கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திரவாதம் அல்லது தாராண்மியவாதம் (Libertarianism: லிபர்ட்டேரியனிசம்) ஒர் அரசியல் பொருளாதாரக் கொள்கை. இயன்றளவு அரசின் பங்கு குறைவாகவும், தனிமனித சுதந்திரம் விரிவாகவும் அமைய வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் அடிப்படை. குறிப்பாக அரசின் வன்முறைக்கான அதிகாரத்தை இயன்றவரை கட்டுப்படுத்த இது பரிந்துரைக்கிறது. தனி மனிதனின் சுதந்திரம் இன்னொரு மனிதனை பாதிக்காத வகையில் அவளுக்கு/அவனுக்கு முழுமையான சுதந்திரத்தை இந்தக் கொள்கை வேண்டுகிறது. எங்கே ஒரு மனிதனின் உரிமைகள் பாதிக்கப்படுகிறதோ, அதைப் பாதுகாக்க மட்டுமே அரசுக்கு வன்முறைக்கான அதிகாரம் உண்டு என்கிறது. எடுத்துக்காட்டாக, விபச்சாரம், ஆபாசம் போன்றவை மற்ற மனிதர்களை நேரடியாக பாதிப்பதில்லை, எனவே அவற்றை குற்றவியல் செயல்களாகக் கருதக் கூடாது என்று இது வலியுறுத்துகிறது.
[தொகு] முக்கிய கொள்கைகள்
சுதந்திரவாதம் பொதுவுடமை, சமவுடமை ஆகிய கொள்கைகளை முற்றிலும் எதிர்க்கிறது. மாறாக தனிமனித சுநந்திரத்தை, உரிமைகளை, உடமைகளை இது பாதுகாக்க முனைகிறது.
சுதந்திரவாதம் அனைத்து அல்லது அனேக பொருளாதர செயற்பாடுகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று வேண்டுகிறது. கல்வி, மருத்துவம், போக்குவரத்து, ஊடகம், கலைத்துறை, நில மேலாண்மை, வேளாண்மை உட்பட அனேக துறைகள் திறந்த சந்தை மூலமே நிகழவேண்டும் என்று கருதுகிறது. திறந்த சந்தையே இதை செயற்றிறனுடன் செய்ய முடியும் என்று கூறுகிறது. படைத்துறை, காவல்துறை, நீதித்துறை, பொதுமக்கள் மருத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமே அரசுக்கு ஒரு பங்கு உண்டு என்கிறது.
[தொகு] சுதந்திரவாத சிந்தனையாளர்கள்
[தொகு] அமைப்புகள்
[தொகு] முக்கிய நூல்கள்
- The Road to Serfdom
- Anarchy, State, and Utopia
- Human Action
- A Theory of Socialism and Capitalism
- NO TREASON No. VI. THE CONSTITUTION OF NO AUTHORITY.
[தொகு] நாடுகள் வாரியாக சுதந்திரவாதம்
[தொகு] அமெரிக்காவில் சுதந்திரவாதம்
மேற்கு நாடுகள் பலவற்றில் சுதந்திரவாதம் பரவி இருக்கிறது. இருப்பினும் இது இன்னும் மையநீரோட்ட கொள்கையாக யாராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அமெரிக்காவிலேயே இதற்கு பலத்த தார்மீக ஆதரவு இருக்கிறது.
[தொகு] நூல்கள்
- Radicals for Capitalism: A Freewheeling History of the Modern American Libertarian Movement
[தொகு] இவற்றையும் பாக்க
[தொகு] வெளி இணைப்புகள்