ஆசுதிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Republik Österreich
ஆசுதிரியக் குடியரசு
ஆசுதிரியாவின் கொடி ஆசுதிரியாவின் சின்னம்
நாட்டுப்பண்
Land der Berge, Land am Strome  (ஜெர்மன்)
மலைகளின் நாடு, ஆறுகள் சூழப்பட்ட நாடு


Location of ஆசுதிரியாவின்
அமைவிடம்: ஆசுதிரியா  (dark green)

– on the European continent  (light green & dark grey)
– in ஐரோப்பிய ஒன்றியத்தில்  (light green)  —  [Legend]

தலைநகரம் வியன்னா
48°12′N 16°21′E / 48.200°N 16.350°E / 48.200; 16.350
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஜெர்மன்,
ஸ்லோவேன் , குரேசியன் மற்றும் ஹங்கேரியன்
மக்கள் ஆஸ்திரியர்கள்
அரசு கூட்டாட்சி பாராளுமன்றக் குடியரசு
 -  குடியரசுத்தலைவர் எய்ன்ஸ் பிஷர்
 -  சான்ஸ்லர் வெர்னர் ஃபேமன்
தன்னாட்சி
 -  ஆஸ்திரிய அரச உடன்பாடு அமலில் உள்ளது.
ஜூலை 27, 1955 
 -  நடுநிலைமை அறிவிப்பு அக்டோபர் 26, 1955 (முன்பு: ஆஸ்திரியப் பேரரசு: 1804, முதல் ஆஸ்திரியக் குடியரசு: 1918) 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு ஜனவரி 1, 1995
பரப்பளவு
 -  மொத்தம் 83,872 கிமீ² (115வது)
32 சது. மை 
 -  நீர் (%) 1.7
மக்கள்தொகை
 -  2007 மதிப்பீடு 8,316,487 (93வது)
 -  2001 குடிமதிப்பு 8,032,926 
 -  அடர்த்தி 99/கிமீ² (99வது)
257/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2008 கணிப்பீடு
 -  மொத்தம் $317.007 பில்லியன்[1] (34வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $39,647[1] (IMF) (8வது)
மொ.தே.உ(பொதுவாக) 2008 மதிப்பீடு
 -  மொத்தம்l $371.219 பில்லியன்[1] (23வது)
 -  ஆள்வீத மொ.தே.உ $44,851[1] (IMF) (12வது)
ஜினி சுட்டெண்? (2000) 29.1 (low
ம.வ.சு (2005) Green Arrow Up Darker.svg 0,951 (உச்சம்) (14வது)
நாணயம் யூரோ () ² (EUR)
நேர வலயம் CET (ஒ.ச.நே.+1)
 -  கோடை (ப.சே.நே.) CEST (ஒ.ச.நே.+2)
இணைய குறி .at ³
தொலைபேசி +43
1 ஸ்லோவேன், குரேஷியன், ஹங்கேரியன் என்பன அதிகாரபூர்வமான பிராந்திய மொழிகளாகும்.
2 1999 முன்பு: ஆஸ்டிரியன் ஷில்லிங்.
3 .eu ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்பட்டுள்ளது.

ஆசுதிரியா (Austria இந்த ஒலிக்கோப்பு பற்றி /ˈɔːstriə/) என்பது ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே ஜெர்மனி, செக் குடியரசு, கிழக்கே சிலவாக்கியா, ஹங்கேரி, தெற்கே சிலவேனியா, இத்தாலி, மேற்கே சுவிட்சர்லாந்து, லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இதன் அரசியல் தலைநகர் வியென்னா ஆகும். இலங்கை தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. இது மலைத்தொடர்கள் பல உள்ள ஒரு அழகான நாடு ஆகும்.

வரலாறு[தொகு]

பண்டைய காலம்[தொகு]

பண்டைய காலத்தில் நீண்ட காலத்துக்கு முன் பல மனிதக் குடியிருப்புக்கள் இருந்த இடமே தற்போது ஆசுதிரியாவாக உள்ளது. முதல் குடியேறிகள் குடியேறியது பழைய கற்காலத்திலேயே ஆகும். அது நியண்டர்தால் மனிதனின் காலம் ஆகும். கற்காலத்தில் மக்கள் அங்கு செப்பு போன்ற கனிய வளங்களை தோண்டுவதற்காகவே வாழ்ந்து வந்தனர். பண்டைய ஆசுதிரியாவில் ஏட்சி எனும் ஒருவகை பனிமனிதன் இத்தாலிக்கும் ஆசுதிரியாவுக்கும் இடையில் ஒடும் பனியாற்றில் கண்டுபிடிக்கப்பட்டான். வெண்கலக் காலத்தில் மக்கள் பெரிய குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் கட்டினர், குறிப்பாக கனிய வளங்கள் எங்கு அதிகமாகக் காணப்பட்டதோ அவ்விடங்களுக்கு அருகில் குடியிருப்புக்களையும் கோட்டைகளையும் அமைத்துக்கொண்டனர். அவர்கள் ஆசுதிரியாவின் மேல்பகுதியில் உப்புச் சுரங்கங்களையும் அமைக்கத் தொடங்கினர்.

ரோமானியர்கள்[தொகு]

ரோமானிய நகரங்களும் அவற்றின் நவீன பெயர்களும்[தொகு]

ரோமானியர்களால் நவீன ஆசுதிரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் வரைபடம்

ரோமானியர்கள் ஆசுதிரியாவுக்கு கி.மு. பதினைந்தாம் ஆண்டில் வந்தார்கள், இவர்களின் வருகையின் பின் ஆசுதிரியா மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நவீன ஆசுதிரியா மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது, அவையாவன,

  • ரேட்டியா (Raetia)
  • நொரிசும் (Noricum)
  • பனோனியா (Pannonia) என்பவையாகும்.

நவீன நேரங்களில்[தொகு]

நவீன காலங்களில் ஆசுதிரியா ஆசுதிரிய பேரரசால் ஆளப்பட்டு வந்தது. இக்காலம் கிமு 800க்கும் 1918க்கும் இடைப்பட்ட காலமாகும். இது அக்காலங்களில் ஆசுதிரியா பேரளவாக ஹப்ஸ்பர்க் அரச வம்சத்தினாலேயே ஆளப்பட்டு வந்தது.

சமயங்கள்[தொகு]

இருபதாம் நூற்றாண்டின் முடிவில் எழுபத்து நான்கு வீதமான மக்கள் சனத்தொகை ரோமன் கத்தோலிக்கமாகவே காணப்பட்டது.

புவியியல்[தொகு]

எல்லைகள்[தொகு]

ஆசுதிரியாவின் எல்லைநாடுகள்

ஆசுதிரியா ஏழு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. வடக்குத் திசையில் செக் குடியரசும், கிழக்குத் திசையில் சிலோவாக்கியா மற்றும் ஹங்கேரியும், தெற்குத் திசையில் சிலோவேனியா மற்றும் இத்தாலியும் மேற்கு வடமேற்குத் திசைகளில் முறையே சுவிஸ்ர்லாந்தும், செருமனியும் உள்ளன.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

ஆசுதிரியா ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த ஒன்பது பிரிவுகளும் மாவட்டங்களாகவும் சட்டரீதியான நகரங்களாகவும் (statutory cities) பிரிக்கப்பட்டுள்ளன. மாவட்டங்கள் நகராட்சி மன்றங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வார்ப்புரு:Austrian Federal States

மாநிலம் தலைநகரம் பரப்பளவு (sq km) சனத்தொகை
புர்கென்லான்ட் (Burgenland) ஏய்சென்ச்டட்ர் (Eisenstadt) 3,966 286,215
கரின்தையா(Carinthia) க்லஜென்ஃபுர்ட் (Klagenfurt) 9,536 557,773
கீழ் ஆசுதிரியா (Lower Austria) சன்க்ட் பொல்ட்டென்(Sankt Pölten) 19,174 1,617,455
சல்பேர்க் (Salzburg) சல்பேர்க் (Salzburg) 7,154 534,122
சிடிரியா(Styria) க்ராஸ்(Graz) 16,392 1,213,255
டைரொல் (Tyrol) இன்ஸ்புரக் (Innsbruck) 12,648 714,449
மேல் ஆசுதிரியா (Upper Austria) லின்ஸ் (Linz) 11,980 1,416,772
வியன்னா 414 1,731,236
வொரர்ல்பேர்க் (Vorarlberg) பிரெக்ன்ஸ் (Bregenz) 2,601 371,741


படத் தொகுப்பு[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Austria, economic data


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஆசுதிரியா&oldid=1748193" இருந்து மீள்விக்கப்பட்டது