பாலூட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாலூட்டி புதைப்படிவ காலம்: 220–0 Ma திராசிக் முதல் தற்போது வரை |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| Clades | ||||||||||||||||
|
மான் ஒரு பாலூட்டி விலங்காகும்.
பாலூட்டி (இலங்கை வழக்கு: முலையூட்டி) என்பது தமது குட்டிக்கு பால் கொடுக்கின்ற வெப்ப இரத்த விலங்குகள் அனைத்தையும் குறிக்கும். இவை உயிர் வாழ்வதற்குத் தேவையான வெப்பம் இவற்றின் உடலின் இயக்கத்தில் இருந்தே உருவாக்கப்படுகிறது. பாலூட்டிகள் தங்களின் தோலினுள் பால் சுரப்பிகளைக் கொண்டுள்ளன.
பெரும்பாலான பாலூட்டிகள் உயிருள்ள குட்டிகளை ஈனுகின்றன. மிகச்சில முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. பெரும்பாலான பாலூட்டிகள் நான்கு கால்களையும் தோலின் மீது முடியையும் கொண்டிருக்கின்றன.
பாலூட்டிகள் என்னும் வகுப்பில் இன்று உலகில் ஏறத்தாழ 5400 உயிரினங்கள், 1,200 பேரினங்களில், 153 குடும்பங்களாக தொகுக்கப்பெற்று அவை 29 வரிசைகளில் அடங்குவதாக அமைந்துள்ளன[1] .
[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்