விளாடிமிர் லெனின்
| விளாடிமிர் இலீச் லெனின் Vladimir Ilyich Lenin Владимир Ильич Ленин |
|
|
|
|
|---|---|
| பதவியில் 8 நவம்பர் 1917 – 21 ஜனவரி 1924 |
|
| முன்னவர் | அலெக்சாண்டர் கெரென்ஸ்கி (ரஷ்ய இடைக்கல அரசுத் தலைவாராக) |
| பின்வந்தவர் | அலெக்சி ரீக்கொவ் (ஜோசப் ஸ்டாலின் (கட்சித் தலைவர்) |
| அரசியல் கட்சி | போல்செவிக் கட்சி |
|
|
|
| பிறப்பு | ஏப்ரல் 22, 1870 சிம்பீர்ஸ்க், ரஷ்யப் பேரரசு |
| இறப்பு | சனவரி 21 1924 (அகவை 53) கோர்க்கி, சோவியத் ஒன்றியம் |
| தேசியம் | உருசியர் |
| வாழ்க்கைத் துணை |
நதேஷ்தா குரூப்ஸ்கயா |
| துறை | அரசியல்வாதி, புரட்சியாளர் |
| சமயம் | மத மறுப்பாளர் |
| கையொப்பம் | |
விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин
கேளுங்கள், ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
பெயர்க்காரணம் [தொகு]
"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
- V.I.Lenin.info: voting about carrying out of a body of Lenin from the Mausoleum - ரஷ்ய மொழியில்
- இவர் தான் லெனின்
- லெனினின் உடல் 88 வருடங்களுக்குப் பிறகு அடக்கம்
மேற்கோள்கள் [தொகு]