மனிதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மனிதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மனிதர்[1]
புதைப்படிவ காலம்: .2–0 Ma
Pleistocene - Recent
மனிதர்கள் பயனீர் பிளேக் சித்தரிக்கப்பட்டுள்ளன
மனிதர்கள் பயனீர் பிளேக் சித்தரிக்கப்பட்டுள்ளன
காப்பு நிலை
Not rated
உயிரியல் வகைப்பாடு
உலகம்: இயுக்கரியோட்டா
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: கோடாட்டா
வகுப்பு Mammalia
வரிசை: Primates
குடும்பம்: Hominidae
பேரினம்: Homo
இனம்: H. sapiens
சிற்றினம்: H. s. sapiens
முச்சொற்பெயர்
Homo sapiens sapiens
Linnaeus, 1758

மனிதர் இருகால் உயர் விலங்கினத்தைச் சேர்ந்த, ஹொமினிடீ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இனமாகும். மரபணுச் சான்றுகளின்படி தற்கால மனிதன் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கு மிகவும் வளர்ச்சியடைந்த மூளை உண்டு. இது, பண்பியல் பகுப்பாய்வு (abstract reasoning), மொழி, உண்முக ஆய்வு, பிரச்சைனைகளைத் தீர்த்தல், உணர்வுகள் போன்றவற்றைக் கையாளக்கூடிய வல்லமை கொண்டது. இத்தகைய வல்லமை கொண்ட மூளையும், நிமிர்ந்த உடலும் மனித வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. நிமிர்ந்த உடலினால் முன்னுறுப்புக்கள் (கைகள்) இரண்டும், வேறு வேலைகளைச் செய்வதற்குக் கிடைத்தன. இதனால் மனிதர்கள், கருவிகளை வேறெந்த உயிரினத்தைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்தக் கூடியதாக அமைந்தது. மனிதர்கள் உலகம் முழுதும் பரந்து உள்ளனர். அன்டார்க்டிக்கா தவிர்ந்த ஏனைய எல்லாக் கண்டங்களிலும் மனிதர் பெருந் தொகையாக வாழ்கின்றனர். ஜூலை 2008 நிலைப்படி, 6.7 பில்லியனுக்கு மேற்பட்டதொகையில் மனிதர்கள் உலகில் வாழ்கின்றனர். மனிதரில், ஹோமோ சப்பியென்ஸ் சப்பியென்ஸ் என்னும் ஒரு துணையினம் மட்டுமே உள்ளது.

பெரும்பாலான உயர்நிலை உயிரினங்களைப் போலவே, மனிதனும் ஒரு சமூக விலங்கு. மனிதர் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கும், தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளல் என்பவற்றுக்காகவும் தொடர்பு முறைகளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்கள் பல சிக்கலான சமூக அமைப்புக்களை உருவாக்கியுள்ளனர். இவற்றுள் குடும்பங்கள் தொடக்கம் நாடுகள் வரையான அமைப்புக்கள் அடங்குகின்றன. மனிதர்களிடையேயான சமூகத் தொடர்புகள், பெருமளவுக்கு வேறுபடுகின்ற, மரபுகள், சடங்குகள், நெறிமுறைகள், விழுமியங்கள், சமூக நெறிகள், சட்டங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளன.

[தொகு] குறிப்புக்கள்

  1. Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100795. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=மனிதர்&oldid=1125682" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்