காவல்துறை
காவல்துறை (Police) என்பது ஒரு மாகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றின் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். குற்றவியல் சட்டத்தை அமல்படுத்தல், குற்றவிசாரணை புரிதல், பொதுமக்களைப் பாதுகாத்தல், கூட்டத்தைக் கட்டுப்படுத்தல் போன்ற பணிகளும் இத்துறையால் செய்யப்படும். இவ்வமைப்பின் அதிகாரவரம்பு நாட்டுக்கு நாடு வேறுபடும். பொதுவாக தேசிய எல்லை, மாநில எல்லை, மற்றும் சர்வதேச அளவிலும் என்று வகைப்படுத்திப் பிரிக்கலாம்.
பொருளடக்கம் |
[தொகு] உபகரணங்கள்
- ஆயுதம் பல சட்ட அதிகாரங்களில், காவல்துறைக்கு கைத்துப்பாக்கி, சிறியரக துப்பாக்கிகள் போன்ற எந்திர ஆயுதங்கள் வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்படுகிறது. எந்திர ஆயுதங்கள் தவிர லத்தி, குறுந்தடி, கண்ணீர் குண்டு போன்றவைகளும் அனுமதிக்கப்படுகிறது. சிறப்பு காவல்துறை அமைப்புகளுக்கு பெரியரக எந்திர துப்பாக்கிகளும் நவீன கருவிகளும் வழங்கப்படுகிறது.
- தகவல் தொடர்புகள் பல நாடுகளில் காவல் துறை படைகளுக்கு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு கருவிகளும், விசில், ஒளிவிளக்குகள் போன்ற உபகரணங்ககள் மூலம் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.
- வாகனம் காவல் துறை அமைப்பின் இலச்சினை பொருத்திய நான்குசக்கர ஊர்திகள் முதல் இருசக்கர வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகிறது. இவற்றின் மூலம் வழக்கமான பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் அவசரக் கால ரோந்துகள் நடைபெறும்.
[தொகு] உலக நாடுகளில் காவல் துறை
பொதுவாக கூட்டாட்சி அமைப்புள்ள நாடுகளில், பல அடுக்குகளில் காவல் துறை செயல்படும். இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளில் காவல் துறை அதிகாரம் பரவலாக்கப்பட்டு, மாநிலங்களிடம் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிலி, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஆஸ்திரியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஒருங்கிணைந்த அதிகாரம் அமைப்பாகவுள்ளது[1]. பல சர்வதேச நாடுகள் ஒன்று சேர்ந்து பன்னாட்டுக் காவலகம் என்ற அமைப்பையும் உருவாக்கி, நாடுகளுக்கிடையேயான உதவிகளைப் பரிமாரிக்கொள்கிறது.
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] ஆதாரங்ககள்
- ↑ Das, Dilip K., Otwin Marenin (2000). Challenges of Policing Democracies: A World Perspective. Routledge. p. 17. ISBN 9057005581.