விலங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இக்கட்டுரை, Animal எனும் விக்கிபீடியா கட்டுரையிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. குறிப்பாக, இந்தப் பதிப்பிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.


வார்ப்புரு:Pp-move-indef


style="background:#வார்ப்புரு:Taxobox color;"|Animals
புதைப்படிவ காலம்: Ediacaran - Recent,
Left to right: Hapalochlaena lunulata (a mollusk), Sphodromantis viridis (an arthropod), Lumbricus terrestris (an annelid), Panthera tigris (a chordate), and Chrysaora colorata (a cnidarian).
style="background:#வார்ப்புரு:Taxobox color;" | உயிரியல் வகைப்பாடு
உலகம்: Eukarya
(தரப்படுத்தப்படாத) Opisthokonta
திணை:
(இராச்சியம்)
Animalia
Linnaeus, 1758
Phyla


விலங்குகள் அனிமாலியா அல்லது மீடாசொவா ராஜ்ஜியத்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, யூகார்யோடிக் உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது, சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் உருமாற்ற நிகழ்முறைக்குள் செல்கின்றன என்றாலும். அநேக விலங்குகள் இடம்பெயரும் தன்மையுடையவை, இதன் அர்த்தம் என்னவென்றால், அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் கொன்றுண்ணி பழக்க முடையவையாகவும் உள்ளன, அதாவது தங்கள் வாழ்க்கைக்கு அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும்.


பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்பிரியன் வெடிப்பு சமயத்தில் கடல்வாழ் இனங்களாக காட்சியளிக்கின்றன.


பொருளடக்கம்

[தொகு] பெயர்வரலாறு

"அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை லத்தீன் வார்த்தையாகிய அனிமலே , நியூடர் ஆஃப் அனிமலிஸ்(விலங்குகளின் பொது பால் சொல்) (animale, neuter of animalis) என்பதில் இருந்து வருகிறது, இது அனிமா என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்கு பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக்[மேற்கோள் தேவை] குறிக்கிறது. இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை விலங்குகளின் பேரரசு(Kingdom Animalia) என்பது, மனிதன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கிறது.


[தொகு] பண்புகள்

பிற வாழும் உயிரினங்களில் இருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் யூகார்யோடிக்குகளாகவும் பலசெல் உயிரினங்களாகவும்[1] உள்ளன, (ஆயினும் காணவும் மிக்சோசோவா) இவை அவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஓர்செல் உயிரினங்களில் இருந்து பிரிக்கின்றன. இவை கொன்றுண்ணி பழக்கமுடையவை,[2] பொதுவாக ஒரு உள்ளறையில் உணவு செரித்தல் நிகழ்பவை, இது தாவரங்கள் மற்றும் பாசி வகைகளில் இருந்து அவற்றை பிரிக்கின்றன (சில கடற்பாசிகள் ஒளிச்சேர்க்கையும் நைட்ரஜன் நிலைப்பாடு திறன் கொண்டிருக்கின்றன என்றாலும்).[3] உறுதியான செல் சுவர்கள் இல்லாதிருக்கும் வகையில் இவை தாவரங்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகின்றன.[4] எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் இடம்பெயர்பவையே,[5] என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைக்கருவானது ஒரு கருக்கோளம் என்னும் கட்டத்திற்கு செல்கிறது, இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும்.


[தொகு] உடலமைப்பு

சில விதிவிலக்குகளுடன், மிகக் குறிப்பிடத்தக்கவை கடற்பாசிகள் (துளையுடலிகள்(Porifera) தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகியவை, விலங்குகள் தனித்தனி திசுக்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் நிகழ்முறைக்குட்படுத்துவதுமான நரம்பு திசு ஆகியவை இதில் அடக்கம். பொதுவாக ஒரு உள்ளமைந்த செரிமான அறையும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும். இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசோவான்கள் (பலசெல் உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன, அல்லது முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் இமெடாசோவான்கள் (eumetazoans) என்று அழைக்கப்படுகின்றன.


அனைத்து விலங்குகளும் யூகார்யோடிக் செல்களைக் கொண்டிருக்கும், கொலாஜன் மற்றும் நெகிழ்வுறும் கிளைகோபுரோட்டீன்களால் உருவான பண்புநலன் கொண்ட கூடுதல்செல் மாட்ரிக்ஸ் மூலம் சூழப்பட்டதாக. இவைகளை கால்சியமுற்று கூடுகள், எலும்புகள், மற்றும் நுண்கூர்கள் (spicule) என வகைப்படுத்தலாம். வளர்ச்சியின் போது இது ஒப்பீட்டளவில் நெகிழ்வுடனான ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது, இதன் மீது செல்கள் நகரவும் மறுஒழுங்கை உருவாக்கவும் இயலும், இது சிக்கலான உடலமைப்புகளால் சாத்தியமாக்குகிறது. இதற்கு மாறாக, தாவரங்கள் மற்றும் பூஞ்சைகள் போன்ற பலசெல் உயிரினங்கள் செல் சுவர்கள் மூலம் செல்கள் இடத்தில் நிறுத்தப்படப் பெற்றுள்ளன, அதனால் அவை முன்னேற்றமுள்ள வளர்ச்சியின் மூலம் அபிவிருத்தியுறுகின்றன. மேலும், பின்வரும் செல்களிடையான சந்திப்புகளும் விலங்கு செல்களுக்கு மட்டும் பிரத்யேகமானவையாகும்: நெருக்கமான சந்திப்புகள், இடைவெளி சந்திப்புகள், மற்றும் டெஸ்மோசோம்கள்.


[தொகு] இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி

ஒளிரும் சாயக் கறை படிந்த ஒரு நியூட் செல் மிடோசிஸ் நிகழ்முறைக்குள் செல்கிறது, குறிப்பாக ஆரம்ப விலகுநிலைக்குள்.


ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பால்முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க செல்களைக் கொண்டுள்ளன, இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க குன்றல் பிரிவு(meiosis) நடக்கிறது. இவை ஒன்றிணைந்து கருமுட்டைகளை (zygotes) உருவாக்கி, அவை புதிய தனிஉயிர்களாய் வளர்ச்சியுறுகின்றன.


பாலில்லா இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. இது பார்தெனோஜெனிசிஸ் மூலம் நடைபெற முடியும், அதில் இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் (fragmentation) மூலமாகவும் நடைபெறுகின்றது.


ஒரு கருமுட்டையானது கருக்கோளம் (blastula) என்னும் ஒரு உள்ளீடற்ற கோளத்திற்குள் ஆரம்பத்தில் வளர்கிறது, இது மறுஒழுங்கமைவுக்கும் வேறுபாட்டிற்கும் (differentiation) உள்ளாகிறது.  கடற்பாசிகளில், கருக்கோள லார்வாக்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது.  பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறுஒழுங்கமைவுக்குள் உட்செல்கிறது. இது முதலில் உள்மடிந்து ஒரு செரிமான அறை, மற்றும் இரண்டு தனியான நுண்ணுயிர் அடுக்குகள் - ஒரு வெளிப்புற எக்டோதெர்ம்(புற அடுக்கு) மற்றும் ஒரு உள்முக என்டோதெர்ம்(அக அடுக்கு) - கொண்ட ஒரு ஈரடுக்கு கருக்கோளத்தை (gastrula)  உருவாக்குகிறது. அநேக சந்தர்ப்பங்களில், அவற்றுக்கு இடையே ஒரு மீசோதெர்மும் உருவாகிறது.  இந்த திசு அடுக்குகள் பின் வேறுபாட்டிற்கு உள்ளாகி, திசுக்கள் மற்றும் உறுப்புகளாக உருவாகின்றன.


[தொகு] உணவு மற்றும் சக்திக்கான ஆதாரம்

ஒரு இளம் சிவப்பு வால் பருந்து ஒரு கலிபோர்னியா வோலை சாப்பிடுகிறது


மிருகவேட்டை என்பது வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு) தனது இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும் ஒரு உயிரியல் பரிமாற்ற நிகழ்வாகும். வேட்டை விலங்குகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம், ஆனால் மிருகவேட்டை எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு பிணந்திண்ணி(detritivory), அதாவது இறந்த உறுப்பாக்கமுடைய உணவை நுகர்வது. சமயங்களில் இரண்டு உண்ணும் பழக்கத்திற்கும் இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும், உதாரணமாக ஒட்டுண்ணி உயிர்வகைகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன, பின் சிதைவுறும் அந்த உடலை தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது, இது பல்வேறு மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகளுக்கு வழிவகுத்துள்ளது.


அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த சக்தியை ஒளிச்சேர்க்கை எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை எளிய சர்க்கரைகளாக மாற்றப் பயன்படுத்துகின்றன. கார்பன் டையாக்ஸைடு (CO2) மற்றும் நீர் (H2O) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது சூரிய ஒளி சக்தியை குளுகோஸ் (C6H12O6) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றி ஆக்சிஜனை (O2) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை கிளைகோலைஸிஸ் என்று அழைக்கப்படும்.


கடல்படுகையின் நீர்வெப்ப செல்வழிகள் மற்றும் குளிர்ச்சியான ஒழுகல்களுக்கு நெருக்கமாக வாழக்கூடிய விலங்குகள் சூரிய ஒளியைச் சார்ந்து இருப்பதில்லை. அதற்கு பதிலாக, கெமோசிந்தடிக் ஆர்கியா மற்றும் பாக்டீரியாக்கள் உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை உருவாக்குகின்றன.


[தொகு] மூலம் மற்றும் புதைபடிவ பதிவு

மேலும் தகவல்களுக்கு: Urmetazoon
டங்க்லியோஸ்டீஸ் என்பது ஒரு மிகப்பெரிய, 10 மீட்டர் (33 அடி) நீளமான சரித்திர காலத்திற்கு முந்தைய ஒரு மீனாகும்.[18]
படிமம்:Vernanimalcula.jpg
வெர்னானிமால்குலா கிசோவினா என்பது பைலேடரியாவின் மிக ஆரம்பத்தில் அறியப்பட்ட உறுப்பினராக சிலரால் நம்பப்படும் ஒரு புதைபடிவமாகும்.

விலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பரிணாமமுற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது சோவனொஃபிளாகெல்லேட்ஸ் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் (flagellates). மூலக்கூறு ஆய்வுகள் விலங்குகளை ஒபிஸ்தோகோன்ட்ஸ் என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன, இதில் சோவனொஃபிளாகெல்லேட்ஸ்கள், பூஞ்சைகள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை ஒருசெல் உயிரினங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள்(flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது, பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன.


விலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் கேம்ப்ரியனுக்கு முந்தைய கால முடிவுவாக்கிலானதாக தோன்றுகின்றன, சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக, இவை எடியகரன் அல்லது வென்டியன் பயோட்டா என்று அழைக்கப்படுகின்றன. ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை பிரதிநிதித்துவம் செய்தாலும், அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம், அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் காலத்தில் ஏறக்குறைய ஒரே காலகட்ட தோற்றத்தை செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள்(paleontologists) மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன.[6] இது தவிர, தோனியன் காலகட்டத்தின் ஆரம்ப சமயத்தில், சுமார் 1 பில்லியன் வருடங்களுக்கு முன்னதாக (ஏறக்குறைய இந்த கட்டுரையில் முன்னர் விவாதிக்கப்பட்ட புதைவு சுவடுகளின் வயதின் அதே காலத்தில்) ஸ்ட்ரோமாடோலைட் பன்முகத்தன்மையில் ஒரு சரிவு இருந்தது, இது இந்த சமயத்தில் மேய்ச்சல் விலங்குகளின் தோற்றத்தை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம், மேயும் கடல் விலங்குகள் இனம் நிறைவு-ஓர்டோவிசியன் மற்றும் நிறைவு-பெர்மியன் காலத்தில் பெருமளவில் மறையத் துவங்கிய கொஞ்ச காலத்தில் ஸ்ட்ரோமாடோலைட் பன்முகத்தன்மையும் அதிகரித்து அவற்றின் எண்ணிக்கை மீண்டும் மீட்சி கண்ட கொஞ்ச காலத்தில் குறையத் துவங்கியதைப் போல. இந்த ஆரம்ப சுவடு புதைபடிவங்களுக்கு வெகு ஒத்ததான கண்டுபிடிப்பு இன்று பெரிய அளவிலான ஒற்றை-செல் புரோடிஸ்ட் உயிரினங்களால் உருவாக்கப்படுகிறது, குரோமியா ஸ்பேரிகா அவற்றை ஆரம்ப விலங்கு பரிணாமத்திற்கு ஆதாரமாகப் பொருள் புரிவதன் மீது கூடுதலான சந்தேகத்தை விதைக்கிறது.[7][8]


[தொகு] விலங்குகளின் தொகுதிகள்

[தொகு] துளையுடலிகள்(Porifera)

ஆரஞ்சு யானைக் காது கடற்பாசி, ஏஜ்லஸ் கிளாத்ரோட்ஸ், முன்புலத்தில். இரண்டு பவளப்பூச்சிகள் பின்புலத்தில்: ஒரு கடல் விசிறி, இசிலிகோர்ஜியா ஸ்க்ராமி, மற்றும் ஒரு கடல் கம்பி, பிளெக்ஸரெல்லா நியூடான்ஸ்.

கடற்பாசிகள் (துளையுடலிகள்)துளையுடலிகள் ஆரம்பத்தில் பிற விலங்குகளிடம் இருந்து பிரிந்து தோன்றியதாகத் தான் வெகு காலம் கருதப்பட்டு வந்தது. மேலே குறிப்பிட்டதைப் போல, அவற்றில் பிற பல விலங்கு தொகுதிகளில் காணப்படும் சிக்கலான உடலமைப்பு இல்லாதிருக்கிறது. அவற்றின் செல்கள் வகையீடுற்றவை, ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் தனித்தனி திசுக்களாக ஒழுங்கமைக்கப்படாததாய் இருக்கிறது. கடற்பாசிகள் ஒட்டிவாழ்பவை, பொதுவாக நீரை துளைகள் வழியே இழுப்பதின் மூலம் உணவு உட்கொள்கின்றன. இணைந்த கூடுகள் கொண்ட ஆரிகியோசியாதா கடற்பாசிகள் அல்லது ஒரு தனியான தொகுதியைக் குறிக்கலாம். ஆயினும் 21 இனங்களில்[9] 150 ஜீன்களில் நடத்தப்பட்ட 2008 ஆம் ஆண்டின் ஃபைலோஜெனோமிக் ஆய்வு ஒன்று டினோஃபோரா (Ctenophora) அல்லது சிகை ஜெல்லிக்கள் தான் விலங்குகளின், குறைந்தபட்சம் அவற்றின் 21 தொகுதிகளின், அடிப்படையான வழிமரபாய் இருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறது. இந்த கடற்பாசிகள் அல்லது குறைந்தபட்சம் அவர்கள் ஆய்வு செய்த அந்த கடற்பாசி தொகுதிகள் வெகு பழமையானவை அல்ல, மாறாக இரண்டாம்நிலை எளிமைப்படுத்தலுக்குட்பட்டவையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர்.


பிற தொகுதிகளில், கடல் அனிமோன்கள், பவளப் பூச்சிகள், மற்றும் ஜெல்லி மீன்கள் ஆகியவற்றை அடக்கிய டினோஃபோரா மற்றும் நிடாரியா (Cnidaria) ஆகியவை ஆரவழி இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கின்றன, செரிமான அறைகளுடன் ஒற்றை திறப்பையும் இவை கொண்டுள்ளன, வாய் மற்றும் மலத்துவாரம் என இரண்டாகவும் இத்திறப்பு சேவை செய்கிறது. இரண்டுக்கும் தனித்தனி திசுக்கள் உண்டு, ஆனால் அவை உறுப்புகளாக ஒழுங்கமைக்கப்படவில்லை. இரண்டு முக்கிய நுண்ணியிர் அடுக்குகள் மட்டுமே உண்டு, புற அடுக்கு(ectoderm) மற்றும் அகஅடுக்கு(endoderm), அவற்றுக்கு இடையில் செல்கள் மட்டும் சிதறிக் காணப்படும். உள்ளபடியே, இந்த விலங்குகள் சில சமயங்களில் ஈரடுக்கு (diploblastic) விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சின்னஞ்சிறு பிளாகோசோவான்கள் ஒத்தவையாக இருக்கும், ஆனால் அவற்றுக்கு ஒரு நிரந்தரமான செரிமான அறை ஒன்று இருக்காது.


எஞ்சிய விலங்குகள் பைலேடரியா என்னும் ஒற்றைத்தொகுதி குழுவை உருவாக்குகின்றன.  அநேக பாகத்திற்கு, அவை இருசமபக்க ஒத்தமைவுடையவையாக இருக்கின்றன, பெரும்பாலும் உணவு உட்கொள்ளும் மற்றும் புலனுணர்வு உறுப்புகளுடனான சிறப்பியல்பான தலையைக் கொண்டுள்ளன.  உடம்பு ட்ரிப்ளோபிளாஸ்டிக்காக இருக்கிறது, அதாவது அனைத்து மூன்று நுண்ணுயிர் அடுக்குகளும் நன்கு-வளர்ச்சியடைந்தவையாக இருக்கின்றன, திசுக்கள் நல்ல வகைப்பட்ட உறுப்புகளை உருவாக்குகின்றன.  செரிமான அறை இரண்டு திறப்புகளைக் கொண்டுள்ளது, ஒரு வாய் மற்றும் ஒரு மலத்துவாரம், கொயலம் (coelom) அல்லது சூடோகொயலம் (pseudocoelom) என்னும் இன்னொரு உள்முக உடல் துவாரமும் உள்ளது.  ஆயினும் இந்த பண்புகளில் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் உண்டு - உதாரணமாக முதிர்ந்த முட்தோலிகள் (echinoderm)(echinoderms) ஆரவகையில் இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கும், சில ஒட்டுண்ணி புழுக்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கும்.


பைலேடரியாவுக்கு உள்ளான உறவுகள் மீதான நமது புரிதலில் மரபணு ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. அநேகமானவை இரண்டு முக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன: ட்யூடெரோஸ்டோம்கள் மற்றும் புரோடோஸ்டோம்கள், இதில் எக்டிசோசோவா, பிளாட்டிசோவா, மற்றும் லோபோட்ரோசாசோவா ஆகியவை அடங்கியிருக்கின்றன. இது தவிர, இந்த பெரும் பிரிவுகளுக்கு முன்னதாக பிரிந்திருப்பதாகத் தோன்றும் ஒப்பீட்டளவில் ஒத்த உடலமைப்புடனான பைலேடரியன்களின் சிறு குழுக்கள் சில உள்ளன. அகோயலோமார்பா, ராம்போசோவா, மற்றும் ஆர்தோனெக்டிடா ஆகியவை இதில் அடக்கம். ஆரம்பத்தில் ஒரு செல் விலங்குகளாக(protozoa) கருதப்பட்ட ஒற்றை செல் ஒட்டுண்ணிகளான மிக்சோசோவாவும் பைலேடரியாவில் இருந்து தான் வளர்ச்சியுற்றிருக்கலாம் என இப்போது நம்பப்படுகிறது.


[தொகு] ட்யூடெரோஸ்டோம்கள்

அற்புதமான ஃபேரி-ரென், மலுரஸ் சையனஸ்

ட்யூடெரோஸ்டோம்கள் புரோடோஸ்டோம்கள் என்று அழைக்கப்படும் பிற பைலேடரியாக்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. இரண்டிலுமே ஒரு முழுமையான செரிமான பாதை உண்டு. ஆயினும், புரோடோஸ்டோம்களில் ஆரம்ப துவாரம் (ஆர்சென்டெரான்) வாயாக வளர்ச்சியுறுகிறது, மலத்துவாரம் தனியாக உருவாகிறது. ட்யூடெரோஸ்டோம்களில் இது தலைகீழாய் நடக்கிறது. அநேக புரோடோஸ்டோம்களில், ஈரடுக்கு கருக்கோளத்தின் உள்புறத்தில் செல்கள் வெறுமனே நிரப்பி சிசோகொலஸ் வளர்ச்சி என்று அழைக்கப்படும் மீசோதெர்மை உருவாக்குகின்றன, ஆனால் ட்யூடெரோஸ்டோம்களில் என்டெரோகொலிக் பையிடல் என்று அழைக்கப்படும் என்டோதெர்மின் உள்மடிப்பு மூலமாக இது உருவாகிறது. ட்யூடெரோஸ்டோம்கள் ஒரு வயிற்றுப்பக்கத்தை விட, முதுகுப்பக்க நரம்பு நாணையும் கொண்டுள்ளன, மற்றும் அவற்றின் முளைக்கருக்கள் ஒரு வேறுபட்ட பிளவுக்குள் உட்செல்கின்றன.


இவையெல்லாம் ட்யூடெரோஸ்டோம்களும் புரோடோஸ்டோம்களும் தனித்தனியான, ஒற்றைத்தொகுதி வம்சாவளிகள் என்பதைக் காட்டுகின்றன.  ட்யூடெரோஸ்டோம்களின் முக்கிய தொகுதி முட்தோலிகள்(Echinodermata) மற்றும் கார்டேடா ஆகியவை.  முந்தையது ஆரவடிவில் இருசமபக்கம் ஒத்தவை, நட்சத்திர மீன், கடல் முள்ளெலி, மற்றும் கடல் வெள்ளரிகள் போன்ற கடல்நீரில் மட்டும் வாழ்கின்றவை.  பிந்தையவை முதுகெலும்பு கொண்ட விலங்குகளான வெர்டிப்ரேட்டுகள் வகையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாகும்.  இவற்றில் மீன், நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், மற்றும் பாலூட்டிகள் ஆகியவை அடங்கும்.


இவை தவிர, ட்யூடெரோஸ்டோம்கள் ஹெமிகொர்டேடா அல்லது ஏகோர்ன் புழுக்களையும் அடக்கியிருக்கின்றன. அவை மிகச் சிறப்பான முக்கியமானவையாக இன்று இல்லை என்றாலும், முக்கிய புதைபடிவ கிராப்டுலிட்கள் இந்த பிரிவைச் சார்ந்ததாக இருக்கலாம்.


சடோநாதா அல்லது அம்பு புழுக்களும் ட்யூடெரோஸ்டோம்களாக இருக்கலாம், ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் புரோடோஸ்டோம் தொடர்புகளை கூறுகின்றன.


[தொகு] எக்டிசாசோவா

மஞ்சள்-சிறகு டார்டர், சிம்பெட்ரம் ஃபிளேவெலம்

எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும், இவை சிறகுதிர்ப்பது அல்லது தோலுரிவதன் (ecdysis) மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள்(Arthropoda) இதற்கு சொந்தமானதே, இதில் பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன, பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன். ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின்(Arthropoda) நெருங்கிய உறவினங்கள், இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.


எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது, இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். அவற்றுக்கு தொடர்புடைய சிறு தொகுதிகள் நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் லோரிசிஃபெரா ஆகியவை. இந்த பிரிவுகள் சூடோகொயலம் (pseudocoelom) என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன.


புரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது, காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன.


[தொகு] பிளாட்டிசோவா

பெட்ஃபோர்டின் தட்டைப்புழு, சூடோபைசெரோஸ் பெட்ஃபோர்டி

பிளாட்டிசோவாவில் தட்டைப்புழுவினம்(Platyhelminthes), தட்டைப்புழுக்கள் ஆகிய தொகுதிகள் அடக்கம். இவை ஆரம்பத்தில் மிக ஆதி காலத்து பைலேட்டரியா வகைகளில் சிலவாகக் கருதப்பட்டன, ஆனால் அவை அதனை விட சிக்கலான மூதாதையரிடம் இருந்து வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதாக இப்போது தோன்றுகிறது.[10]


ஒட்டுயிர் தட்டைப் புழுக்கள் (flukes) மற்றும் நாடாப்புழுக்கள் போன்ற ஏராளமான ஒட்டுண்ணிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளன. தட்டைப் புழுக்கள் உடற்குழியற்றவை, இவற்றின் மிக நெருங்கிய உறவினங்களான நுண்ணுயிரி கேஸ்ட்ரோட்ரிசாவுக்கு போலவே இவற்றிற்கு உடல் குழி கிடையாது.[11]


பிற பிளாட்டிசோவா தொகுதிகள் பெரும்பாலும் நுண்ணுயிரி வகைகளாக உடற்குழி உள்ளவை(pseudocoelomate)டுகளாக இருக்கின்றன. இவற்றில் மிக பிரதானமானவை ரோடிஃபெரா அல்லது ரோடிஃபெர்கள் ஆகும், இவை நீர்ப்புற சூழ்நிலைகளில் மிகச் சாதாரணமாய் காணப்படும். இவற்றில் அகான்தோசெபாலா அல்லது ஊசிமுனைத்-தலை புழுக்கள், நதோஸ்டோமுலிதா, மைக்ரோநதோசோவா, மற்றும் சாத்தியமான அளவில் சைக்ளிஃபோரா ஆகியவையும் அடக்கம்.[12] இந்த பிரிவுகள் எல்லாம் சிக்கலான தாடைகள் கொண்டிருப்பதை பகிர்ந்து கொள்கின்றன, இதிலிருந்து இவை நாதிஃபெரா (Gnathifera) என்று அழைக்கப்படுகின்றன.


[தொகு] லோபோட்ரோசாசோவா

ரோமன் நத்தை, ஹெலிக்ஸ் போமாசியா

லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள்(Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்கள்(Annelida) ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது.[13][14] விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம், பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன, ஏனென்றால் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக, ஆனால் வத்தசைப்புழுவினம்(Annelida) கணுக்காலிகளுக்கு (Arthropoda)நெருங்கியவையாக கருதப்படுகின்றன,[15] ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை. இரண்டு தொகுதிகளுக்கும் இடையிலான உருவமைப்பியல் மற்றும் மரபணு வித்தியாசங்களின் காரணத்தால், இப்போது இது பொதுவாக குவியும் பரிணாமமாகக் கருதப்படுகிறது.[16]


லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது.[17] அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன.[18] ஆனால் இப்போது அவை பாராபைலெடிக்,[19] சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை, சில மெல்லுடலிகள்(Mollusca) மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு(Annelida) நெருக்கமானவை என்பதாக தோன்றுகிறது.[20][21] புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் பிரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன.[22]


[தொகு] மாதிரி உயிரினங்கள்

வார்ப்புரு:Mainarticle விலங்குகளில் காணப்படும் பெரும் பன்முகத்தன்மை காரணமாக, தேர்ந்தெடுத்த ஒரு சிறு எண்ணிக்கையிலான உயிரின வகைகளை ஆய்வு செய்து, தங்களது வேலைகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தி, பொதுவாக விலங்குகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த முடிவுகளுக்கு அதிலிருந்து அவர்கள் தேற்றம் செய்து கொள்வது தான் விஞ்ஞானிகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் உகந்ததாக இருக்கிறது. வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது என்பதால், பழப் பூச்சியான ட்ராசோபிலா மெலனோகாஸ்டர் மற்றும் நெமடோடெ கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ் ஆகியவை தான் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பலசெல் விலங்கு(metazoan) மாதிரி உயிரினங்களாக இருக்கின்றன, இவை தான் மரபணு ரீதியாக குறியீடு பிரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வடிவங்களாகவும் இருக்கின்றன. அவற்றின் மரபணுத் தொகுதியின் கடுமையாக குறைந்த நிலை இதற்கு வசதி செய்தது, ஆனால் அதன் மறுபக்க பிரச்சினை என்னவென்றால் பல ஜீன்கள், இன்ட்ரான்கள் மற்றும் லிங்கேஜ்கள் காணாதிருக்கும், இந்த எக்டிஸோசோவாக்கள் பொதுவாக விலங்குகளின் மூலம் குறித்து கொஞ்சம் தான் கற்றுத்தர முடியும். சூப்பர்ஃபைலத்திற்குள்ளாக இந்த வகை பரிணாமத்தின் நீட்சியானது தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கிரஸ்டசீன், வத்தசைபுழுவினம், மற்றும் மெல்லுடலிகள் மரபணுத் திட்டங்களின் மூலம் தெரிய வரும். ஸ்டார்லெட் கடல் அனிமோன் மரபணுத்தொகுதியின் ஆய்வானது, இமெடாசோவாவுக்கென பிரத்யேகமான 1500 பழமைப்பட்ட ஜீன்களின் வருகையை விளக்குவதில் கடற்பாசிகள், பிளாகோசோவாக்கள், மற்றும் சோவனோஃபிளாகெல்லேட்டுகள் இவையும் குறியீட்டு வரிசைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன.[23]


ஹோமோஸ்கிளெரோமார்ஃப் கடற்பாசியான ஓஸ்கரெல்லா கார்மெலா வின் ஒரு ஆய்வானது, கடற்பாசிகள் மற்றும் இமெடாசோவா விலங்குகளின் கடைசி பொதுவான மூதாதையர் முன்னர் அனுமானித்திருந்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்தது என்றும் தெரிவிக்கிறது.[24]


விலங்குகள் ராஜ்ஜியத்திற்கு சொந்தமான பிற மாதிரி உயிரினங்களில் எலி (Mus musculus ) மற்றும் வரிக்குதிரைமீன் (Danio rerio ) ஆகியவை அடக்கம்.


நவீன பாகுபாட்டியலின் தந்தை என அறியப்படும் கரோலஸ் லினீயஸ்


[தொகு] வகைப்பாட்டு வரலாறு

வாழும் உலகத்தை விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார் அரிஸ்டாட்டில், இதனைத் தொடர்ந்து முதல் காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் (Carl von Linné) வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள், அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் ஒரு செல் விலங்குகள்(protozoa), அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன, ஆனால் இப்போது தனியாக கருதப்படுகின்றன.


லினீயஸின் ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராஜ்ஜியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் (Vermes), இன்செக்டா (Insecta), மீன்கள் (Pisces), நீர் நில வாழுயிர் (Amphibia), பறவையினம் (Aves), மற்றும் மம்மாலியா (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.  அது முதல் கடைசி நான்கும் கார்டேடா (Chordata) என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன, பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன.  மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது, ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது.


[தொகு] கூடுதல் பார்வைக்கு

வார்ப்புரு:Portalpar வார்ப்புரு:Wikipedia-Books

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


[தொகு] குறிப்புதவிகள்

[தொகு] குறிப்புகள்

  1. National Zoo. "Panda Classroom" (in English). http://nationalzoo.si.edu/Animals/GiantPandas/PandasForKids/classification/classification.htm. Retrieved on September 30 2007. 
  2. Jennifer Bergman. "Heterotrophs" (in English). http://www.windows.ucar.edu/tour/link=/earth/Life/heterotrophs.html&edu=high. Retrieved on September 30 2007. 
  3. Douglas AE, Raven JA (January 2003). Genomes at the interface between bacteria and organelles. Philosophical transactions of the Royal Society of London. Series B, Biological sciences 358 (1429): 5–17; discussion 517–8.
  4. Davidson, Michael W.. "Animal Cell Structure" (in English). http://micro.magnet.fsu.edu/cells/animalcell.html. Retrieved on September 20 2007. 
  5. Saupe, S.G. "Concepts of Biology" (in English). http://employees.csbsju.edu/SSAUPE/biol116/Zoology/digestion.htm. Retrieved on September 30 2007. 
  6. Seilacher, A., Bose, P.K. and Pflüger, F. (1998). Animals More Than 1 Billion Years Ago: Trace Fossil Evidence from India. Science 282: 80–83.
  7. Matz, Mikhail V., Tamara M. Frank, N. Justin Marshall, Edith A. Widder and Sonke Johnsen (2008-12-09). Giant Deep-Sea Protist Produces Bilaterian-like Traces. Current Biology 18 (18): 1–6.
  8. Reilly, Michael. "Single-celled giant upends early evolution", MSNBC, 2008-11-20. 2008-12-05 அன்று தகவல் பெறப்பட்டது. 
  9. Dunn et al. 2008)."Broad phylogenomic sampling improves resolution of the animal tree of life". Nature 06614.
  10. Ruiz-Trillo, I., Ruiz-Trillo, Iñaki; Riutort, Marta; Littlewood, D. Timothy J.; Herniou, Elisabeth A.; Baguñà, Jaume (March 1999). Acoel Flatworms: Earliest Extant Bilaterian Metazoans, Not Members of Platyhelminthes. Science 283 (5409): 1919–1923.
  11. Todaro, Antonio. "Gastrotricha: Overview". Gastrotricha: World Portal. University of Modena & Reggio Emilia. பார்க்கப்பட்ட நாள் 2008-01-26.
  12. Kristensen, Reinhardt Møbjerg (July 2002). An Introduction to Loricifera, Cycliophora, and Micrognathozoa. Integrative and Comparative Biology 42 (3): 641–651.
  13. "Biodiversity: Mollusca". The Scottish Association for Marine Science. பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
  14. Russell, Bruce J. (Writer), Denning, David (Writer). (2000). Branches on the Tree of Life: Annelids [VHS]. BioMEDIA ASSOCIATES.
  15. Eernisse, Douglas J., Eernisse, Douglas J.; Albert, James S.; Anderson , Frank E. (1992). Annelida and Arthropoda are not sister taxa: A phylogenetic analysis of spiralean metazoan morphology. Systematic Biology 41 (3): 305–330.
  16. Eernisse, Douglas J., Kim, Chang Bae; Moon, Seung Yeo; Gelder, Stuart R.; Kim, Won (September 1996). Phylogenetic Relationships of Annelids, Molluscs, and Arthropods Evidenced from Molecules and Morphology. Journal of Molecular Evolution 43 (3): 207–215.
  17. [|Collins, Allen G.] (1995), The Lophophore, University of California Museum of Paleontology, http://www.ucmp.berkeley.edu/glossary/gloss7/lophophore.html 
  18. Adoutte, A., Adoutte, André; Balavoine, Guillaume; Lartillot, Nicolas; Lespinet, Olivier; Prud'homme, Benjamin; de Rosa, Renaud (April, 25 2000). The new animal phylogeny: Reliability and implications. Proceedings of the National Academy of Sciences 97 (9): 4453–4456.
  19. Passamaneck, Yale J. (2003), "Woods Hole Oceanographic Institution", Molecular Phylogenetics of the Metazoan Clade Lophotrochozoa, pp. 124, http://handle.dtic.mil/100.2/ADA417356 
  20. Adoutte, A., Sundberg, Per; Turbevilleb, J. M.; Lindha, Susanne (September 2001). Phylogenetic relationships among higher nemertean (Nemertea) taxa inferred from 18S rDNA sequences. Molecular Phylogenetics and Evolution 20 (3): 327–334.
  21. , Boore, Jeffrey L.; Staton, Joseph L (February 2002). The mitochondrial genome of the Sipunculid Phascolopsis gouldii supports its association with Annelida rather than Mollusca. Molecular Biology and Evolution 19 (2): 127–137.
  22. Nielsen, Claus (April 2001). Bryozoa (Ectoprocta: ‘Moss’ Animals). Encyclopedia of Life Sciences.
  23. N.H. Putnam, et al. (July 2007). Sea anemone genome reveals ancestral eumetazoan gene repertoire and genomic organization. Science 317 (5834): 86–94.
  24. Wang, X., Wang, Xiujuan; Lavrov Dennis V. (2006-10-27). Mitochondrial Genome of the Homoscleromorph Oscarella carmela (Porifera, Demospongiae) Reveals Unexpected Complexity in the Common Ancestor of Sponges and Other Animals. Molecular Biology and Evolution 24 (2): 363–373.


[தொகு] நூற்பட்டி


[தொகு] புற இணைப்புகள்

விலங்கு பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

Wiktionary-logo-en.png விக்சனரி விக்சனரி
Wikibooks-logo.svg நூல்கள் விக்கி நூல்
Wikiquote-logo.svg மேற்கோள்கள் விக்கிமேற்கோள்
Wikisource-logo.svg மூலங்கள் விக்கி மூலம்
Commons-logo.svg படிமங்கள் காமன்ஸ்
Wikinews-logo.png செய்திகள் விக்கி செய்திகள்


வார்ப்புரு:Life வார்ப்புரு:Animalia வார்ப்புரு:Nature nav

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்