பொதுவுடைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொதுவுடைமை
Hammer and sickle.svg

கம்யூனிசம் அல்லது பொதுவுடைமை (Communism) என்பது ஒரு அரசியல் பொருளாதாரக் கோட்பாடு. இது கருத்தியல் நோக்கில் வர்க்கம் சமுதாயத்தை அமைப்பதை நோக்கமாகக் கொண்டது. இது ஏகாதிபத்திய, முதலாளித்துவ தத்துவங்களின் குறைபாடுகளுக்கான ஒரு தீர்வாக பல பொதுவுடமைவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.

பொருளடக்கம்

பொதுவுடமைச் சமூகத்தின் பண்புகள் [தொகு]

பொதுவுடமை சமூகத்தில்,

  • உற்பத்தி மார்க்கம், உடமைகள் என்பவற்றை அரசு மக்களின் சார்பில் பொது உடமையாக வைத்திருக்கும்.
  • எதை, எப்படி உற்பத்தி செய்வது என்பதை அரசின் வல்லுனர் குழு ஒருமையப்படுத்தப்பட்ட முறையில் தீர்மானிக்கும்.
  • மக்கள் உழைத்து தமக்குரிய பொருளாதார பங்கை பெறுவர். அப்பங்கு பங்களிப்பின் அடைப்படையில் அமையாமல், எல்லோருக்கும் சமமாக இருக்கும்.

கொள்கை நோக்கில் பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால், சமூகத்தின் வளங்களும், செல்வங்களும் தனிமனித முதலாளிகளிடம் முடக்கப்படுவது தவிர்க்ப்படுகிறது என்றும், இந்த வளங்களைக் கொண்டு பொதுவாக ஏகாதிபத்திய,முதலாளித்துவ சமூக கோட்பாடுகளால், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட உழைக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுத்தப்படுகிறது என்றும் இக்கொள்கை உரைக்கின்றது.

ஹொங்கொங் ஆட்சிப் பகுதியும் சீன பொதுவுடைமை கொள்கையும் [தொகு]

சீன பொதுவுடைமை ஆட்சி குறித்து ஹொங்கொங் சீன ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட கருத்துச்சித்திரம். நெற்றியில் நட்சத்திரமும், உலகை சரியானப் பார்வையில் பார்க்க முடியாமல் கறுப்பு கண்ணாடியணிந்த, கையில் கைக்குண்டுகளை தாங்கிய பன்றிகளாக பொதுவுடைமைவாதிகளை சித்தரிக்கும் கருத்துச் சித்திரம்

ஹொங்கொங் சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். இருப்பினும் சீனாவின் பொதுவுடைமை கொள்கைகளுக்கு ஹொங்கொங் மக்களிடையே ஆதரவு இல்லை. பிரித்தானியர் வசம் திறந்தப் பொருளாதாரக் கொள்கையுடன் இருந்த ஹொங்கொங், 1997ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை சீனாவிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து சீனாவின் பொதுவுடைமை கொள்கைகளை ஏற்க விரும்பாத ஹொங்கொங் மக்கள் ஹொங்கொங்கை விட்டு வெளிநாடுகளுக்கு செல்ல ஆரம்பத்தினர். இதனால் சீனா "ஒரு நாடு இரு கொள்கை" எனும் உடன்படிக்கையை கைசாத்திட்டது. அதனைத் தொடர்ந்து சீனா தனது நீன பொதுவுடைமை கொள்கை கொண்டிருக்கும் அதே நேரம் ஹொங்கொங் திறந்த பொருளாதாரக் கொள்கையை கொண்டிருக்கலாம் என்பதும் நடைமுறைப் படுத்தப்பட்டது.

சீனாவில் பொதுவுடைமை மறுமலர்ச்சி தோன்றியப்போது சீனர்கள் எல்லோரும் அதனை ஆதரிக்கவில்லை. அதனால் பொதுவுடைமை ஆட்சி தோன்றும் போதே ஹொங்கொங், மக்காவு போன்ற பகுதிகளின் அன்மித்த குவாங்தோவ் மகாண மக்கள் ஹொங்கொங், மக்காவ் போன்ற நாடுகளில் இலட்சக் கணக்கில் தஞ்சம் புகுந்தனர். பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றும் போது வெறும் 7,000 மீனவர்கள் மட்டுமே இருந்த ஹொங்கொங் மக்கள் தொகை இன்று மில்லியன் கணக்கில் உயர்ந்ததே, சீனாவில் பொதுவுடைமை விரும்பாக, ஏற்காத மக்களின் ஹொங்கொங் வருகையின் பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது. இன்று சீன பொதுவுடைமைவாதிகள் ஹொங்கொங்கில் ஊடுருவியிருந்தப் போதும், இதுவரை ஹொங்கொங் சீன மக்களிடம் பொதுவுடைமை கொள்கைக்கு போதிய ஆதரவு இல்லை.

விமர்சனங்கள் [தொகு]

நடைமுறையில் பொதுவுடமைக் கொள்கைகள் பல நாடுகளில் சர்வதிகார அரசுக்கும், மந்தையான பொருளாதாரத்துக்கும் வழிகோலியுள்ளன. (எ. கா) சோவியத் யூனியன், கியூபா, வட கொரியா.

பொதுவுடமைப் பொருளாதார முறையில் அனைத்தும் அரசே முடிவெடுப்பதால் தனிமனிதத் தொழில் முனைவுகள், முயற்சிகள், உந்தல்கள் மழுங்கடிக்கப்படுவதாகக் கருதப்படுகின்றது. அரசிடம் அதிகாரம் குவிவதால் ஊழல், அதிகார துர்ப்பிரயோகத்திற்கும் இத்தத்துவம் வழி கோலுகின்றதெனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

பொதுவுடைமைக் கொள்கைகளை கொண்டிருக்கும் நாடுகளான சோவியத் யூனியன், சீனா போன்ற நாடுகளில் பொது மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாத வகையில் ஊடக முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சீனா போன்ற நாடுகளின் நடக்கும் பல்வேறு அநியாயங்கள் வெளியுலகு தெரியாமல் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன. மனிதவுரிமைகள் தொடர்பான மக்கள் புரிதலுக்கோ தேடலுக்கோ கூட வழிகள் இல்லை. இணையத்திலும் கூட மனிதவுரிமைகள் தொடர்பான உள்ளடக்கங்கள் மக்களுக்கு எட்டாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கை போன்ற நாடுகளில் பாரிய இனவழிப்புகள் நடைப்பெற்றப் போதும் ஒருதுளியேனும் மனிதத்தன்மையின்றி, இனவழிப்புக்களுக்கு எதிராக ஒரு அறிக்கையேனும் விடாமல், மாறாக இனவழிப்பை மேற்கொண்டவர்களுக்கு இந்த பொதுவுடைமை கொள்கை நாடுகள் ஆதரவாக இருந்து வந்துள்ளன. இன்றும் கூட இலங்கையில் நடந்த போர்குற்றங்களுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் எடுக்கும் முன்னெடுப்புகளையும் எடுக்கவிடாமல் தடுத்தும் வருகின்றன.

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பொதுவுடைமை&oldid=1421412" இருந்து மீள்விக்கப்பட்டது