மா சே துங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மா சே துங்

மா சே துங்கின் 1967 அலுவல்முறை ஓவியம்

பதவியில்
மார்ச்சு 20, 1943 – செப்டம்பர் 9, 1976
(&&&&&&&&&&&&&033.&&&&&033 ஆண்டுகள், &&&&&&&&&&&&0173.&&&&&0173 நாட்கள்)
லியு சோகி
லின் பியோ
சோ என்லாய்
உவா கோஃபெங்
முன்னவர் சாங் வென்டியன்
(சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளராக)
பின்வந்தவர் உவா கோஃபெங்

பதவியில்
ஆகத்து 23, 1945 – 1949
செப்டம்பர் 8, 1954 – செப்டம்பர் 9, 1976
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் உவா கோஃபெங்

முதல் தேசிய சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுக் குழுத் தலைவர்
பதவியில்
செப்டம்பர் 21, 1949 – திசம்பர் 25, 1954
கௌரவ தலைவர்
திசம்பர் 25, 1954 – செப்டம்பர் 9, 1976
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் சோ என்லாய்

பதவியில்
செப்டம்பர் 27, 1954 – ஏப்ரல் 27, 1959
Deputy சூ தே
முன்னவர் பதவி உருவாக்கப்பட்டது
பின்வந்தவர் லியு சோகி

தேசிய மக்கள் காங்கிரசு உறுப்பினர்
பதவியில்
15 செப்டம்பர் 1954 – 18 ஏப்ரல் 1959
21 திசம்பர் 1964 – 9 செப்டம்பர் 1976
Constituency பெய்ஜிங் (54–59,64–76)
அரசியல் கட்சி சீனப் பொதுவுடமைக் கட்சி

பிறப்பு திசம்பர் 26, 1893(1893-12-26)
ஷோஷன், ஹுனன், சீனா
இறப்பு செப்டம்பர் 9 1976 (அகவை 82)
பெய்ஜிங், சீன மக்கள் குடியரசு
தேசியம் ஆன் சீனர்
வாழ்க்கைத்
துணை
லுவோ யிக்சி (1907–1910)
யாங் கைஹுயி (1920–1930)
ஹே சிசேன் (1930–1937)
ஜியாங் சிங் (1939–1976)
கையொப்பம் மா சே துங்'s signature

மா சே துங் (Sound மாவ் ட்சேடுங், Mao Zedong, டிசம்பர் 26, 1893செப்டம்பர் 9, 1976) சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி ஆவார். இவர், பல நூற்றாண்டு கால அன்னிய ஆக்கிரமிப்புக்கு பின், இருபதாம் நூற்றாண்டில் சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் முன்னின்று நடத்தினார். சீன உள்நாட்டுப் போரில், குவோமின்டாங்கை (Kuomintang) எதிர்த்து சீனப் பொதுவுடமைக் கட்சி வெற்றி கண்டது. இதன் பின், அக்டோபர் 1, 1949 அன்று பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பெய்ஜிங் தியனெமன் சதுக்கத்தில் இருந்து, சீன மக்கள் குடியரசு நிறுவப்படுவதை மாவ் அறிவித்தார்.

[தொகு] இளமை

1893 ஆம் ஆண்டில்சீனாவில் 'ஹூனான்' என்ற கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஓரளவு வதியான ஒரு குடியானவர். சீனாவை 17 ஆம் நூற்றாண்டு முதல் ஆண்டு வந்த ஷிங் மரபின் அரசு சீர்கேடுகளுக்கெதிராக 1911 இல் ஒரு புரட்சி மூண்டது. அப்போது மா-சே-துங் 18 வயது மாணவராக இருந்தார். இந்தப் புரட்சி மூண்ட சில மாதங்களுக்குள்ளே ஷிங் அரசு கவிழ்க்கப்பட்டது. சீனா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த புரட்சியால், சீனாவில் ஒரு நிலையான, ஒற்றுமையான அரசை ஏற்படுத்த முடியவில்லை. இது நீண்ட காலக் குழப்பத்திற்கும், உள்நாட்டுப் போருக்கும் வித்திட்டது. இந்த நிலைமை 1949 வரையிலும் நீடித்தது. இளைஞர் மா-சே-துங்கை இடதுசாரி அரசியல் கொள்கைகள் மிகவும் கவர்ந்தன. 1920 ஆம் ஆண்டில் அவர் கொள்கைப் பற்று மிகுந்த ஒரு பொதுவுடைமையாளராக விளங்கினார். 1921 ஆம் ஆண்டில் சீனப் பொதுவுடைமைக் கட்சியைத் தோற்றுவித்த 12 பெருந்தலைவர்களுள் ஒருவராக மா-சே-துங் திகழ்ந்தார்.

[தொகு] ஆட்சி

ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி பல எதிர்ப்புகளுக்கிடையில் படிப்படியாக முன்னேறிக் கொண்டிருந்தது. 1927 ஆம் ஆண்டிலும், 1934 ஆம் ஆண்டிலும் இக்கட்சிக்குப் பெருந்தோல்விகள் ஏற்பட்டன. 1935 ஆம் ஆண்டுக்குப் பிறகு மா-சே-துங் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அதன் பின் கட்சியின் வலிமை படிப்படியாக வளர்ந்தது. 1974 ஆம் ஆண்டில் அப்போது சியாங்-கே ஷாக் தலைமையிலிருந்த தேசிய அரசை எதிர்த்து ஒரு பெரும் போரைத் தொடங்கும் அளவுக்குப் பொதுவுடைமைக் கட்சி வலிமைப் பெற்றது. இந்தப் போர் ஈராண்டுகள் நீடித்தது. நிலப்பரப்பு முழுவதும் பொதுவுடைமையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

[தொகு] சவால்கள்

முப்பது ஆண்டுக் காலம் உள்நாட்டுப் போர்களினால் அலைக்கழித்த பின்னரே சீனா, பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என்ற முறையில் மா-சே-துங்கின் ஆட்சியின் கீழ் வந்தது. அப்போது சீனாவில் வறுமை தலை விரித்தாடியது. நாடு வளர்ச்சியடையாமல் மிகவும் பின் தங்கியிருந்தது. பழைய மரபுகளில் ஊறிப் போயிருந்த கோடிக்கணக்கான மக்கள் படிப்பறிவில்லாத குடியானவர்களாக இருந்தனர். ஆட்சியைப் பிடித்தபோது மா-சே-துங்- கிற்கு 56 வயது. புதிய சீனாவை உருவாக்கும் மாபெரும் பணி அவர் முன் மலைபோல் எழுந்து நின்றது.

'வலிமையும் வளமும் மிகுந்த சீனா' என்ற இலட்சிய இலக்கை பின்பற்றிய மாவ், நவீன தொழில் முன்னேற்றம் அடைந்த நாட்டை நிறுவ முயன்றார். எனினும், இவருடைய முக்கியத்துவம் வாய்ந்த சமூக-அரசியல் திட்டங்களின் காரணமாக சீனாவின் வளர்ச்சி முடங்கி, பொருளாதாரம் சீர்குலைந்து, சமூக கொந்தளிப்புகள் உருவாகி, பரவலான பட்டினி நிலை ஏற்பட்டது; மில்லியன் கணக்கில் மக்கள் மாண்டனர்.

மாவ், தன் இறுதிக் காலம் வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக் குழுவையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதற்கு அவரது அரசியல் சாதுரியமும் ஆளுமையும் உதவியது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மா_சே_துங்&oldid=1084452" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்