மிக அருகிய இனம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் வழங்கப்படும் சிவப்புப் பட்டியலில் வாழிடத்தில் மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளான, அல்லது அதிக சூழ் இடர் கொண்ட இனமாக அடையாளப்படுத்தப்படும் இனமே மிக அருகிவிட்ட இனம் (CR - Critically endangered) ஆகும். ஒரு உயிர்வாழும் இனத்திற்கு வழங்கப்படும் காப்பு நிலைகளில் ஒன்றாகும்.
மூன்று சந்ததிகளில் இனத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 80% ஆக குறைந்திருப்பின், அல்லது குறைவதற்கான சாத்தியம் அதிகரித்திருப்பின், அவை மிக அருகிவிட்ட இனமாகக் கொள்ளபடும். குறிப்பிட்ட இனத்தில் பரந்த அளவிலான, இலக்கு வைத்த மதிப்பீடு நடத்தப்படாத வரை ஒரு இனத்தை 'அற்றுவிட்ட இனமாக' சிவப்புப் பட்டியலில் குறிப்பிடுவதில்லை. ஆனாலும் மிக அருகிவிட்ட இனங்கள் பட்டியலில் இருக்கும் சில இனங்கள், 'அற்றுவிட்ட இனமாக இருக்கக்கூடிய சாத்தியமுடையவை'.
| காப்பு நிலை |
|---|
| அழிந்து போவதற்கான சூழ் இடரின் அடிப்படையில் |
| இன அழிவு (Extinction) |
| அற்றுவிட்ட இனம் (EX) இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் (EW) |
| இன அச்சுறுத்தல் (Threatened) |
| மிக அருகிய இனம் (CR) அருகிய இனம் (EN) அழிவாய்ப்பு இனம் (VU) |
| குறைந்த சூழ் இடர் (At Low risk) |
| காப்பு சார்ந்த இனம் (CD) அச்சுறு நிலையை அண்மித்த இனம் (NT) தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (LC) |
|
இதனையும் பார்க்க சிவப்புப் பட்டியல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் |