அருகிய இனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
IUCN வகைப்படுத்தலின்படி "அருகிய இனம்" என அடையாளப்படுத்தப்படும் வரைவு
புலி இனத்தின் துணை இனங்களில் ஒன்றான சைபீரியப் புலி இனம் அருகிய எல்லையில் உள்ள இனமாகும். புலி இனத்தின் மூன்று துணை இனங்கள் முற்றாகவே அழிந்துவிட்டன.[1]

அருகிய இனம் (EN - Endangered species) என்பது, எண்ணிக்கைக் குறைவினாலோ, சூழல் மற்றும் இரைகொல்லல் தொடர்பான மாற்றங்களினாலோ, முற்றாக இல்லாது போய்விடக்கூடிய தீவாய்ப்புக் கொண்ட உயிரினத்தைக் குறிக்கிறது. பொதுவாக இங்கு குறிப்பிடப்படும் இனம் என்பது அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையிலான இனம் (species) ஆகும். ஆனால் கூர்ப்பு அடிப்படையில் குறிப்பிடத்தக்க வேறு அலகுகளையும் குறிப்பிடக்கூடும். 2006 ஆம் ஆண்டில், பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (International Union for Conservation of Nature or World Conservation Union) என்னும் அமைப்பானது உலகின் அருகிய இனங்கள், மொத்த உயிரினங்களில் 40% எனக் கணித்துள்ளது. அத்துடன் இவ்வகையாக அருகி வரும் இனங்கள் மேலும் எண்ணிக்கையில் குறைந்து இன அழிவுகள் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் இயற்கை மூலவளங்களைப் பாதுகாப்பதிலும் இவ்வமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பல நாடுகள் அருகிய இனங்களைக் காப்பதற்காக சட்டங்களை இயற்றியுள்ளன. வேட்டையாடுதலைத் தடை செய்தல், குறிப்பிட்ட பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களைக் கட்டுப்படுத்துதல், காப்பகங்களை அமைத்தல் போன்றவை இத்தகைய நடவடிக்கைகளுள் அடங்கும். அருகிய இனங்களில் மிகச்சிலவே இத்தகைய சட்டப் பாதுகாப்புக்களைப் பெறுகின்றன. ஏனையவை உரியவர்களின் கவனத்தைப் பெறாமல் முற்றாகவே அழிந்து விடுகின்றன அல்லது நிச்சயமாக அழிந்துவிடக்கூடிய நிலையை அடைகின்றன.

குறிப்புகள் [தொகு]

  1. சண்டர்பான்ஸ் புலிகள் திட்டம். புலிகளின் அழிவுநிலைத் தகவல்கள் இணையத் தளத்தின் புலிகள் பகுதியில் காணப்படுகின்றன.
"http://ta.wikipedia.org/w/index.php?title=அருகிய_இனம்&oldid=1351536" இருந்து மீள்விக்கப்பட்டது