தி கார்டியன்
  20. http://www.carbontracker.org/wp-content/uploads/2017/02/Expect-the-Unexpected_CTI_Imperial.pdf pg3 & pg30
  21. IEA Renewable Energy Working Party (2002). Renewable Energy... into the mainstream, p. 9.
  22. Mark Z. Jacobson et al. (2015). ": 100% clean and renewable wind, water, and sunlight (WWS) all-sector energy roadmaps for the 50 United States". Energy and Environmental Science 8: 2093–2117. doi:10.1039/C5EE01283J. 
  23. Schröder, K.-P.; Smith, R.C. (2008). "Distant future of the Sun and Earth revisited". Monthly Notices of the Royal Astronomical Society 386 (1): 155–163. doi:10.1111/j.1365-2966.2008.13022.x. Bibcode: 2008MNRAS.386..155S.  See also Palmer, J. (2008). "Hope dims that Earth will survive Sun's death". New Scientist இம் மூலத்தில் இருந்து 17 மார்ச் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080317001540/http://space.newscientist.com/article/dn13369-hope-dims-that-earth-will-survive-suns-death.html?feedId=online-news_rss20. பார்த்த நாள்: 24 March 2008. 
  24. Carrington, D. (21 February 2000). "Date set for desert Earth". BBC News. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/specials/washington_2000/649913.stm. பார்த்த நாள்: 31 March 2007.