ஓர்டோவிசியக் காலம்
| ஓர்டோவிசியக் காலம் 488.3 - 443.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் |
|
| சராசரி வளிமண்டல O2 அளவு | ca. 13.5 % கனவளவு [1] (68 % of modern level) |
| சராசரி வளிமண்டல CO2 அளவு | ca. 4200 ppm[2] (15 times pre-industrial level) |
| சராசரி தரை வெப்பநிலை | ca. 16 °C [3] (2 °C above modern level) |
| கடல் மட்டம் (தற்போதைய கடல் மட்டத்துக்கு மேல்) | 180m; rising to 220m in Caradoc and falling sharply to 140m in end-Ordovician glaciations[4] |
| வார்ப்புரு:ஓர்டோவிசியக் காலம் காலக்கோட்டுப் படிமம் | |
ஓர்டோவிசியம் அல்லது ஓர்டோவிசியக் காலம் (Ordovician) என்பது 488.3± 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்தொடங்கி 443.7± 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வரையான நிலவியல் காலத்தையும் அதன் முறைமையையும் குறிக்கும். பேலியோசொயிக்கு ஊழியின் 6 காலங்களில் 2வது காலமான ஓர்டோவிசியக் காலம் கேம்பிரியக் காலத்தின் முடிவிலிருந்து சிலுரியக் காலத்தின் தொடக்கம் வரையான காலத்தைக் குறிக்கிறது.ஓர்டோவிசியக் காலம் வேல்சிய பழங்குடியினரான ஓர்டோவின்சியர்கள் நினைவாக இடப்பட்டது. அடம் செட்ச்விக், றொட்ரிக் முரிச்சன் என்ற இரு நிலவியலாளர்களது மாணாக்கர்கள் வடக்கு வேல்சில் உள்ள ஒரு பாறைப் படிவுகளை ஒரு சாரார் கேம்பிரியக் காலத்திற்கும் ஒரு சாரார் சிலுரியக் காலத்திற்கும் உரியதாக கருதி தர்கத்தில் ஈடுபட்டிருநதனர். இத்தர்க்கத்தை நிவர்த்தி செய்யும்வகையில் இப்பெயர் 1879 ஆம் ஆண்டு சார்ல்ஸ் லெப்வேர்த் என்ற இங்கிலாந்து நிலவியலாளரால் இடப்பட்டது. சர்ச்சைக்குரிய பாறைப்படிவுகளில் காணப்ப்ட்ட விலங்குகளின் தொல்லுயிர் எச்சங்களை அவதானித்த லெப்வேர்த் அவை கேம்பிரியக் காலத்துக்கோ அல்லது சிலுரியக் காலத்துக்கோ உரியவை அல்ல என்பதை கணிப்பிட்டு அவற்றைத் தனியான ஒரு காலத்தில் இட்டார்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Image:Sauerstoffgehalt-1000mj.svg
- ↑ Image:Phanerozoic Carbon Dioxide.png
- ↑ en:Image:All palaeotemps.png
- ↑ Haq, B. U. (2008). "A Chronology of Paleozoic Sea-Level Changes". Science 322: 64-68. doi:10.1126/science.1161648.
வெளியிணைப்புகள் [தொகு]
- Ogg, Jim (June, 2004). "Overview of Global Boundary Stratotype Sections and Points (GSSP's)". பார்த்த நாள் 2006-04-30.
- Mehrtens, Charlotte. "Chazy Reef at Isle La Motte". An Ordovician reef in Vermont.
- Examples of Ordovician Fossils
- Ordovician fossils of the famous Cincinnatian Group
- The Dry Dredgers, an active group of amateur paleontologists in the Cincinnati area
| விக்கி ஊடக நடுவத்தில் Ordovician தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
| பேலியோசொயிக்கு ஊழி | |||||
|---|---|---|---|---|---|
| கேம்பிரியம் | ஓர்டோவிசியம் | சிலுரியம் | டெவோனியம் | கார்பனிபெரசு | பேர்மியம் |