உப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இக்கட்டுரை நாளாந்தம் உணவுப்பொருளாகப் பாவிக்கப்படும் உப்பு பற்றியது. வேதியியலில் இதே பெயரில் பயன்படுத்தப்படும் பொருளைப் பற்றி அறிய உப்பு (வேதியியல்) கட்டுரையைப் பார்க்க.
பொலிவியாவில் உப்பு மலைகள்
உப்பு, அல்லது சோடியம் குளோரைடு, உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், ஆனால் தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது. உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது.