இரட்டைப்படைக் குளம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரட்டைப்படைக் குளம்பி
புதைப்படிவ காலம்: வார்ப்புரு:Fossil range/SandboxEarly Eocene - அண்மை
Fighting giraffes (Giraffa camelopardalis) in Ithala Game Reserve, Northern KwaZulu Natal, South Africa.
Fighting giraffes (Giraffa camelopardalis) in Ithala Game Reserve, Northern KwaZulu Natal, South Africa.
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்குகள்
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு பாலூட்டிகள்
உள்வகுப்பு: Eutheria
பெருவரிசை: Laurasiatheria
வரிசை: இரட்டைப்படைக் குளம்பிகள்
(ஆர்ட்டியோடாக்டிலா,Artiodactyla, (பாராஃவைலி, paraphyly)

ஓவன், 1848
குடும்பங்கள்
இன்று வாழும் இரட்டைக்குளம்பிகளின் வலது முன்னங்கால்களின் எலும்பு அமைப்பு. இடமிருந்து வலமாக: பன்றி (இசுசு இசுக்ரோஃவா, Sus scrofa), செம் மான் (செர்வசு எலாஃவசு, Cervus elaphus), ஒட்டகம் (கேமலசு பாக்ட்ரியானசு, Camelus bactrianus). U = முன்கைப் பேரெலும்பு(ulna), R = முன்கை ஆரையெலும்பு(Radius bone), c = cuneiform, l = lunar, s = Scaphoid, u = Unciform, m = Magnum, td = Trapezoid. செம்மறியாடு, ஒட்டகம் ஆகிய விலங்குகளில் இரண்டு விரல்களில் எடையை தாங்கும் நீளமான ஒன்றிணைந்த எலும்பு முழந்தாள் முன்னெலும்பு ஆகும்.


இரட்டைப்படைக் குளம்பிகள் என்பன பாலூட்டி வகுப்பில் இரட்டைப்படை எண்ணிக்கையில் குளம்புகள் உள்ள விலங்குகள் கொண்ட ஒரு வரிசையில் உள்ள விலங்குகளைக் குறிக்கும். இதனை ஆர்ட்டியோடாக்டிலா (Artiodactyla) என்று அறிவியலில் கூறுவர். ஆர்ட்டியோடாக்டிலா என்னும் இவ் ஆங்கிலச் சொல்லை ரிச்சர்டு ஓவன் என்பவர் 1848 இல் அறிமுகப்படுத்தினார். இவ் ஆங்கிலச்சொல், ஆர்ட்டியோசு (αρτιος) = இரட்டைப்படை எண் + டாக்டிலோசு (δακτυλος) = விரல் என்னும் இரு கிரேக்க மொழிச் சொற்களால் ஆன கூட்டுச்சொல். குளம்பு என்பது கால்களின் விரல் எலும்புகள் ஒன்றிணைந்த உடல் அமைப்பு. குளம்புள்ள விலங்குகளைக் குளம்பிகள் என்று அழைப்பர். குளம்புள்ள விலங்குகளை ஆங்கிலத்தில் அங்குலேட் (ungulate) என்கின்றனர். அங்குலேட் என்னும் சொல் குளம்பு என்று பொருள் படும் அங்குலா (ungula) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து பெற்றது. இது 1802 ஆம் ஆண்டில் இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் உள்ளது[1]. இவ் உயிரின வரிசையில் பன்றிகள், நீர்யானைகள், ஒட்டகங்கள், மான்கள், ஒட்டகச்சிவிங்கிகள், ஆடு மாடுகள் போன்ற விலங்குகள் அடங்கும். இவ்விலங்குகளின் உடல் எடை இரட்டைப்படை எண்ணிக்கையில் உள்ள குளம்புகளின் மீது சீராக (ஏறத்தாழ சரி ஈடாக) விழுகின்றது. மூன்றாவது நான்காவது ஒன்றிய விரல்கள் இருந்தால் அவை மீதும் ஈடான எடை விழுகின்றது. ஆனால் ஒற்றைப்படைக் குளம்பிகளில் (பெரிசோடாக்டில்களில், perissodactyls) பெரும்பாலான எடை மூன்றாவது விரலில் விழுகின்றது. இரட்டைப்படைக் குளம்பிகளின் ஒரு சிறப்பு அமைப்பு, அதன் கணுக்கால் மூட்டுக்குக் கீழே உள்ள கணுக்கால் எலும்பின் (Talus, டாலசு எலும்பு) அமைப்பு ஆகும். இது இரட்டைக் கப்பி அமைப்பு கொண்டிருப்பதால் பாதத்திற்கு இசைந்து கொடுக்கும் தன்மை அதிகம் (உவைமை கூடுதல்). [2]

உலகில் ஏறத்தாழ 220 இரட்டைப்படைக் குளம்பு உயிரினங்கள் உள்ளன. இவற்றுள் பலவும் மாந்தர்களின் பண்பாடு, வளர்ச்சி, நல்வாழ்வுக்கு மிக இன்றியமையாதவை.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

  1. ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, OED, "ungulate"
  2. Savage, R. J. G. & Long, M. R. (1986). Mammal Evolution: an illustrated guide. New York: Facts on File. பக். 208. ISBN 0-8160-1194-X. 
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்