மரபணு
|
This stylistic diagram shows a gene in relation to the double helix structure of DNA and to a chromosome (right). The chromosome is X-shaped because it is dividing. Introns are regions often found in eukaryote genes that are removed in the splicing process (after the DNA is transcribed into RNA): Only the exons encode the protein. This diagram labels a region of only 50 or so bases as a gene. In reality, most genes are hundreds of times larger.
|
மரபணு (gene) என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக் குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்குக் மரபணுக்கள் கடத்தப்படுகின்றன.
உடலுக்கும் உயிர்வாழவும் தேவையான அனைத்துப் புரதங்களையும், தொழிற்பாடுடைய ஆர்.என்.ஏ யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இவை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம்.