ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்


பதவியில்
21 மார்ச் 1871 – 20 மார்ச் 1890
அரசர் ஜேர்மனியின் முதலாம் வில்ஹெல்ம் (1871-1888)
மூன்றாம் பிரீட்ரிக் (1888)
இரண்டாம் வில்ஹெல்ம் (1888-1890)
முன்னவர் முதலாம் சான்செலர்
பின்வந்தவர் லியோ ஃபொன் கப்ரிவி

பதவியில்
23 செப்டெம்பர் 1862 – 1 ஜனவரி 1873
Monarch முதலாம் வில்ஹெல்ம்
முன்னவர் Adolf of Hohenlohe-Ingelfingen
பின்வந்தவர் ஆல்பிரெக்ட் ஃபொன் ரூன்

பதவியில்
9 நவம்பர் 1873 – 20 மார்ச் 1890
Monarch முதலாம் வில்ஹெல்ம் (1873-1888)
மூன்றாம் பிரீட்ரிக் (1888)
இரண்டாம் வில்ஹெல்ம் (1888-1890)
முன்னவர் ஆல்பிரெக்ட் ஃபொன் ரூன்
பின்வந்தவர் லியோ ஃபொன் கப்ரிவி

பதவியில்
1867 – 1871
தலைவர் முதலாம் வில்ஹெல்ம்
முன்னவர் கூட்டமைப்பு நிறுவப்பட்டது
பின்வந்தவர் ஜேர்மன் பேரரசு

பதவியில்
1862 – 1890
பிரதமர் 1862-1873
1873-1890)
அரசர் முதலாம் வில்ஹெல்ம் (1862-1888)
மூன்றாம் பிரீட்ரிக் (1888)
இரண்டாம் வில்ஹெல்ம் (1888-1890)
முன்னவர் ஆல்பிரெக்ட் ஃபொன் பேர்ன்ஸ்டோர்ஃப்
பின்வந்தவர் லியோ ஃபொன் கப்ரிவி
அரசியல் கட்சி இல்லை

பிறப்பு ஏப்ரல் 1, 1815(1815-04-01)
Schönhausen, பிரசியா
இறப்பு சூலை 30 1898 (அகவை 83)
Friedrichsruh, ஜேர்மனி
வாழ்க்கைத்
துணை
யொகானா ஃபொன் புட்காமெர்
சமயம் Lutheran
கையொப்பம் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க்'s signature

ஒட்டோ எடுவார்ட் லியோபோல்ட் ஃபொன் பிஸ்மார்க் (Otto Eduard Leopold von Bismarck - 1 ஏப்ரல் 1815 – 30 ஜூலை 1898), 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரசிய நாட்டினதும், பின்னர் ஜேர்மனியினதும் அரசியலாளர் ஆவார். 1862 - 1890 வரை பிரசியாவின் பிரதம அமைச்சராக இருந்த இவர் ஜேர்மனியை ஒன்றிணைப்பதில் முன்னின்றார். 1867 தொடக்கம், வட ஜேர்மன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். இரண்டாம் ஜேர்மன் பேரரசு நிறுவப்பட்டபோது பிஸ்மார்க் அதன் தலைவர் (Chancellor) ஆகி நடைமுறை அரசியல் (Realpolitik) நடத்தினார். இதனால் இவரை இரும்புத் தலைவர் (Iron Chancellor) என அழைத்தனர். நாட்டின் தலைவராக பிஸ்மார்க், ஜேர்மன் அரசில் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்ததுடன், தனது பதவிக் காலத்திலும் அதற்குப் பின்னரும்கூட ஜேர்மனியின் அரசியலிலும், அனைத்துலக மட்ட அரசியலிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தினார்.

இளமைக்காலம் [தொகு]

பிஸ்மார்க் பிரசிய மாகாணமான சக்சனியில், பெர்லின் நகருக்கு மேற்கில் அமைந்திருந்த செல்வந்தக் குடும்பமொன்றின் எஸ்டேட்டான சோன்ஹோசென் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கார்ல் வில்ஹெல்ம் பேர்டினண்ட் ஃபொன் பிஸ்மார்க் ஒரு நில உரிமையாளரும், முன்னாள் படைத்துறை அலுவலரும் ஆவார். தாயார், வில்ஹெமின் லூயி மென்கென், அரசியல்வாதியான ஏ. ஜே. பி டெயிலரின் கல்வியறிவு கொண்ட மகளாவார். பிஸ்மார்க் தனது தந்தையாரைப் போலப் பிரபுத்துவத் தோற்றத்துடனேயே வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டார். இவர் ஒரு முறையான படைத்துறை அலுவலராக இல்லாதிருந்தபோதும், படைத்துறைச் சீருடை போலவே உடையணிந்தார். எனினும், இவர் பொது நோக்காளராகவும், இவரது பின்னணியைச் சேர்ந்த ஆண்கள் பலருக்கு மாறாக நல்ல கல்வியறிவு பெற்றவராகவும் இருந்தார். மிகச் சரளமாக ஆங்கிலத்தில் பேசக்கூடிய திறன் இவருக்கு இருந்தது. இளைஞராக இருந்தபோது, தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களில் ஷேக்ஸ்பியரையும், பைரனையும் மேற்கோள் காட்டுவதுண்டு.