காப்பு நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காப்பு நிலை ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆயப்படுகின்றன. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் அவற்றின் இனத்தொகையின் வளர்ச்சி அல்லது தளர்ச்சி, இனப்பெருக்க வீதம், தெரிந்த ஆபத்துகள் என்பவையும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

[தொகு] உலக அமைப்புகள்

உலக அளவில் இனங்களின் காப்பு நிலையை பட்டியலிட்டு வரிசைப்படுத்துவதில் முதன்மை அமைப்பாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் விளங்குகின்றது. இவ்வமைப்பினால் காப்புநிலையை குறித்து வெளியிடப்பட்ட பட்டியல் IUCN சிவப்புப் பட்டியல் எனப்படுகின்றது. இந்த காப்புநிலைப் பட்டியலில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இனங்கள், மூன்று நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன:மிக அருகிய இனம் (CR), அருகிய இனம் (EN), அழிவாய்ப்பு இனம் (VU).
தவிர கிபி 1500 இலிருந்து இனஅழிவு காரணமாக அழிவடைந்த இனங்களும் இங்கே அழிந்த அற்றுவிட்ட இனங்கள், இயலிடத்தில் அற்றுவிட்ட இனங்கள் என ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

அருகிய வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்களில் பன்னாட்டு வணிகத்திற்கான பேரவை (CITES) பன்னாட்டு வணிகத்தின் வழியே இவ்வினங்கள் அழியாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்குடன் செயல்படுகிறது.

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=காப்பு_நிலை&oldid=1014238" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்